ADMK BJP Alliance : “வெளியான Report – கலக்கத்தில் திமுக” ComeBack அதிமுக – பாஜக பூஸ்டில் EPS..!
"தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் இருந்தாலும் தேர்தல் ஆணையத்தின் ரிப்போர்ட் சொல்லும் முடிவுகள் அதிமுகவிற்கு சாதகமாக இருப்பது, திமுகவிற்கு கலக்கத்தை ஏற்படுத்தும் விஷயமாகவே அமைந்துள்ளது"

2026 தேர்தல் முடிவுகள் திமுகவிற்கு அதிர்ச்சியையும், அதே நேரம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வரும் அதிமுகவிற்கு பயங்கரமான COME BACK-ஐம் கொடுக்கும் என்கிற தேர்தல் ஆணையத்தின் ரிப்போர்ட் அரசியல் களத்தில் புதிய புயலை கிளப்பியுள்ளது.
கணிப்புகளை பொய்யாக்கிய கள நிலவரம்
அதிமுகவுடன் சமீபத்தில் மீண்டும் பாஜக இணைந்துள்ள நிலையில், அது அதிமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று சில அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால் கடந்த 2001 முதல் 2021ம் ஆண்டு வரையிலான 5 சட்டமன்ற தேர்தல் முடிவுகளையும், அதில் அதிமுக பெற்றுள்ள வாக்கு சதவீதத்தையும் அலசி ஆராய்ந்தால், தற்போது திமுகவின் பக்கம் வீசும் காற்று, 2026 தேர்தலில் அதிமுகவின் பக்கம் பலமாக திசை மாற வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் ரிப்போர்ட் சொல்லும் புள்ளி விவரங்கள் என்ன? அது எப்படி அதிமுகவின் பல்ஸை எகிறவைக்கிறது என்பதை விரிவாக பார்க்கலாம்.
TRADITIONAL VOTE BANK யாருக்கு அதிகம்?
தமிழ்நாட்டை பொறுத்த அளவில், திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் மாறி மாறி ஆட்சி அமைப்பது வழக்கம் என்றாலும், 2001 முதல் 2021 வரையிலான காலகட்டதில் நடைப்பெற்ற ஐந்து சட்டமன்ற தேர்தலில் 2016 தேர்தலில் அந்த PATTERN-ஐ பிரேக் செய்துள்ளது அதிமுக.
இந்நிலையில், 2001, 2011, 2016 ஆகிய மூன்று தேர்தல்களில் வெற்றிப்பெற்ற அதிமுக, 2001ல் 132 தொகுதிகளிலும், 2011ல் 150 தொகுதிகளிலும், 2016ல் 133 தொகுதிகளிலும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. அதே நேரம் 2006 மற்றும் 2021 ஆகிய தேர்தல்களில் திமுக வெற்றிப்பெற்றாலும், 2006 தேர்தலில் 96 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற திமுகவால் கூட்டணி தயவுடனேயே ஆட்சியை அமைக்க முடிந்தது, ஆனால் 2021 தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது திமுக. அப்படி பார்க்கையில் 3 தேர்தலில் தோல்வி, ஒரு தேர்தலில் மைனாரிட்டி என திமுகவின் TRACK RECORD சற்றே குறைந்து காணப்படுகிறது.
அதிக சறுக்கலை சந்தித்த கட்சி திமுக
மேலும் இந்த ஐந்து தேர்தல்களிலுமே தோல்விகளை சந்தித்தபோது அதிக சறுக்கலை சந்தித்த கட்சியாக திமுகவே உள்ளது என்கிறது தேர்தல் ஆணையத்தின் DATA. அதன் படி 2006, 2021 தேர்தலில் தோல்வியை சந்தித்தாலும், 60 தொகுதிகளுக்கும் அதிமாக வென்று வலுவான எதிர்க்கட்சியாக சட்டமன்றத்திற்குள் சென்றுள்ளது அதிமுக.
ஆனால், 2001 தேர்தலில் 31 தொகுதியில் மட்டுமே வெற்றிப்பெற்ற திமுக, 2011 தேர்தலில் 23 தொகுதிகளில் மட்டுமே வெற்றிப்பெற்று எதிர்கட்சி என்ற அந்தஸ்தையே இழந்தது. இதன் மூலம் தங்களுக்கான TRADITIONAL VOTE BANK-ஐ இயல்பாகவே அதிமுக அதிகமாக வைத்திருப்பதை புரிந்துகொள்ளலாம்.
119 தொகுதிகளில் பறக்கும் அதிமுக கொடி!
கடைசியாக நடைப்பெற்ற 3 தேர்தல் முடிவுகளை ஒப்பிட்டு பார்த்தால், தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 119 தொகுதிகள், அதாவது கிட்டதட்ட 50 சதவீதம் தொகுதிகளில் அதிமுக வலுவாக இருப்பதாக முடிவுகள் சொல்கின்றன.
அதன் படி 2011, 2016, 2021 ஆகிய மூன்று தேர்தலில்களிலும், குறிப்பிட்ட 38 தொகுதிகளில் மூன்று முறையும் வெற்றி வாகை சூடி, அதை தங்களுடைய கோட்டையாக வைத்துள்ளது அதிமுக. அதே நேரம் கடந்த மூன்று தேர்தலில், திமுக காங்கிரஸ் கூட்டணியால் அப்படி தங்களை அசைக்கவே முடியாத கட்சியாக வெறும் 15 தொகுதிகளில் மட்டுமே நிலைநாட்ட முடிந்துள்ளது.
மேலும் கடந்த 3 தேர்தல்களில் 81 தொகுதியில் குறைந்தபட்சம் இரண்டு முறையாவது வெற்றியை பதிவு செய்துள்ளது அதிமுக. அதே நேரம் 62 தொகுதிகளில் மட்டுமே திமுக- காங். கூட்டணியால் குறைந்தபட்சம் 2 முறையாவது வெற்றியை பெற முடிந்துள்ளது.
அந்த வரிசையில் கடந்த 3 தேர்தல்களில் 3 முறையும் வெற்றி பெற்ற தொகுதியை அக்கட்சியின் மிகவும் பலமான தொகுதியாகவும், 2 முறை வெற்றி பெற்ற தொகுதிகளை பலமான தொகுதியாகவும், குறைந்தபட்சம் 1 முறை வெற்றி பெற்ற தொகுதியை மிதமான வாய்ப்புள்ள தொகுதியாகவும், ஒரு முறைக்கூட வெற்றி பெறாத தொகுதியை பலவீனமான தொகுதியாகவும் கணக்கிட்டால் 119 தொகுதிகளில் பலமான கட்சியாக திகழ்கிறது அதிமுக, அதே நேரம் 77 தொகுதிகளில் பலமான கட்சியாக திகழ்கிறது திமுக. இதன் மூலம் மெஜாரிட்டிக்கு தேவையான 117 தொகுதிகளை விட அதிகமான தொகுதிகளில் அதிமுகவின் கொடி பறப்பதை புரிந்துக்கொள்ளலாம்.
பாஜகவுடனான கூட்டணி.. பிளஸ் & மைனஸ்?
கூட்டணி விவகாரத்தில் திமுகவின் கை ஓங்கி இருப்பதாகவும், பாஜகவுடனான கூட்டணி அதிமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதாகவே பெரும்பாலான வாதங்கள் முன்வைக்கப்படுகிறது.
காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, இடதுசாரி கட்சிகள் அனைத்தும் திமுகவின் மெகா கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. இது திமுகவின் மிக பெரிய பலம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பாஜகவுடன் கூட்டணி வைக்காமல், அதிமுக தனித்து தேர்தலை சந்தித்தால், அது திமுகவின் வெற்றிக்கு எளிதாக வழிவகுக்கும் என்பதையே கடந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
2024 மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளையும் கைப்பற்றியது. அதில் திமுக கூட்டணியின் வாக்கு சதவீதம் 47%, அதே நேரம் அதிமுக கூட்டணி 23 சதவீத வாக்கையும், பாஜக கூட்டணி 18 சதவீத வாக்கையும் பெற்றது.
பாஜக-வுடன் அதிமுகவின் கூட்டணி பலமே!
இதை வைத்து பார்க்கையில், ஒரு வேலை அதிமுக, பாஜக கூட்டணி இணைந்து தேர்தலை சந்திருந்தால், அவர்களால் 41 சதவீதம் வாக்குகளை பெற்றிருக்க முடியும். அப்போதும் திமுகவின் கையே ஓங்கி இருந்திருக்கும், ஆனால் நிச்சயம் சில தொகுதிகளில் மாற்றம் நிகழ்ந்து இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். 39 தொகுதிகளையும் திமுக கைப்பற்றி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவே. அப்படி பார்க்கையில் பாஜகவுடன் செல்ல எடப்பாடி எடுத்த MOVE அதிமுகவிற்கு PLUS ஆகவே பார்க்க வேண்டியுள்ளது.
அதிமுகவிற்கு சாதகமாக இருக்கும் 2026 தேர்தல் களம்
இந்நிலையில், தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் இருந்தாலும் தேர்தல் ஆணையத்தின் ரிப்போர்ட் சொல்லும் முடிவுகள் அதிமுகவிற்கு சாதகமாக இருப்பது, திமுகவிற்கு கலக்கத்தை ஏற்படுத்தும் விஷயமாகவே அமைந்துள்ளது.

