மேலும் அறிய

Video: சேலத்தில் குடிபோதையில் வண்டி ஓட்டியதாக காவல்துறையினர் அபராதம்; இளைஞர் தீக்குளிப்பு.

உடலில் 80 சதவீத காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சந்தோஷ் குமார் சிகிச்சை பெற்று வருகிறார்.

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த திமுக பகுதி செயலாளர் மகன் சந்தோஷ் குமார். ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு புதிதாக சரக்கு வாகனம் ஒன்று வாங்கி உள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு கொண்டலாம்பட்டி ரவுண்டானா பகுதி போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

Video: சேலத்தில் குடிபோதையில் வண்டி ஓட்டியதாக காவல்துறையினர் அபராதம்; இளைஞர் தீக்குளிப்பு.

அப்போது அவ்வழியாக வந்த சந்தோஷ் குமார் மது போதையில் மினி ஆட்டோவில் வந்ததாக தெரிகிறது. அப்போது போக்குவரத்து காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தபோது மது போதையில் இருப்பதை உறுதி செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். அப்போது மதுபோதையில் நடந்து சென்று அருகில் இருந்த பெட்ரோல் பங்கில் பெட்ரோல் ஒரு லிட்டர் வாங்கி வந்துள்ளார். பின்னர் கொண்டலம்பட்டி ரவுண்டானா பகுதி சந்தோஷ் குமார் ஊற்றிக்கொண்டு தீ பற்றவைத்துக்கொண்டுள்ளார் என காவல்துறையினர் கூறினர். இதனைப் பார்த்த காவல்துறையின் உடனே விரைந்து வந்து அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடலில் 80 சதவீத காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சந்தோஷ் குமார் சிகிச்சை பெற்று வருகிறார். 

