மேலும் அறிய
Advertisement
மதுரை : திராவிட ஆட்சி அல்ல சினிமா மாடல் ஆட்சி.. வரும்காலம் பாஜக காலம்.. அண்ணாமலை பேச்சு..
”காவல்நிலையத்திற்கு முதல்வர் ஆய்வுக்கு சென்றபின்தான் குற்றங்கள் அதிகரித்துவிட்டது” - முதல்வரை விமர்சனம் செய்த அண்ணாமலை.
மதுரை பழங்காநத்தம் பகுதியில் மத்திய பா.ஜ.க., அரசின் 8-வது ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் முரளிதரன் மற்றும் பா.ஜ.க., மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பேசிய மத்திய இணையமைச்சர் முரளிதரன் பேசியபோது,
"தமிழக மக்கள் மீது மோடிக்கு தனி மரியாதை உண்டு , தமிழகத்தின் பண்பாட்டை, மொழியை மதிப்பவர் மோடி, இலங்கை தமிழர்கள் மீது மோடி அரசுதான் அக்கறையாக உள்ளது. இலங்கை தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திய அரசு மோடி அரசு, இலங்கையில் ஆயுத போர் உருவாகும் நிலை இருந்த நிலையில் இலங்கைக்கு உதவி செய்தவர் மோடி. மோடி பிரதமராக இருப்பதை எண்ணி தமிழ்நாட்டு மக்களை போல இலங்கை மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பிரதமர் மோடிதான் இலங்கை தமிழர்களுக்கு அதிக உதவி செய்தவர், தி.மு.க., இலங்கை தமிழர்களுக்கு எதாவது செய்ததா?
காவல்நிலையத்திற்கு முதல்வர் ஆய்வுக்கு சென்ற பின் தான் குற்றங்கள் அதிகரித்துவிட்டது, அமைச்சர் சேகர்பாபு மதுரை ஆதீனத்தை தொட்டால் மோடி என்ன செய்வார் என்பது தெரியும் - பாஜக மாநில தலைவர் @annamalai_k பேச்சு.
— Arunchinna (@iamarunchinna) June 16, 2022
further reports to follow - @abpnadu @SRajaJourno | @vetridhaasan pic.twitter.com/tgxsPfo5U9
இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட 2971 தமிழக மீனவர்கள் தமிழகத்திற்கு கொண்டுவந்தவர் பிரதமர். அதனால் தற்போது ஒரு தமிழக மீனவர் கூட இலங்கை சிறையில் இல்லை. திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை எதையாவது நிறைவேற்றினார்களா? திமுகவினர் தனது குடும்பத்தினருக்காக தான் உழைக்கிறார்கள். அண்ணாமலை இருக்கும் வரை ஊழல் செய்ய முடியாது என்பதால் அண்ணாமலைக்கு உதவியதாக கூறி 70 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை மாற்றியுள்ளனர், அண்ணாமலை ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நம்பி அரசியல் செய்யவில்லை சாதாரண மக்களை நம்பி அரசியல் செய்கிறார் என்றார்.
தொடர்ந்து பேசிய மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில்..,' தி.மு.க.,வின் ஓராண்டு ஆட்சி திராவிட ஆட்சி என்ற பெயரில் சினிமா மாடல் போன்ற ஆட்சியை நடத்திவருகின்றனர். தமிழகத்தில் கூட்டுபலாத்காரம் அதிகரித்துவருகிறது. முதலமைச்சர் காவல்நிலையத்திற்கு ஆய்வு சென்றதிலிருந்து குற்றம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தி.மு.க.,வினர் காவல்நிலையங்களை மாமியார் வீடு போல மாற்றியுள்ளனர். திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை, வழிப்பறி அதிகரித்துள்ளது, வணிகவரித்துறை அமைச்சர் நூதன முறையில் திருட்டில் ஈடுபடுகிறார், தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி., நிலுவைத்தொகை என்பதே எதுவும் இப்போது இல்லை, தமிழக நிதியமைச்சருக்கு எவ்வளவு ஜி.எஸ்.டி., நிலுவை தொகை உள்ளது என்பதே தெரியவில்லை. தேர்தல் வாக்குறுதி அளித்த பெட்ரோல் டீசல் விலையை ஏன் குறைக்கவில்லை? திமுக தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றிவருகின்றனர். தி.மு.க., ஆட்சியில் 21குழுக்கள் தான் உருவாக்கப்பட்டுள்ளதுதான் சாதனை.
எங்களை யாராலும் மிரட்ட இயலாது. பேசுவதை பேசிக்கொண்டேதான் இருப்போம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 400 இடங்களில் பெரும்பான்மை வெற்றிபெற்று மோடி 3ஆவது முறை பிரதமராக இருப்பார், தமிழகத்தில் 25் பாஜக எம்பிக்கள் வெற்றிபெறுவார்கள். தற்போது வாராவாரம் காவல்நிலைய மரணங்கள் அதிகரித்துவருகிறது. காங்கிரஸ் கண்டுகொள்ளவில்லை, தமிழகத்தில், வரும்காலம் பாஜக காலம்தான், அமைச்சர் சேகர்பாபு ஆதீனத்தை தொட்டால் பா.ஜ.கவும், மோடியும் என்ன செய்வார்கள் என்பது தெரியும். பா.ஜ.க-விற்கும் ஆதீனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை, மதுரை ஆதீனம் மக்களின் பக்கம் இருப்பதால் ஆதீனத்தின் பக்கம் பா.ஜ.க., நிற்கிறது” என்றார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மதுரை காமராசர் பல்கலைகழக கல்லூரியில் பெண் துறைத்தலைவர் மீது புகார்; குழு அமைக்க முடிவு!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
மதுரை
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion