மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: உள்ளூர் முதல் உலகம் வரை... கடந்த 24 மணி நேரத்தில் நடந்தது என்ன? .. காலை 7 மணி தலைப்புச் செய்திகள்..!
7 AM Headlines: கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.
தமிழ்நாடு:
- சட்டப்பேரவை விவகாரத்தில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவை தி.மு.க. குழுவினர் சந்தித்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம் - குடியரசுத்தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சரை சந்திப்பார் என தகவல்
- தமிழ்நாட்டை காக்கக்கூடிய லட்சியவாதிகள் ‘மாணவர்கள்’ தான் - கலைத்திருவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
- சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்தக்கோரி சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம் - திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
- சேது சமுத்திர திட்டத்திற்கு தமிழ்நாடு பா.ஜ.க. கட்சி ஆதரவு - ராமர் பாலத்திற்கு சேதம் ஏற்படாமல் திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை
- தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம் - பாரம்பரிய உடை அணிந்து, கலை நிகழ்வுகளுடன் கொண்டாட்டம்
- ஆளுநர் மாளிகையில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் நடந்த பொங்கல் விழாவை தி.மு.க. புறக்கணிப்பு - அ.தி.மு.க., பா.ஜ.க. கட்சியினர் பங்கேற்பு
- ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பொங்கல் விழா ஒரு சிறிய தமிழ்நாடு போல இருந்ததாக ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
- ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ஒரே மேடையில் அமரவைத்து உபசரிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம்
- தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அறிவுரை வழங்குமாறு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் - மக்களாட்சியின் முக்கிய அமைப்புகள் இடையே சுமூக உறவுகள் இருக்க வேண்டும் என வலியுறுத்தல்
- தமிழ்நாடு கூட்டுறவு வங்கியை ஹேக் செய்து ரூ.2.61 கோடி மோசடி - நைஜீரிய நாட்டைச் சேர்ந்த இருவர் கைது
- நகர பேருந்துகள் அனைத்திலும் பெண்கள் இலவசமாக பயணிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
இந்தியா:
- பீகாரில் ஆளும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் யாதவ் மரணம் - அரசியல் தலைவர்கள் அஞ்சலி
- ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக்கோரிய வழக்கு - மத்திய அரசு பதில் தர பிப்ரவரி முதல் வாரம் வரை அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவு
- இளைஞர்களின் சக்தி தான் இந்தியாவின் வழிகாட்டியாக உள்ளதாக கர்நாடகாவில் நடந்த தேசிய இளைஞர் தின விழாவில் பிரதமர் மோடி உரை
- பாஸ்மதி அரிசியில் செயற்கை நிறமூட்டிகள், பட்டை தீட்ட தடை - உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உத்தரவு
- கேரளாவில் பறவைக்காய்ச்சல் பரவல் கண்டுபிடிப்பு - தடுப்பு நடவடிக்கைகள் மாநில சுகாதாரத்துறை தீவிரம்
- கர்நாடகத்தில் ஆட்சிக்கு வந்தால் இலவச மின்சார திட்டத்தை காங்கிரஸ் கட்சி அமல்படுத்தாது - முதலமைச்சர் பசவராஜ் பொம்மை பேச்சு
உலகம்:
- தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கும் கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 1 ஆம் தேதி லண்டனில் 1 லட்சம் ஊழியர்கள் வேலை நிறுத்தம்
- விமானங்களை வாங்குவதில் ஏற்பட்ட தாமதத்தால் அமைச்சர்களிடம் கடுமையாக நடந்து கொண்ட ரஷ்ய அதிபர் புடின் - எதற்காக ஏமாற்றுகிறீர்கள் என அமைச்சரவை கூட்டத்தில் கண்டிப்பு
- மாலியில் நடைபெற்ற ராணுவ தாக்குதலில் 30 பயங்கரவாதிகள் பலி - 14 ராணுவ வீரர்களும் உயிரிழப்பு
- நீண்ட தூர விமான பயணிகளுக்கு முகக்கவசம் அவசியம் என உலக சுகாதார அமைப்பு பரிந்துரை
விளையாட்டு:
- இலங்கை அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது
- 16 அணிகள் பங்கேற்கும் உலகக் கோப்பை ஆக்கி போட்டி ஒடிசாவில் இன்று தொடக்கம் - முதல் நாளில் இந்தியா -ஸ்பெயின், இங்கிலாந்து -வேல்ஸ், அர்ஜென்டினா-தென்னாப்பிரிக்கா , ஆஸ்திரேலியா - பிரான்ஸ் அணிகள் மோதல்
- இந்தியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான நியூசிலாந்து கேப்டனாக சான்ட்னர் நியமனம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
திரை விமர்சனம்
பொழுதுபோக்கு
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion