”பதவில இருக்க மாட்டேன்னு சொன்னேன்” மதுரை அரிட்டாபட்டியில் மகிழ்ச்சியாக பேசிய முதல்வர் ஸ்டாலின்.!
Cm Stalin Madurai Arittapatti: மதுரை அரிட்டாபட்டியில் நடைபெற்ற பாராட்டு விழா நிகழ்ச்சியில், முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று, மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக பேசினார்.

அடுத்த வருடம் சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ளது; அரிட்டாபட்டி மக்கள், என்ன முடிவில் இருக்கிறீர்கள் என எனக்கு தெரியும் என டங்ஸ்டன் திட்டம் ரத்து தொடர்பாக நடைபெற்ற பாராட்டு விழாவில், முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.
டங்ஸ்டன் திட்டம் ரத்து:
மதுரை மாவட்டம் மேலூர் அருகே தமிழ்நாட்டின் முதல் பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய பல்லுயிர் தளமாக அறிவிக்கப்பட்ட அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மலையை வெட்டி டங்ஸ்டன் எடுக்க வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனால் மேலூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பல்வேறு பாரம்பரிய சின்னங்கள், இயற்கை வளங்கள், பல்லுயிர் தளங்கள் மற்றும் விவசாயம் பெருமளவு பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும் என எதிர்ப்புகள் எழ ஆரம்பித்தன.
மேலும், தமிழ்நாடு சட்டப்பேரவையில் , டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தீர்மானமும் நிறைவேற்றம் செய்யப்பட்டது. அப்போது, சுரங்கம் அமைந்தால், நான் பதவியிலும் இருக்க மாட்டேன் எனவும் தெரிவித்தார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு, டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதனால் தமிழ்நாட்டு மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
அரிட்டாபட்டியில் முதலமைச்சர் ஸ்டாலின்:
இந்நிலையில் , இன்று அரிட்டாபட்டிக்கு நேரில் சென்று , அங்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்று உரை நிகழ்த்தினார். அவர் பேசியதாவது, “ டங்ஸ்டன் சுரங்கத்தை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நான் முதலமைச்சராக இருக்கும் வரை டங்ஸ்டன் இருக்கும் வரை , சுரங்கம் வராது என உறுதியளித்திருந்தேன். நமக்கு வெற்றி கிடைத்திருக்கிறது.
அரிட்டாபட்டி மக்கள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, சுரங்க ஒப்பந்தத்தை , மத்திய அரசு ரத்து செய்தது. அடுத்த வருடம் தேர்தல் வரவுள்ளது. நீங்கள் என்ன முடிவில் உள்ளீர்கள் என தெரியும். உங்களது சிரிப்பான முகத்தை, பார்க்கையில் நீண்ட நேரம் பேச வேண்டும் என தோன்றுகிறது; ஆனால் அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் இருப்பதால் செல்ல வேண்டி இருக்கிறது என தெரிவித்து, அப்பகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு கிளம்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்
Also Read: TN Weather: இன்னும் போகலையா.! கடைசியா, 5 மாவட்டங்களில் கனமழை கொட்டிவிட்டு போகும் வடகிழக்கு பருவமழை
வழக்குகள் வாபஸ்:
டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தொடர் போராட்டங்கள் நடத்த ஆரம்பித்தனர். இந்நிலையில் போரட்டம் நடத்தியவர்கள் மீது மதுரை தல்லாகுளம் மற்றும் மேலூர் காவல் நிலையங்களில் வழக்குகள் பதியப்பட்டன.
இந்நிலையில், டங்ஸ்டன் எடுப்பதற்கு எதிரான போரட்டத்தில் ஈடுபட்ட 11, 608 பேர் மீது பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகள் திரும்ப பெறப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்குகள் திரும்ப பெறப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி அளித்திருந்தார்.
டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏல உரிமை இரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக மதுரை மாவட்டம், வள்ளாலபட்டி கிராம மக்கள் சார்பில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் உரையாற்றினார்.
— CMOTamilNadu (@CMOTamilnadu) January 26, 2025
1/2 pic.twitter.com/GoIfLq167S
டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்யக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். “சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக் கூடாது. இதுபோன்ற சுரங்கத் தொழிலை மேள்கொள்ள தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றும் முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

