தெலங்கானாவில் ரயில்வே தேர்வு; 1000 கி.மீட்டருக்கு அப்பால் சென்று தேர்வு எழுதுவது சிரமம் - எடப்பாடி பழனிசாமி
மத்திய அரசின் ரயில்வே தேர்வுக்கு தமிழக மாணவர்களுக்கு தெலங்கானாவில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து துறையாக ரயில்வே உள்ளது. ரயில்வே துறையில் லட்சக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும், ஆயிரக்கணக்கான காலிப்பணியிடங்களும் உள்ளது.
ரயில்வே தேர்வு:
இந்த நிலையில், ரயில்வே துறைக்காக வரும் 19ம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களும் இதற்காக விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பலருக்கும் தெலங்கானாவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தெலங்கானாவில் மையம்:
இதற்காக தமிழ்நாட்டில் உள்ள பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், "தெற்கு ரயில்வேயில் உதவி லோகோபைலட் பணியிடங்களுக்கான 2ம் கட்டத் தேர்வு வரும் மார்ச் 19 அன்று நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 90% தேர்வர்களுக்கு தெலங்கானா மாநிலத்தில் மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.
தெற்கு ரயில்வேயில் உதவி லோகோபைலட் பணியிடங்களுக்கான 2ம் கட்டத் தேர்வு வரும் மார்ச் 19 அன்று நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 90% தேர்வர்களுக்கு தெலங்கானா மாநிலத்தில் மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) March 16, 2025
1000 கி.மீ. க்கு அப்பால் சென்று…
1000 கி.மீ. க்கு அப்பால் சென்று தேர்வு எழுதுவது தேர்வர்களுக்கு மிகுந்த சிரமத்தை அளிக்கும். மேலும், இதுபோன்ற குளறுபடிகள் ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசுப்பணிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் அதிக அளவில் சேரவேண்டும் என்ற உந்துதலைக் குறைத்துவிடும் என்பதையும் மத்திய அரசு உணர வேண்டும்.
தமிழ்நாட்டில் மையங்கள்:
எனவே, தேர்வர்களின் கோரிக்கையினைக் கருத்திற் கொண்டு, தமிழ்நாட்டுத் தேர்வர்களுக்கான மையங்களை தமிழ்நாட்டிலேயே ஒதுக்கீடு செய்யுமாறு மத்திய அரசையும், தெற்கு ரயில்வே நிர்வாகத்தையும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் பணியில் ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. மேலும், தமிழக இளைஞர்கள் மத்திய அரசு பணிக்கு தேர்வு ஆகாமல் இருப்பதைத் தடுப்பதற்காகவே இதுபோன்று வேறு மாநிலங்களில் தேர்வு மையங்களை அமைப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்த சூழலில், மத்திய அரசிற்கு மிகப்பெரிய அளவில் வருவாய் தரும் ரயில்வே துறைக்கான தேர்வில் தமிழக மாணவர்களுக்கு தெலங்கானாவில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருப்பது தமிழக மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால், தமிழ்நாட்டின் பல மாணவர்கள் இந்த தேர்வை எழுதமாட்டார்கள் என்றே கருதப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

