Stalin Kejriwal: பாஜகவுக்கு விளாசல், டெல்லி முன்னாள் முதல்வருக்கு வாழ்த்து; ஸ்டாலினுக்கு நன்றி கூறிய கெஜ்ரிவால்
டெல்லி மதுபான கொள்கை வழக்கின் தீர்ப்பு வெளியான நிலையில், பாஜக அரசை சாடியும், கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்தும் பதிவிட்ட முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, கெஜ்ரிவால் நன்றி தெரிவித்துள்ளர்.

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 23 பேரை விடுவித்து உத்தரவிட்டனர். மேலும், சிபிஐ-க்கும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தீர்ப்பு குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவிட்ட நிலையில், அதற்கு பதில் பதிவு போட்டுள்ளார் கெஜ்ரிவால். அது குறித்து இப்போது பார்க்கலாம்.
முதலமைச்சர் ஸ்டாலினின் பதிவு என்ன.?
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கின் தீர்ப்பு வெளியான நிலையில், தனது எக்ஸ் தளத்தில் அது குறித்து பதிவிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய பாஜக அரசு குறுகிய கால அரசியலுக்காக, புலனாய்வு அமைப்புகளின் நேர்மையை அடகு வைக்கக் கூடாது என்றும், அதற்காக கொஞ்சமாவது வெட்கப்படுங்கள் என்றும் கூறியுள்ளார்.
மேலும், நல்லபடியாக முடிந்தது, மதிப்பிற்குரிய நண்பர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சிசோடியா, உறுதியாக நின்று உண்மையை பேச வைத்ததற்கு வாழ்த்துகள் எனவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
The Union BJP government must not mortgage the integrity of investigating agencies for short-term politics. Have some shame.
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) February 27, 2026
Well done, my respected friend Thiru. @ArvindKejriwal, and Thiru. @msisodia, for standing firm through it all and letting the truth speak for itself.… https://t.co/7ZysntLs2j
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் இந்த பதிவிற்கு பதிலளித்துள்ளார் டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால். இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், எங்கள் போராட்டத்தில் எங்களுடன் உறுதுணையாக நின்றதற்கு நன்றி ஸ்டாலின் அவர்களே என்று தெரிவித்துள்ளார்.
Thank you so much Thiru Stalin for always standing with us in our struggle. https://t.co/j0XTSmXdIN
— Arvind Kejriwal (@ArvindKejriwal) February 27, 2026
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், முகாந்திரம் இல்லாமல் வழக்கு தொடுத்துள்ளதாக சிபிஐ-க்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.























