மேலும் அறிய

Thalaivii | தலைவி படம்.. ரீலில் வந்தது என்ன? ரியலில் நடந்தது என்ன? முழு அலசல்!

தலைவி படத்தின் துவக்கத்திலேயே புனைவு கலந்த உண்மை கதை என சொல்லப்படுகிறது. அதனாலேயே பல இடங்களில் வரலாற்றிலிருந்து விலகி நிற்கிறது. ரீலில் வந்தது என்ன? ரியலில் நடந்தது என்ன? பார்க்கலாம்.

1989ல் முதலமைச்சர் கருணாநிதி பட்ஜெட் தாக்கல் செய்துக்கொண்டிருந்தார். எதிர்க்கட்சி தலைவராக இருந்தார் ஜெயலலிதா. தான் எது நினைத்தாலும் அது தனக்கு உடனே கிடைக்க வேண்டும் என நினைப்பவர் ஜெயலலிதா. எப்படியாவது இந்த ஆட்சியைக் கலைத்துவிட்டு தான் முதலமைச்சராக வேண்டும் என நினைக்கிறார். ஒரு அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்யாமல் போனாலோ, தாக்கல் செய்வதற்கு முன்னால் லீக் ஆனாலோ  பதவியேற்கும்போது எடுத்துக் கொள்ளும் ரகசிய காப்பு உறுதிமொழியிலிருந்து தவறி விட்டார்கள் என ஆட்சியை கலைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. இதையடுத்து பட்ஜெட்டை படிக்க விடாமல் செய்ய வேண்டும், ஆட்சியைக் கலைக்க வேண்டும் என ஜெயலலிதாவால் திட்டம் தீட்டப்படுகிறது. 


Thalaivii | தலைவி படம்.. ரீலில் வந்தது என்ன? ரியலில் நடந்தது என்ன? முழு அலசல்!

 

இந்த சூழலில் இன்னொரு பக்கம்,  வாக்குகள் ஜெயலலிதா அதிமுக- ஜானகி அதிமுக என பிரிந்ததால் ஆட்சியமைக்க முடியாமல் போன விரக்தியில் அரசியலை விட்டு ஒதுங்குவதாக முன்னதாக ஒரு முடிவெடுக்கிறார். எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதாகக் கடிதமும் எழுதுகிறார். ஆனால் இந்த முடிவை மறுபரீசிலனை செய்ய வேண்டும் எனக்கூறி அந்த கடிதத்தை கொடுக்கவிடாமல் தடுக்கிறார் சசிகலா. அந்த கடிதம் சசிகலாவின் கணவர்  நடராஜன்  வீட்டில் இருந்துள்ளது. அந்த சமயத்தில் பிஆர்வோ பொறுப்பில் இருந்திருக்கிறார் நடராஜன். அவரின் வீட்டில் ரெய்டு நடத்தி ஜெயலலலிதாவின் கடிதத்தைக் கைப்பற்றுகிறது திமுக அரசு. இந்த விவகாரம் ஜெயலலிதாவை இன்னும் ஆத்திரபடுத்தியது. எனவே இந்த பிரச்சினையை காரணம் காட்டி பட்ஜெட்டை தாக்கல் செய்யவிடாமல் செய்ய திட்டமிட்டார்.


Thalaivii | தலைவி படம்.. ரீலில் வந்தது என்ன? ரியலில் நடந்தது என்ன? முழு அலசல்!

நிதியமைச்சராகவும் இருந்த கலைஞர் பட்ஜெட்டை படிக்க தொடங்குகிறார். அந்த நேரத்தில் தன்னுடைய  கடிதத்தை எடுத்ததை உரிமை மீறல் பிரச்சினையாக எடுத்து விவாதிக்க வேண்டும் என அவையில் சொல்கிறார் ஜெயலலிதா. ஆனால், சபாநாயகரோ பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு அதை பற்றி பேசுவோம். பட்ஜெட் வேலையை முதலில் முடிப்போம் என்கிறார்.  இந்த சூழலில் கலைஞர் தொடர்ந்து பட்ஜெட் படிக்கிறார். க்ரிமினல், பட்ஜெட்டை படிக்கக்கூடாது என சொல்லி ஜெயலலிதா பிரச்சினை கிளப்புகிறார். இப்போதும்   அதிமுகவில் இருக்கும் முன்னாள் அமைச்சர் ஒருவர் கருணாநிதியை பாய்ந்து போய்த் தாக்குகிறார். அதில் கலைஞரின் கண்ணாடி கீழே விழுந்து உடைகிறது. தலைவர் தாக்கப்பட்டதை அறிந்ததும் திமுகவினரும் பதில் தாக்குதல் நடத்தினர். ஆனால் தலைவிரிகோலத்தோடு வெளியே வந்து பத்திரிகையாளர்களை சந்தித்த ஜெயலலிதா ஒரு பக்க கதையை மட்டும் சொல்லியிருக்கிறார். தான் தாக்கப்பட்டதாக குறிப்பிடுகிறார். ஆனால் அவர் அவையை விட்டு வெளியே வரும் வரை அவரது சேலை கூட கசங்கவில்லை என திமுகவினர் தெரிவிக்கிறார்கள். வரலாறு இப்படியிருக்க சட்டசபையில் ஜெயலலிதா தரையில் தள்ளப்பட்டு தாக்கப்பட்டது போன்றும், சேலை கிழிக்கப்பட்டது போன்றும் துவக்கத்திலேயே பரிவைக் கோருகிறது படம்.


Thalaivii | தலைவி படம்.. ரீலில் வந்தது என்ன? ரியலில் நடந்தது என்ன? முழு அலசல்!

