மேலும் அறிய

Thar Rival: ஓவரா ஆடும் தார்..! போட்டிக்கு வரும் JSW-ன் மின்சார ஆஃப்-ரோட் SUV கார் - 510KM ரேஞ்ச், விலை, லாஞ்ச்?

Thar Rival JSW SUV EV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மஹிந்த்ராவின் தார் மாடலுக்கான நேரடி போட்டியாக, JSW நிறுவனத்தின் புதிய ஆஃப் ரோட் மின்சார எஸ்யுவி விரைவில் சந்தைப்படுத்தப்பட உள்ளது.

Thar Rival JSW SUV EV: JSW நிறுவனத்தின் புதிய ஆஃப் ரோட் மின்சார எஸ்யுவி, 510 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என கூறப்படுகிறது.

தாருக்கு போட்டியாக JSW எஸ்யுவி மின்சார கார்:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஆஃப் ரோடர் எஸ்யுவி என்றாலே, மஹிந்த்ராவின் தார் கார் மாடல் தான் பெரும்பாலானோரின் பிரதானமான தேர்வாக உள்ளது. அதற்கு நேரடி போட்டியாக புதிய மின்சார காரை சந்தைப்படுத்தும் முனைப்பில் JSW நிறுவனம் களமிறங்கியுள்ளது. அதன்படி,  செரி (Chery) நிறுவனத்தின் iகார் V23 மாடல் அடிப்படையிலான எஸ்யுவி முதல்முறையாக இந்திய சாலையில் காணப்பட்டுள்ளது. புனேவில் உள்ள ARAI எனப்படும் ஆட்டோமேடிவ் ரிசர்ச் அசோஷியேஷன் ஆஃப் இந்தியாவின் சோதனை தளத்தில் இந்த கார் காணப்பட்டுள்ளது. வழக்கமாக, சந்தைப்படுத்தலுக்கு முன்பாக ஹோலோகேஷன் மற்று சான்றிதழ் வாங்குவதற்காகவே இந்த நிலையத்திற்கு புதிய கார்கள் கொண்டு வரப்படும். இதனை கருத்தில் கொண்டால் JSW நிறுவனத்தின் புதிய எஸ்யுவி விரைவில் சந்தைப்படுத்தப்பட உள்ளது என்பதை உணர முடிகிறது. JSW நிறுவனத்தின் சுதந்திரமான வாகனப் பிரிவானது, சீனாவைச் சேர்ந்த செரி நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் வெளியாகும் முதல் கார் மாடலாக, iகார் V23 அடிப்படையில் உருவாகும் மின்சார எஸ்யுஇவி விளங்கும். 

ஆஃப் ரோட் திறனுக்கான ரக்கட் டிசைன்

முற்றிலுமாக மூடி மறைக்கப்பட்ட காரின் தோற்றமானது iகார் V23 மாடலில் இருப்பதை போன்றே, பாக்ஸி மற்றும் கம்பீரமான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. வட்டவடிவமான முகப்பு விளக்கானது சீல்ட் ஆஃப் முன்பகுதி உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது தனித்துவமான அடையாளத்தை வழங்குகிறது. மிகவும் தீவிரமான ஆஃப்-ரோட் மாடல்களை அடிப்படையாக கொண்டு முன்புற பம்பர் டிசைன் உருவாக்கப்பட்டு இருப்பதை காண முடிகிறது. ஒட்டுமொத்த அளவீடுகளானது வலுவான சாலை இருப்பை உணர்த்துகிறது. 


Thar Rival: ஓவரா ஆடும் தார்..! போட்டிக்கு வரும் JSW-ன் மின்சார ஆஃப்-ரோட் SUV கார் - 510KM ரேஞ்ச், விலை, லாஞ்ச்?

சர்வதேச சந்தையில் iகார் V23 ஆனது 4,220 மில்லி மீட்டர் நீளம், 1,915 மில்லி மீட்டர் அகலம், 1,845 மில்லி மீட்டர் உயரம் மற்றும் 2,735 மில்லி மீட்டர் வீல்பேஸை கொண்டுள்ளது. க்ரவுண்ட் க்ளியரன்ஸ் ஆனது 205 தொடங்கி 210 மில்லி மீட்டர் வரை நீள்கிறது. அப்ரோச் மற்றும் டிபார்ட்சுர் ஆங்கிலானது முறையே கவனத்தை ஈர்க்கும் விதமாக 43 மற்றும் 41 டிகிரியில் அமைக்கப்பட்டுள்ளது. இது ஆஃப் ரோட் செயல்திறனை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் மூலம் விரைவில் சந்தைப்படுத்தப்பட உள்ள தார் மின்சார எடிஷனுக்கு, இந்த கார் நேரடியாக சவால் விடுக்கக் கூடும்.

