’இந்தியாவின் கோடான கோடி தொண்டர்களுக்கு சோனியா காந்திதான் தலைவர்’- கே.எஸ்.அழகிரி பேட்டி
இந்தியாவில் கோடான கோடி தொண்டர்களுக்கு சோனியாகாந்திதான் தலைவர்
உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் ராணிப்பேட்டையில் வாக்கு சேகரித்து விட்டு கட்சி சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளுக்கு கலந்து கொள்ள வருகை தந்த காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தர தலைவர் வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபில் தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு கோடாடன கோடி காங்கிரஸ் தொண்டர்களுக்கு சோனியா காந்திதான் தலைவர் என்று தெரிவித்தார். ஒன்றிய அரசு அறிவித்த 12 கோடி மாணவர்களுக்கு மதிய சத்துணவு திட்டம் 10 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மன்மோகன்சிங் பிரதமராக இருந்த போது அறிவிக்கப்பட்ட திட்டம் தான் தற்போது மோடி அரசு 10 ஆண்டுகளுக்கு பிறகு காப்பியடித்து அதே 12 கோடி மாணவர்களுக்கு மதிய சத்துணவு என்று அறிவித்து இருக்கிறது என்றார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சொல்வது போல் பாஜக திட்டங்களை திமுக பேப்பர் ஒட்டி அறிவிக்கின்றன என்றார் ஆனால் நான் சொல்கின்றேன் காங்கிரஸ் அறிவித்த திட்டங்களை 10 ஆண்டு ஆட்சியில் தற்போது பாஜக பேப்பர் ஒட்டி அறிவிக்கின்றனர் என்று அழகிரி தெரிவித்தார். எல்லா பிரதமரும் வெளிநாடு செல்கின்றனர் ஆனால் செய்தி வெளிவருவதில்லை மோடி வெளிநாடு சென்றால் செய்தி பேப்பர் படித்தால் செய்தி கோப்பில் கையெழுத்திட்டார் என்று சுயவிளம்பரம் தேடுகின்றனர்.
பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு மோடி அரசு தான் காரணம் என்றும் மோடி அரசு விதித்த கலால் வரி மற்றும் சுங்க வரியால் தான் தற்போது பெட்ரோல் டீசல் விலை அதிகரித்துள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி ஆரணியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அதனை தொடர்ந்து கட்சி நிர்வாகிகளிடம் வாக்குகள் எப்படி பெறவேண்டும் என்றும் மற்றும் நமது கட்சியின் பெருமைகளை எடுத்துரைத்து காங்கிரஸ் கட்சியில் தொண்டர்களை சேர்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.
H.Raja On CM Stalin : கருணாநிதியை விட ஸ்டாலின் ஆபத்தானவர்.. ட்விட்டர் ஸ்பேசஸில் பேசிய ஹெச்.ராஜா..