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, ஜெ. பக்கம் இருந்த எம் எல் ஏக்களில் சேவல் சின்னத்தில் ஜெயித்த திருநாவுக்கரசர் முக்கியமானவர்.  அவர் தொண்ணூறுகளிலேயே ஜெயலலிதாவை விட்டு விலகிவிட்டார். சட்டசபையில் என்ன நடந்தது. இதற்காக முதல் நாள் ஜெயலலிதாவால் என்ன திட்டம் தீட்டப்பட்டது,  அது எப்படி செயல்படுத்தப்பட்டது. முதல் தாக்குதல் யார் பக்கத்திலிருந்து துவங்கியது என ஜெயலலிதாவுடன் இருந்த அவரே வரலாற்றைப் பல இடங்களில் பதிவு செய்திருக்கிறார். இதையெல்லாம் தாண்டி செயல்பட்ட  திமுக அரசு, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக  1991ம் ஆண்டு, ஜனவரி 30ல் கலைக்கப்பட்டது.

அடுத்தப்பகுதியைப் படிக்க > Thalaivii | தலைவி படம்.. ரீலில் வந்தது என்ன? ரியலில் நடந்தது என்ன? முழு அலசல்!

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

அரைவேக்காடு Uncle.. பெரியார் சிலை பற்றி பேச என்ன தகுதி இருக்கு? திமுகவை தோலுரித்து தொங்கவிட்ட தவெக!
அரைவேக்காடு Uncle.. பெரியார் சிலை பற்றி பேச என்ன தகுதி இருக்கு? திமுகவை தோலுரித்து தொங்கவிட்ட தவெக!
அன்பில் மகேஷ் ஜாமீன் வழக்கு.. 3½ மணி நேர காரசார வாதம்.. வீடியோ ஆதாரம் இருந்தா ஜாமீனே வேண்டாம்!
அன்பில் மகேஷ் ஜாமீன் வழக்கு.. 3½ மணி நேர காரசார வாதம்.. வீடியோ ஆதாரம் இருந்தா ஜாமீனே வேண்டாம்!
அன்பில் மகேஷ் கைது: பண ஆதாரம் உள்ளது - அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி!
அன்பில் மகேஷ் கைது: பண ஆதாரம் உள்ளது - அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி!
தவெக ஆட்சிக்கு ரெட் அலர்ட்! இவ்வளவு வீக்கான முதல்வரை தமிழகம் பார்த்தது இல்லை! அட்டாக் மோடில் ஸ்டாலின்
தவெக ஆட்சிக்கு ரெட் அலர்ட்! இவ்வளவு வீக்கான முதல்வரை தமிழகம் பார்த்தது இல்லை! அட்டாக் மோடில் ஸ்டாலின்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate Today: நேற்று ரூ.2,280 உயர்வு.. இன்று தங்கம் விலை உயர்ந்ததா? குறைந்ததா? இதோ அப்டேட்!
Gold Rate Today: நேற்று ரூ.2,280 உயர்வு.. இன்று தங்கம் விலை உயர்ந்ததா? குறைந்ததா? இதோ அப்டேட்!
Scene Movie Review : சூர்யாவுக்கு ஹாட்ரிக் வெற்றி கிடைக்குமா...சீன் திரைப்பட விமர்சனம்
Scene Movie Review : சூர்யாவுக்கு ஹாட்ரிக் வெற்றி கிடைக்குமா...சீன் திரைப்பட விமர்சனம்
Ration Card Holder: ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. உடனே வங்கி கணக்கை செக் பண்ணுங்க.!
Ration Card Holder: ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. உடனே வங்கி கணக்கை செக் பண்ணுங்க.!
MookuthiAmman 2 Review : அம்மன் அவதாரம் கைகொடுத்ததா? சுந்தர் சி மேஜிக் பலித்ததா? மூக்குத்தி அம்மன் 2 விமர்சனம் இதோ
MookuthiAmman 2 Review : அம்மன் அவதாரம் கைகொடுத்ததா? சுந்தர் சி மேஜிக் பலித்ததா? மூக்குத்தி அம்மன் 2 விமர்சனம் இதோ
வேலியே பயிரை மேய்ந்த அவலம் - பெண் போலீசுக்கு பாலியல் தொல்லையளித்த எஸ்எஸ்ஐ கைது!
வேலியே பயிரை மேய்ந்த அவலம் - பெண் போலீசுக்கு பாலியல் தொல்லையளித்த எஸ்எஸ்ஐ கைது!
விசா நடைமுறைகளில் தளர்வு - யார் யாருக்கு சலுகை: சிறப்பம்சம் என்ன?
விசா நடைமுறைகளில் தளர்வு - யார் யாருக்கு சலுகை: சிறப்பம்சம் என்ன?
Weather Update: எதிர்பார்த்த மாதிரியே நவம்பர் 15ம் தேதி உருவாகிறது.. அடுத்த 3 மணிநேரம் இந்த 5 மாவட்ட மக்கள் எச்சரிக்கை!
Weather Update: எதிர்பார்த்த மாதிரியே நவம்பர் 15ம் தேதி உருவாகிறது.. அடுத்த 3 மணிநேரம் இந்த 5 மாவட்ட மக்கள் எச்சரிக்கை!
Rasi Palan: தொட்டதெல்லாம் பொன்னாகும் நாள்! மேஷம் முதல் மீனம் வரை.. இன்று உங்க ராசிக்கு எப்படி இருக்கு?
Rasi Palan: தொட்டதெல்லாம் பொன்னாகும் நாள்! மேஷம் முதல் மீனம் வரை.. இன்று உங்க ராசிக்கு எப்படி இருக்கு?
Embed widget