இதுகுறித்து விசாரித்தபோது சந்தோஷ் குமார் நேற்று காலை புதிதாக சரக்கு வாகனம் வாங்கியதற்காக நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். குறைந்த அளவு மது மட்டுமே கொடுத்திருந்த சந்தோஷ்குமார் போதையில் இருந்து தெளிந்த பின் வாகனத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக கொண்டலாம்பட்டி அரசு மதுபான கடைக்கு அருகில் உள்ள ஸ்டிக்கர் கடையில் நின்று கொண்டிருந்த போது அங்கிருந்து நோக்கத்தோடு தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அவர்கள் குடிபோதையில் வண்டி ஓட்டியதாக சந்தோஷ் குமாரை காவல்துறையிடம் கூறிச் சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த காவல்துறையினர் வாகனத்தை பறிமுதல் செய்தனர். பின்னர், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக கூடி 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உள்ளனர். இந்த நிலையில் காவல் துறையினருக்கும் சந்தோஷ்குமாரின் ஏற்பட்ட வாக்குவாதத்தில் விரக்தியடைந்த சந்தோஷ் குமார் தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்துள்ளது. வாலிபர் தீக்குளிப்பு சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay Speech: ”மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் ஸ்டாலின் அவர்களே”விட்டு விளாசிய தவெக தலைவர் விஜய் - அனல் பறந்த பேச்சு
TVK Vijay Speech: ”மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் ஸ்டாலின் அவர்களே”விட்டு விளாசிய தவெக தலைவர் விஜய் - அனல் பறந்த பேச்சு
Udhayanidhi: ”டெல்லியில் 3 கார் ஏறிய எடப்பாடி” - விளையாட்டு வீரர்களுக்கு காப்பீடு - DY CM உதயநிதி அறிவிப்பு
Udhayanidhi: ”டெல்லியில் 3 கார் ஏறிய எடப்பாடி” - விளையாட்டு வீரர்களுக்கு காப்பீடு - DY CM உதயநிதி அறிவிப்பு
Gold Rate New Peak: அடித்து துவைக்கும் தங்கம் விலை.. ஒரே நாளில் இவ்வளவு உயர்வா.? இன்று புதிய உச்சம்...
அடித்து துவைக்கும் தங்கம் விலை.. ஒரே நாளில் இவ்வளவு உயர்வா.? இன்று புதிய உச்சம்...
MGNREGS Wages: 100 நாள் வேலை திட்டம்..! ஊதியத்தை ரூ.400 ஆக உயர்த்திய மத்திய அரசு, தமிழர்களுக்கு எவ்வளவு தெரியுமா?
MGNREGS Wages: 100 நாள் வேலை திட்டம்..! ஊதியத்தை ரூ.400 ஆக உயர்த்திய மத்திய அரசு, தமிழர்களுக்கு எவ்வளவு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Women Issue | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்Coimbatore | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்Vijay vs Udhayanidhi : ஜனநாயகன் vs பராசக்தி விஜய்யுடன் மோதும் உதயநிதி! அரசியல் ஆயுதமான சினிமாEPS meets Amit shah | ஆட்சியில் பங்கு கேட்ட பாஜக கறார் காட்டிய இபிஎஸ் அ.மலைக்கு துணை முதல்வர்? ADMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay Speech: ”மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் ஸ்டாலின் அவர்களே”விட்டு விளாசிய தவெக தலைவர் விஜய் - அனல் பறந்த பேச்சு
TVK Vijay Speech: ”மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் ஸ்டாலின் அவர்களே”விட்டு விளாசிய தவெக தலைவர் விஜய் - அனல் பறந்த பேச்சு
Udhayanidhi: ”டெல்லியில் 3 கார் ஏறிய எடப்பாடி” - விளையாட்டு வீரர்களுக்கு காப்பீடு - DY CM உதயநிதி அறிவிப்பு
Udhayanidhi: ”டெல்லியில் 3 கார் ஏறிய எடப்பாடி” - விளையாட்டு வீரர்களுக்கு காப்பீடு - DY CM உதயநிதி அறிவிப்பு
Gold Rate New Peak: அடித்து துவைக்கும் தங்கம் விலை.. ஒரே நாளில் இவ்வளவு உயர்வா.? இன்று புதிய உச்சம்...
அடித்து துவைக்கும் தங்கம் விலை.. ஒரே நாளில் இவ்வளவு உயர்வா.? இன்று புதிய உச்சம்...
MGNREGS Wages: 100 நாள் வேலை திட்டம்..! ஊதியத்தை ரூ.400 ஆக உயர்த்திய மத்திய அரசு, தமிழர்களுக்கு எவ்வளவு தெரியுமா?
MGNREGS Wages: 100 நாள் வேலை திட்டம்..! ஊதியத்தை ரூ.400 ஆக உயர்த்திய மத்திய அரசு, தமிழர்களுக்கு எவ்வளவு தெரியுமா?
TVK Vijay: தவெகவின் முதல் பொதுக்குழு..! விஜய் பேசப்போவது என்ன? மாநில சுற்றுப்பயணம், பூத் கமிட்டி மாநாடு?
TVK Vijay: தவெகவின் முதல் பொதுக்குழு..! விஜய் பேசப்போவது என்ன? மாநில சுற்றுப்பயணம், பூத் கமிட்டி மாநாடு?
Kasampatti BHS: திண்டுக்கல்லுக்கு கிடைத்த பெருமை..! காசம்பட்டி கோயில் காடுகளுக்கு அங்கீகாரம், தமிழகத்தின் 2வது மாவட்டம்
Kasampatti BHS: திண்டுக்கல்லுக்கு கிடைத்த பெருமை..! காசம்பட்டி கோயில் காடுகளுக்கு அங்கீகாரம், தமிழகத்தின் 2வது மாவட்டம்
America Vs Canada: எல்லாம் முடிஞ்சு போச்சு.! இனி நீ யாரோ, நான் யாரோ.. அமெரிக்க உறவை முறித்த கனடா.. ஏன்.?
எல்லாம் முடிஞ்சு போச்சு.! இனி நீ யாரோ, நான் யாரோ.. அமெரிக்க உறவை முறித்த கனடா.. ஏன்.?
CSK vsRCB: தோனியின் சிக்ஸால் வென்ற ஆர்சிபி, பழிவாங்க துடிக்கும் சிஎஸ்கே - இன்று பலப்பரீட்சை, 16 வருட ஏக்கம்..
CSK vsRCB: தோனியின் சிக்ஸால் வென்ற ஆர்சிபி, பழிவாங்க துடிக்கும் சிஎஸ்கே - இன்று பலப்பரீட்சை, 16 வருட ஏக்கம்..
Embed widget