Mylapore Peacock Statue: இறுதிகட்ட விசாரணையில் மயில் சிலை வழக்கு - சிலைகடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி பேட்டி
காணாமல் போன இரண்டு சிலைகளும் தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகர அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன - சிலைகடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி பேட்டி.
மதுரையில் சிலை திருட்டு தடுப்பு பிரிவு, காவல்துறை இயக்குநர் ஜெயந்த் முரளி , சிலை தடுப்புபிரிவு காவல்துறை தலைவர் தினகரன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அதில், “ 1985-ம் ஆண்டு தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பகுதியில் உள்ள அருள்மிகு நரசிங்கநாதர் கோயிலில் இருந்து 11-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட கங்காள நாதர் மற்றும் அதிகார நந்தி ஆகிய இரண்டு ஐம்பொன் சிலைகள் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளன.
37 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட 11ஆம் நூற்றாண்டை சேர்ந்த இரு ஐம்பொன் சிலைகள் அமெரிக்காவில் இருந்து மீட்கப்பட்டு கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைப்பு. மயிலாப்பூர் கோவில் மயில் சிலை குறித்து இறுதிகட்ட விசாரணை நடைபெறுகிறது - சிலைகடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி @jayantmuraliips பேட்டி. pic.twitter.com/HXfEO7jIP2
— Arunchinna (@iamarunchinna) June 17, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்