![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Salem Corporation Budget: சேலம் மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தொடரில் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு
வெறும் காகித பேப்பராக மட்டுமே உள்ளது. எனவே மக்கள் மீது சுமையை அதிகரிக்கும் விதமாக பட்ஜெட் இருப்பதாக குற்றச்சாட்டு.
![Salem Corporation Budget: சேலம் மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தொடரில் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு AIADMK councilors walk out during Salem Municipal Corporation budget meeting TNN Salem Corporation Budget: சேலம் மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தொடரில் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/06/002a23d8a2896a68ed409c179abc75301680779190029189_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சேலம் மாநகராட்சியின் நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதனை சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 2023-24 ஆம் நிதியாண்டில் மொத்த வருவாய் மற்றும் மூலதன வரவுகள் 786.80 கோடி ஆகும். மூலதன செலவுகள் 788.06 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டு,1.26 கோடி பற்றாக்குறையாக உள்ளது. பற்றாக்குறையில் நிதி ஆதாரங்களை கூடுதலாக பெற்று சிக்கன நடவடிக்கை மேற்கொண்டு ஈடுகட்டப்படும் என மேயர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
இந்த நிலையில் சேலம் மாநகராட்சியில் திமுக பொறுப்பேற்று 14 மாத காலம் ஆகியும் எந்த பணியும் நடைபெறவில்லை. இந்த பட்ஜெட் மக்களின் மீது பணி சுமையை அதிகரிக்கும் விதமாக உள்ளது. இந்த பட்ஜெட் காகித பேப்பராக மட்டுமே உள்ளது என்று கூறி, அதிமுக கவுன்சிலர்கள் மாநகராட்சி பட்ஜெட் கூட்டத் தொடரிலிருந்து வெளிநடப்பு செய்தனர். மேலும் அதிமுக ஆட்சி காலத்தில் சேலம் மாநகராட்சி நிர்வாகம் அனைத்து பணிகளையும் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டது. ஆனால் திமுக ஆட்சி காலத்தில் மாநகராட்சி பட்ஜெட் மக்கள் மீது நிறைவேற்றாதவர்கள் சுமையை அதிகரிக்க விதமாக உள்ளதாக கூறி, தலையின் மீது பட்ஜெட் மனுக்களை வைத்து நூதனமுறையில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுகுறித்து சேலம் மாநகராட்சி மாமன்ற எதிர்க்கட்சித் தலைவர் யாதவ் மூர்த்தி கூறுகையில், "மாநகராட்சி உருவாகி 14 மாதங்கள் ஆகியும் தமிழக முதல்வர் சேலம் மாநகராட்சிக்காக ஒரு ரூபாய் கூட வழங்கப்படவில்லை. சேலம் மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக உள்ள கே.என்.நேரு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் ஆக உள்ளார். ஆனால் இதுவரை சேலம் மாநகராட்சிக்காக ஒரு ரூபாய் கூட பெற்று தரவில்லை. கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டம் தான் இதுவரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சேலம் மாநகராட்சி பட்ஜெட் வெறும் காகித பேப்பராக உள்ளது. மக்களுக்கு தேவையான எந்த திட்டங்களும் மாநகராட்சி பட்ஜெட்டில் இல்லை. சேலம் மாநகராட்சி பட்ஜெட் மக்களை ஏமாற்றும் பட்சமாக உள்ளது. எனவே அதிமுக பட்ஜெட்டை புறக்கணித்து வெளிநடப்பு செய்துள்ளோம் என்றார். சேலம் மாநகராட்சி முழுமையாக திமுக சட்டமன்ற உறுப்பினர் கட்டுப்பாட்டு இயங்கி வருகிறது" என்று கூறினார்.
இதனிடைய சேலம் அறுபதாவது வார்டு கவுன்சிலர் கூறுகையில், "திமுக வார்டுகளில் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. ஆனால் அதிமுக கவுன்சிலர் என்பதால் பணிகளை அரசு அதிகாரிகள் மேற்கொள்ள மறுக்கிறார்கள். இதுகுறித்து கேட்டபோது பணிகளை துவக்கி விடலாம் என்று கூறி காலம் தாழ்த்தி வருகின்றனர்" என்று குற்றம்சாட்டினார். இவ்வாறு இருந்தால் வரும் திங்கட்கிழமை அன்று காந்தி சிலை முன்பாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)