மேலும் அறிய
Advertisement
ஆதரவற்றவர்களை மீட்டு காப்பகத்தில் சேர்த்து வரும் தன்னார்வலர் குடும்பத்தினர் - எங்கு தெரியுமா?
பாலசந்திரன் குடும்பத்துடன் இந்த சேவை செய்து வரும் செயல் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
தருமபுரியை சேர்ந்த பாலசந்திரன் என்பவர் தருமபுரி நகராட்சியில் உள்ள ரோட்டரி தகன மேடையில் மேற்பார்வையாளராக பணிசெய்து வருகிறார். இவர் கொரோனா காலத்தில் இவர் இறந்தவர்களின் 1200 உடல்களை அடக்கம் செய்துள்ளார். இதற்காக இவருக்கு மாவட்ட நிர்வாகம் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கி உள்ளனர். மேலும் இவர் தனியாக மீட்டு குழு என ஒரு அறக்கட்டளை துவக்கி அதன் மூலம் சொந்த செலவில் சாலையோரங்களில் ஆதரவற்றவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை குளிக்க வைத்து பின்னர் தனது காரில் அழைத்து சென்று மருத்துவமனையில் சிகிச்சையளித்த பிறகு அவர்களை ஆதரவற்றவர்கள் இல்லத்தில் ஒப்படைக்கிறார். இந்த மீட்பு பணியில் அவரது மனைவி ஜெர்சி மற்றும் ஈவான்ஸ் ராபர்ட், ஸ்பெஷல் எஸ்லி என்கிற 2 மகன்கள் உதவி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஒகேனக்கல் பகுதியில் பொன்னி என்கிற வயதான மூதாட்டிக்கு உறவினர்களால் கைவிடப்பட்டு வந்த அவர் உடல் நலம் சரியில்லாமல் படுத்த படு்க்கையாக உணவு தண்ணீரியின்றி இயற்கை உபாதைகளை படுக்கையிலேயே கழித்து வந்துள்ளார். இந்நிலையில் மூதாட்டியை அங்கிருந்தவர்கள் யாரும் கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்த்து பரிதாபட்டு சென்றனர். பிறகு அங்கு சுற்றுலா வந்த ஒருவர் பாலசந்திரனுக்கு தகவல் அளித்துள்ளார். பிறகு பாலசந்திரன் தனது காரில் தனது மனைவி மகன்களுடன் வந்து முகம் சுழிக்கமால் மூதாட்டியை எழுப்பி குளிக்க வைத்து, அவரை தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து சிகிச்சை முடிந்த பிறகு மூதாட்டியை காப்பகத்தில் ஒப்படைக்க உள்ளனர். பாலசந்திரன் குடும்பத்துடன் இந்த சேவை செய்து வரும் செயல் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
நாகாவதி அணைப்பகுதியில் பத்தாம் வகுப்பில் சேர்ந்து படித்த 90 கிட்ஸ் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி-கட்டித்தழுவி, அசைவ விருந்துடன் பழைய நினைவுகன் பகிர்ந்த நண்பர்கள்.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே ஏலகிரி அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 2004 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட 90 கிட்ஸ் மாணவர்கள் படித்து வந்தனர். அதன் பின்னர் பலரும் மேற்படிப்பிற்காக சிலர் மற்ற பள்ளிகளுக்கும் மற்றவர்கள் வெளி மாவட்டங்களுக்கும் சென்று விட்டனர். ஒரு சிலர் படிப்பை கைவிட்டுவிட்டு பல்வேறு வேலைகளுக்கும் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் பணிபுரிந்து வருகின்றனர். மேற்படிப்பை தொடர்ந்தவர்களில் பலரும் தற்பொழுது அரசுப் பணியில் பணியாற்றி வருகின்றனர். அப்போது பத்தாம் வகுப்பு பள்ளி பருவத்தில் மாணவர்கள் தங்களுடன் படித்த நண்பர்களுடன் சேர்ந்து ஒரே தட்டில் உணவருந்தியது, ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றியது போன்ற பல்வேறு நினைவுகள் பலராலும் மறக்க முடியாமல் பல ஆண்டுகளாக தன் நண்பர்களை சந்திக்க வேண்டும் என பெரும் ஏக்கத்தில் இருந்துள்ளனர்.
இந்நிலையில் தீபாவளிக்கு அனைவரும் சொந்த ஊர் திரும்பிய நிலையில் 2004 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த 90 கிட்ஸ் மாணவர்கள் அனைவரையும் சந்திக்க வேண்டும் என முடிவெடுத்து அனைவருக்கும் வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பினர். இதற்காக காத்திருந்த நண்பர்கள் அனைவரும் நாகாவதி அணை பகுதியில் தங்கள் நண்பர்களை சந்திக்க ஒன்று திரண்டனர். நீண்ட நாட்கள் கழித்து சந்திக்கும் நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உணவு அருந்த வேண்டும் என்பதற்காக ஸ்பெஷலாக ஆடு, கோழி இறைச்சிகள் நண்பர்களே இணைந்து சமைத்து அனைவருக்கும் விருந்து படைத்தனர். அப்பொழுது நண்பர்கள் ஒருவரை கட்டித்தழுவி மகிழ்ந்தனர். பின்னர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்திய போது, ஒருவருக்கு ஒருவர் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். மீண்டும் அந்தப் பள்ளிப் பருவம் வராதோ என்ற ஏக்கத்தை இன்றைய சந்திப்பு மூலம் நிகழ்ந்ததாக கூறி, மகிழ்ந்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion