மேலும் அறிய
A Rasa: மோடிக்கு பாடம் கற்பிக்கும் தகுதியுள்ள ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின் - முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா
பாஜக அரசு நாடாளுமன்றத்தில் மக்களுக்கு எதிராக கொண்டுவந்த சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய ஒரே முதல்வர் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் மட்டும் தான்

தி.மு.க. எம்.பி ஆ.ராசா
மதச்சார்பற்ற ஜனநாயக நாடான இந்தியாவை மதவாத நாடாக தாழ்த்தப்பட்டவர்களை ஒடுக்குகிற நாடாக மாற்ற துடிக்கும் மோடிக்கு பாடம் கற்பிக்கவும் இந்திய அரசியல் அமைப்பை, தேசத்தை காப்பாற்ற ஒரே தகுதி உள்ள தலைவர் தமிழக முதல்வர் மட்டும் தான். அவரை வாழ்த்துவோம் திமுக துணை பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆராசா பேசியுள்ளார்.
முதலமைச்சர் பிறந்தநாள் விழா:
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் நகர திமுக சார்பில் நகர மன்ற தலைவரும் நகர செயலாளர் சத்தியமூர்த்தி தலைமையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தாமோ அன்பரசன், திமுக துணைப் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

2வது இடத்திற்கு கொண்டு வந்தவர் பிரதமர் மோடி:
அப்போது, அவர் பேசியதாவது, "நாட்டு மக்கள் எல்ஐசி பாரத ஸ்டேட் வங்கிகளில் முதலீடு செய்துள்ள பணத்தை பிரதமர் மோடியின் துணையுடன் கடனாக பெற்றுக் கொண்டு நாட்டில் உள்ள அனைத்து பொது நிறுவனங்களையும் அதானிக்கு சொந்தமாக்கி வெளிநாடுகளுக்குச் சென்று பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட உதவி புரிந்து அதன்மூலம் உலக அளவில் 30 வது இடத்தில் இருந்த அதானியை இரண்டாவது இடத்திற்கு கொண்டு வந்தார் பிரதமர் மோடி.
இந்த முறைகேடுகள் மூலம் அதானி தற்போது முதலீடு செய்த நிறுவனங்கள் 10 லட்சம் கோடி அளவுக்கு இழப்பை சந்தித்துள்ளதாகவும் மீண்டும் அதானி உலக அளவில் பணக்காரர்கள் வரிசையில் 36 வது இடத்திற்கு சரிந்துள்ளதாகவும் இதனால் இந்திய பங்குச்சந்தை வீழ்ச்சி அடைந்து, இந்திய பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படும் நிலையில் வெளிநாட்டு பத்திரிகை ஹின்டன்பெர்க் திட்டமிட்டு நாட்டு மக்களின் பணத்தை கடனாக பெற்று முறைகேடுகள் மூலம் இழப்பு ஏற்பட்டதாக பிம்பத்தை ஏற்படுத்தி கொள்ளையடித்துள்ள அதானி குற்றவாளி என்று கூறுகிறது.
பிரதமர் மோடியும் குற்றவாளியே:
அதானி குற்றவாளி திருடன் என்றால் அதானி பல்வேறு வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று ஒப்பந்தங்களில் கையெழுத்திட செய்த நாட்டின் பிரதமர் மோடியும் குற்றவாளி தான் இதை தைரியமாக நாடாளுமன்றத்திலும் மக்கள் மத்தியிலும் எடுத்துச் சொல்லும் ஒரே முதல்வர் திராவிட மாடல் ஆட்சி செய்யும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மட்டும்தான் என்றும்

மோடிக்கு பாடம்:
பாஜக அரசு நாடாளுமன்றத்தில் மக்களுக்கு எதிராக கொண்டுவந்த சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய ஒரே முதல்வர் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் மட்டும் தான் என்றும் , மதச்சார்பற்ற ஜனநாயக நாடான இந்தியாவை மதவாத நாடாக தாழ்த்தப்பட்டவர்களை ஒடுக்குகிற நாடாகவும் சிறுபான்மையின மக்களுக்கு விரோதமான சட்டங்கள் இயற்றி நாட்டை துண்டாட துடிக்கும் மோடிக்கு பாடம் கற்பிக்கவும் இந்திய அரசியல் அமைப்பை, தேசத்தை காப்பாற்ற ஒரே தகுதி உள்ள தலைவர் தமிழக முதல்வர் மட்டும் தான் அவரை வாழ்த்துவோம்" என்று உரையாற்றினார்
இந்த பொது கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி தலைவர் படப்பை மனோகரன் குன்றத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வந்தே மாதரம் மாங்காடு நகர மன்ற துணைத் தலைவர் ஜபருல்லா பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி மற்றும் குன்றத்தூர் நகர திமுக நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion