Dharmendra Yadav: ’’நாலு தேர்தல் ஒழுங்கா நடத்தமுடில..நாடு முழுக்க நடத்த போறீங்களா?’’ கிழித்தெடுத்த சமாஜ்வாதி MP
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா அறிமுகம்!
மசோதாவுக்கு காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல், திமுக உள்ளிட்ட கட்சிகளின் மக்களவை உறுப்பினர்கள் எதிர்ப்பு
சமாஜ்வாதி MP தர்மேந்திர யாதவ் கடும் எதிர்ப்பு
இந்த மசோதாவை நான் எதிர்க்கிறேன்
முஸ்லீம்களுக்கு எதிரான மசோதா இது
இரண்டு நாட்களுக்கு முன் நாம் அரசியலமைப்பு பற்றி பேசினோம்
இப்போது கூட்டாட்சிக்கு எதிராக இருக்கிறீர்கள்
இந்த மசோதா நாட்டின் பன்முகத்தன்மை மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்
முழுக்க முழுக்க கூட்டாட்சிக்கு எதிரானது
அம்பேத்கரை விட சிறந்தவர்கள் யாரும் இருக்கமுடியாது
நீங்கள் சர்வாதிகார முறையை கொண்டு வருகிறீர்கள்
ஒரே தேர்தல் ஒரே நாடு என்று சொல்கிறீர்களே
எட்டு சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தலை நடத்த முடியாதவர்கள் நீங்கள்
வானிலையை காரணம் காட்டி தேர்தலை மாற்றியவர்களால் இது எப்படி முடியும்?
எனது தலைவர் அகிலேஷ் யாதவ் சார்பில் இந்த மசோதாவை எதிர்க்கிறேன்.
நான்கு மாநிலங்களுக்கே ஒரே நேரத்தில் உங்களால் தேர்தல் நடத்த முடியவில்லை
ஆனால் மக்களவை மற்றும் சட்டப் பேரவைகளுக்கு தேர்தல் நடத்த விரும்புகிறீர்கள்
ஏதேனும் ஒரு மாநிலத்தில் ஆட்சி கவிழ்ந்தால், நாடு முழுவதும் மீண்டும் தேர்தல் வருமா?
குறிப்பிட்ட மாநிலத்திற்காக ஏன் மற்றவர்கள் பாதிக்கப்பட வேண்டும்
இந்த மசோதா ஏழை, தலித், அரசியலமைப்பு, பிற்படுத்தப்பட்டோர், முஸ்லீம்களுக்கு எதிரானது