Planet Parade: நாளை வானில் அதிசயம்! எந்தெந்த கிரகங்களின் அணிவகுப்பு? எப்படி, எந்த நேரத்தில் காணலாம்? அரிய வாய்ப்பு!
Planet Parade 2026: பிப்ரவரி 28: வானில் அதிசய காட்சி! கிரக அணிவகுப்பு: கண்களால் காணும் அரிய வாய்ப்பு! எந்த நேரத்தில் எப்படி காணலாம்?

பிப்ரவரி 28- கிரகங்கள் ஒரே வரிசையில் தோன்றும் நிகழ்வு (Planet Alignment)
நாளை, அதாவது பிப்ரவரி 28 அன்று வானில் ஒரு முக்கியமான கிரக அணிவகுப்பு (Planet Alignment) நிகழ்வு நடைபெற உள்ளது. இதில் பல கிரகங்கள் சூரியனைச் சுற்றும் தங்கள் பாதையில் ஒரே பக்கத்தில் வரும். இதனால், பூமியில் இருந்து பார்த்தால் அவை வானில் ஒரே வரிசையில் இருப்பது போல தோன்றும்.
எந்த கிரகங்கள் தெரியும்?
இந்த அணிவகுப்பில் பொதுவாக புதன் (Mercury)
வெள்ளி (Venus)
நெப்டியூன்
வியாழன் (Jupiter)
சனி (Saturn)
யுரேனஸ் (Uranus)
போன்ற கிரகங்களும் பங்கேற்கலாம். இதில் வெள்ளி, வியாழன், செவ்வாய், சனி போன்ற கோள்களைக் கண்களால் தெளிவாக பார்க்க முடியும்.
எப்போது பார்க்கலாம்?
சிறந்த நேரம்: சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு மாலை 6:30 - 8:30 மணி வரை
மேற்கு வானம் மற்றும் தெற்கு- மேற்கு திசையில் பார்க்க வேண்டும்
நகர விளக்குகள் குறைவான இடத்தில் பார்க்க சிறப்பாக இருக்கும்.
ஏன் இது நடக்கிறது?
அனைத்து கிரகங்களும் சூரியனை ஒரே தட்டில் (plane) சுற்றுவதால், சில நேரங்களில் அவை ஒரே பக்கத்தில் சேர்ந்து வருவது போல தோன்றும். இது உண்மையில் நேர்கோட்டில் நிற்பது அல்ல, ஆனால் பூமியில் இருந்து பார்ப்பவருக்கு அப்படி தோன்றும்.
இதன் கல்வி முக்கியத்துவம்
- மாணவர்கள் சூரிய குடும்பத்தின் அமைப்பை புரிந்துகொள்ள உதவும்.
- கிரகங்களின் இயக்கம், பாதை, மற்றும் ஈர்ப்பு விசை பற்றி அறிய உதவும்.
- வானியல் மீது ஆர்வம் மற்றும் அறிவியல் சிந்தனை வளர்க்கும்.
எப்படி பார்க்கலாம்?
இந்த அரிய நிகழ்வை வெறும் கண்களால் பார்க்க முடியும். எனினும் தொலைநோக்கி (Telescope) பயன்படுத்தினால் மேலும் தெளிவாக காணலாம். அதேபோல பைனாகுலர் (Binocular) பயன்படுத்தினாலும் பார்க்கலாம்.
இது அரிதானதா?
ஆம், பல கிரகங்கள் ஒரே நேரத்தில் தெளிவாக காணப்படும் நிகழ்வு அடிக்கடி நடக்காது. இது மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு ஒரு சிறந்த வானியல் அனுபவம் என்று அறிவியலாளரும் அரசுப் பள்ளி ஆசிரியருமான கண்ணபிரான் தெரிவித்துள்ளார்.
























