மேலும் அறிய

Thalaivii | தலைவி படம்.. ரீலில் வந்தது என்ன? ரியலில் நடந்தது என்ன? முழு அலசல்!

தலைவி ஆன பின்பு என்ன நடக்கிறது என்பதுதான் வரலாறு. அந்தப் பகுதியெல்லாம் வசதியாகத் தவிர்க்கப்பட்டிருக்கிறது

முதல் பகுதியைப் படிக்க >  தலைவி படம்.. ரீலில் வந்தது என்ன? ரியலில் நடந்தது என்ன? முழு அலசல்!

மதிய உணவுத்திட்டம்:


 1920ல் நீதிக்கட்சி ஆட்சியில், பிட்டி தியாகராயரால் 1000 விளக்கு தொகுதியில்தான் முதன்முதலாக மதிய உணவுத்திட்டம் ஆரம்பிக்கப்படுகிறது.  அதனை காமராஜர் தனது ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு முழுக்க விரிவுபடுத்துகிறார். எம் ஜி ஆர்  ஆட்சிக்காலத்தில் மதிய உணவுத்திட்டம் சத்துணவு திட்டமாக மாறுகிறது. அதில் கீரை, பருப்பு போன்றவை கட்டாயமக்கப்படுகிறது. மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது இந்த திட்டம்.  சத்துணவுத்திட்டத்துக்கு கிடைத்த வரவேற்பை மக்களிடம் இன்னும் அதிகமாக பிரபலபடுத்த விரும்பினார் எம்.ஜி.ஆர்.. அதற்காக வானொலி, தொலைக்காட்சி,பொதுக்கூட்டங்களை பயன்படுத்தினார். ஆனால் எல்லா இடங்களுக்கும் தானே செல்ல முடியாது என்பதால் மக்களிடம் நல்ல அறிமுகமான , பிரபல முகத்தை தேடியிருக்கிறார். அப்போது ஜெயலலிதா நியாபகத்துக்கு வந்துள்ளார். தொடர்ந்து, ஜெயலலிதாவுக்கு சத்துணவு திட்ட உயர்மட்டக்குழு உறுப்பினர் பொறுப்பு வழங்குகிறார் எம்.ஜி.ஆர். அவருக்கு  கிட்ட தட்ட கேபினட் அந்தஸ்து கிடைக்கிறது. சத்துணவு திட்டம் ஒழுங்காக செயல்படுத்தப்படுகிறதா என பல இடங்களில் ஆய்வு செய்கிறார். மேலும் மேடைக்கு மேடை சத்துணவுத்திட்டம் பற்றி பேசுகிறார்.  கலை உலகில் இருந்த தனக்கு அரசியலில் ஆர்வம் வரக்காரணமே எம்.ஜி.ஆர் கொண்டு வந்த சத்துணவுத்திட்டம்தான் என மேடைகளில் பேசினார் ஜெயலலிதா. சத்துணவு திட்டத்திற்கு பிறகு எம்.ஜி.ஆரின் செல்வாக்கு இன்னும் உயர்கிறது. 

ஆனால் படத்தில் சத்துணவு நிர்வாகியால், உணவின் தரத்தை கேள்விக்கேட்க நீ யார் என ஜெயலலிதா அவமானப்படுத்தப்படுவதாக காட்டப்படுகிறது. 

இடம்பெறாத கதாபாத்திரங்கள்:

ஒருவரின் முழுமையான வாழ்க்கைக் கதைக்கான டைட்டிலைக் கொண்டிருக்கும் இந்தப் படத்தில் ஜெயலலிதாவின் அம்மா சந்தியா,  தோழி சசிகலாவைத் தவிர, அவரது வாழ்வில் இருந்த ஷோபன் பாபு போன்ற பிற  முக்கியமான மனிதர்களை பற்றி பேசுவதில்லை. ஆர்.எம். வீரப்பன் ஜெயலலிதாவின் பிரதான வில்லனாக காட்டப்படுகிறார். ஆனால் எம்.ஜி.ஆரின் அதிமுக எனும் கட்சிக்காக கலைஞரை எதிர்த்து வந்த எல்லாருக்குமே ஜெயலலிதா அதிமுகவுக்கு வந்ததில் அதிருப்தி இருந்திருக்கிறது.  கட்சிக்குள் மூத்தவர்கள்,  முக்கியமானவர்கள் இருந்தபோதும், ஜெயலலிதாவுக்கு முக்கியத்துவம் தரப்படுவதாக எம்.ஜி.ஆர் மீது எஸ்.டி.சோமசுந்தரம் போன்றவர்கள் நேரடியாகவே குற்றம்சாட்டினர். அதை பொதுவெளியில்  வெளிப்படுத்திய சிலரின் பதவிகள் பறிக்கப்பட்டன.  சீனியர்களைத் தாண்டி ஜெயலலிதாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட நேரத்தில் வருவாய் துறை அமைச்சராக இருந்த sds எம்.ஜி.ஆர் மீது  ஊழல் குற்றச்சாட்டை முனவைத்தார். இந்த சம்பவத்திற்கு பிறகு அவர் கட்சியிலிருந்து நீக்கப்ப்ட்டார்.  

