Madurai: குற்றச்சாட்டை நிரூபித்தால் ராஜினாமா செய்ய தயார் : அண்ணாமலைக்கு அமைச்சர் சவால்!
”என் மீது சுமத்திய குற்றச்சாட்டை அண்ணாமலை நிரூபித்தால் என்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய நான் தயார்.” அமைச்சர் மூர்த்தி காட்டமாக தெரிவித்துள்ளார்.

மதுரை வடக்கு வட்டம், குலமங்கலம் கிரமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 479 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 19 லட்சத்து 65 ஆயிரத்து 971- மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டது. இதில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அனீஷ் சேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர் சந்தித்து பேசினார்.
பத்திரபதிவுத்துறை அமைச்சர் @pmoorthy21 மதுரையில் உள்ள ஒரு சார்பதிவாளரிடம் பணம் பெற்றுக்கொண்டு ஒரே நாளில் மதுரைக்கு பணியிட மாறுதல் செய்ததாக பாஜக தலைவர் @annamalai_k குற்றச்சாட்டு தெரிவித்த நிலையில் "குற்றச்சாட்டை நிரூபித்தால் ராஜினாமா செய்ய தயார்" என மூர்த்தி பேட்டியளித்துள்ளார் pic.twitter.com/AAoi9XodjT
— Arunchinna (@iamarunchinna) June 21, 2022






