டெல்லியில் ஜெயலலிதா:

இப்படி கட்சிக்குள் பல அதிருப்தி குரல்கள் இருந்ததன் காரணமாக ஜெயலலிதாவையும், வலம்புரி ஜானையும் மாநிலங்களவைக்கு அனுப்பி வைத்தனர். பொதுக்கூட்டங்களில் ஜெயலலிதா உருவகங்கள், உவமானங்களோடு பேச எழுதிக்கொடுத்தவர்தான் வலம்புரி ஜான். அப்போது, மாநிலங்களவையில் அண்ணா மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது அமர்ந்த சீட்டை ஜெயலலிதா கேட்டு வாங்கியதாக அதிமுக ராஜ்ய சபா எம்பி வலம்புரி ஜான் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.

வேதா இல்லத்தில் துண்டிக்கப்பட்ட தொலைபேசி இணைப்பு:

இந்தப் படத்தில் ஒரு காட்சியில், எம்.ஜி.ஆர். உயிரிழந்த நாளில் ஜெயலலிதாவுக்கு போன் செய்து அவரது கையால் சாப்பிட வேண்டும் என சொல்கிறார். அதற்காக பாயாசத்துடன் உணவைச் சமைத்து எம்.ஜி.ஆரின் வருகைக்காக காத்திருக்கிறார். நீண்ட நேரம் எம்.ஜி.ஆர் வரவில்லை. அந்த முனைப்பில் உணவருந்தும் மேசையில் அமர்ந்தபடியே தூங்கிவிடுகிறார். இறுதியில்,எம்.ஜி ஆரின் கார் சத்தம் கேட்டு எழுந்து காரை ஓடும் அவருக்கு மரணச் செய்திதான் சொல்லப்படுகிறது. ஆனால், பிரபல  பத்திரிகையாளர்  வாசந்தி The Lone Empress எனும் புத்தகத்தை எழுதியுள்ளார். அதில், எம்.ஜி.ஆர். மரணத்திற்கு முந்தைய நாளில் வேறு சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் என்ற முறையில் ஜெயலலிதாவின் வீட்டிற்கு கொடுக்கப்பட்டிருந்த தொலைபேசி இணைப்பு, முதலமைச்சரின் ஆணையின் பேரில் அன்றைய தினம்தான் துண்டிக்கப்படுகிறது. எனில் எப்படி எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவுடன் போனில் பேசியிருப்பார் எனும் கேள்வி எழுகிறது.

இந்த சூழலில் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு 1991ல் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டு அமைச்சர்கள் குனிந்து கும்பிடு போடுவதுடன் நிறைவடைகிறது படம். ஆனால் முதலமைச்சரானதற்குப் பிறகான காலகட்டத்தில்தான் மிகப் பெரிய தலைவியாக உருவெடுத்தார். அவர்மீதான மிகப் பெரிய ஊழல் வழக்குகள் எல்லாம் தலைதூக்கின.  அவரது 3 ஆட்சிக்காலங்கள் நிறைய விமர்சனங்களை எதிர்க்கொண்டன. தலைவி ஆன பின்பு என்ன நடக்கிறது என்பதுதான் வரலாறு. இந்நிலையில், அந்தப் பகுதியெல்லாம் வசதியாகத் தவிர்க்கப்பட்டிருக்கிறது. ஒரு வேளை பார்ட்-2 வந்தால் எதிர்பார்க்கலாமா என்னமோ தெரியவில்லை.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS Slams DMK:
EPS Slams DMK:"ஏழை மக்களை ஏமாற்றுகின்ற ஆட்சி திமுக ஆட்சி... திமுக ஆட்சிக்கு முடிவு காலம் வந்துவிட்டது".
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
DMDK-ADMK: வாய்விட்ட இபிஎஸ்.! உடைகிறதா அதிமுக-தேமுதிக கூட்டணி? ட்விட்டை டெலிட் செய்த பிரமேலதா.!
வாய்விட்ட இபிஎஸ்.! உடைகிறதா அதிமுக-தேமுதிக கூட்டணி? ட்விட்டை டெலிட் செய்த பிரமேலதா.!
David Warner: செம்ம! நடிகராக அறிமுகமாகும் டேவிட் வார்னர்.. என்ன படம்? யாரு ஹீரோ தெரியுமா?
David Warner: செம்ம! நடிகராக அறிமுகமாகும் டேவிட் வார்னர்.. என்ன படம்? யாரு ஹீரோ தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs MK Stalin | தெலுங்கில் பிறந்தநாள் வாழ்த்து!முதல்வரை சீண்டிய தமிழிசை ஸ்டாலின்பதிலடிDMK Councilor | வளையலை உருவிய கவுன்சிலர் கையை தட்டி விட்ட பெண் திமுக நிர்வாகியின் அநாகரீகம்Govt School Issue | அரசு பள்ளியில் அவலம்!’’பாத்ரூம் கழுவ சொல்றாங்க’’  மாணவிகள் பகீர் புகார்PTR vs Karan Thapar | ’’உ.பி, பீகார் பத்தி பேசுவோமா?’’PTR தரமான சம்பவம் வாயடைத்துப்போன கரண் தபார்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Slams DMK:
EPS Slams DMK:"ஏழை மக்களை ஏமாற்றுகின்ற ஆட்சி திமுக ஆட்சி... திமுக ஆட்சிக்கு முடிவு காலம் வந்துவிட்டது".
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
DMDK-ADMK: வாய்விட்ட இபிஎஸ்.! உடைகிறதா அதிமுக-தேமுதிக கூட்டணி? ட்விட்டை டெலிட் செய்த பிரமேலதா.!
வாய்விட்ட இபிஎஸ்.! உடைகிறதா அதிமுக-தேமுதிக கூட்டணி? ட்விட்டை டெலிட் செய்த பிரமேலதா.!
David Warner: செம்ம! நடிகராக அறிமுகமாகும் டேவிட் வார்னர்.. என்ன படம்? யாரு ஹீரோ தெரியுமா?
David Warner: செம்ம! நடிகராக அறிமுகமாகும் டேவிட் வார்னர்.. என்ன படம்? யாரு ஹீரோ தெரியுமா?
Trump AI Video Viral: அறியா வயது முதல் அதிபர் வரை.. வைரலாகும் ட்ரம்ப் குறித்த அசத்தலான ஏஐ வீடியோ...
அறியா வயது முதல் அதிபர் வரை.. வைரலாகும் ட்ரம்ப் குறித்த அசத்தலான ஏஐ வீடியோ...
IND vs AUS: சுழட்டி.. சுழட்டி.. பந்துபோடும் இந்தியா.. திணறி திணறி ஆடும் ஆஸ்திரேலியா! இதாம்ல அட்டாக்!
IND vs AUS: சுழட்டி.. சுழட்டி.. பந்துபோடும் இந்தியா.. திணறி திணறி ஆடும் ஆஸ்திரேலியா! இதாம்ல அட்டாக்!
China Vs America Tariffs: வகை வகையாக பிரித்து அடிக்கும் சீனா.. அப்செட்டான அமெரிக்கா...
வகை வகையாக பிரித்து அடிக்கும் சீனா.. அப்செட்டான அமெரிக்கா...
IND vs AUS: இந்தியாவிற்கு எதிராக இந்தியரை இறக்கிய ஆஸ்திரேலியா! யார் இந்த தன்வீர்சங்கா?
IND vs AUS: இந்தியாவிற்கு எதிராக இந்தியரை இறக்கிய ஆஸ்திரேலியா! யார் இந்த தன்வீர்சங்கா?
Embed widget