வெளிப்புற வடிவமைப்பு

JSW  எஸ்யுவியில் பல்வேறு மின்சார கார்களில் இருப்பதை போன்று ஃப்ளஷ் யூனிட்களாக இல்லாமல், இழுக்கும் வகையிலான கைப்பிடிகளை கொண்டுள்ளது. இதுபோக எளிதில் ஏறுவதற்கும், இறங்குவதகும் படிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. வேரியண்ட் அடிப்படையில் இதில் 19 முதல் 21 இன்ச் அலாய் வீல்கல் வழங்கப்படுகின்றன. பின்புறத்தில் இயல்பாக வழங்கப்படும் கூடுதல் டயருக்கு பதிலாக, பாக்ஸி வெளிப்புற ஸ்டோரேஜை கொண்டுள்ளது. பக்கவாட்டில் இணைக்கப்பட்ட டெயில்கேட்டும் வழங்கப்பட்டுள்ளது.


Thar Rival: ஓவரா ஆடும் தார்..! போட்டிக்கு வரும் JSW-ன் மின்சார ஆஃப்-ரோட் SUV கார் - 510KM ரேஞ்ச், விலை, லாஞ்ச்?

உட்புறம் & அம்சங்கள்:

சீன மாடல் அடிப்படையிலான புதிய காரானது நவீனமான ஆனால் நடைமுறைக்கு உகந்த கேபின் அமைப்பை கொண்டுள்ளது. ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்ட் ஆட்டோ ஆதரவுடன் கூடிய பெரிய 15.4-இன்ச் சென்ட்ரல் டச்ஸ்க்ரீன் இடம்பெற்றுள்ளது. அதில் காலநிலை மற்றும் ஆடியோ செயல்பாடுகளுக்கான பிஷிகல் பட்டன்கள் உள்ளன. ஸ்டீயரிங் வீலில் ரோலர்-வகை கன்ட்ரோலர்கள் உள்ளன, இருப்பினும் ஓட்டுனருக்கான பிரத்யேக டிஸ்பிளே இல்லாதது குறிப்பிடத்தக்கது.


Thar Rival: ஓவரா ஆடும் தார்..! போட்டிக்கு வரும் JSW-ன் மின்சார ஆஃப்-ரோட் SUV கார் - 510KM ரேஞ்ச், விலை, லாஞ்ச்?

உட்புற தீமானது பெரும்பாலும் கருப்பு நிறத்தை கொண்டுள்ளது. பவர்ட் மற்றும் வெண்டிலேடட் வசதி கொண்ட முன்புற இருக்கைகளை முழுமையாக மடிக்க முடியும். ஆனால், பின்புற இருக்கைகள் 50:50 என்ற விகிதத்தில் மடிக்க சேமிப்பு இடத்தை அதிகரிக்க முடியும். இதுபோக ட்ரைவ் மோட்கள், 7-ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், மூன்று USB போர்ட்கள் மற்றும் PM2.5ஏர் ஃபில்டர் சிஸ்டம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பான பயணத்திற்காக ADAS, 540-டிகிரி கேமரா சிஸ்டம், முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், நான்கு சக்கர டிஸ்க் பிரேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் ஆட்டோ-ஹோல்டுடன் கூடிய எலெக்ட்ரானிக் பார்க்கிங் ப்ரேக் போன்ற தொழில்நுட்ப அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

பவர் ட்ரெயின் & ரேஞ்ச்

சீன சந்தையில் iகார் V23  மாடலானது இரண்டு பவர்ட்ரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. ரியர் வீல் ட்ரைவ் வேரியண்டானது 59.93KWh பேட்டரி பேக் மூலம் 401 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என கூறப்படுகிறது. ஆல் வீல் ட்ரைவ் வேரியண்டானது 81.76KWh பேட்டரி பேக் மூலம் 510 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரியர் வீல் ட்ரைவ் வேரியண்டில் மணிக்கு 100 கிலோ மீட்டர் என்ற வேகத்தை 11 விநாடிகளிலும் எட்டக்கூடிய இந்த காரானது, ஆல் வீல் ட்ரைவில் வெறும் 7.5 விநாடிகளில் எட்டுகிறது. அதிகபட்சமாக மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டுள்ளது.  உள்நாட்டு சந்தையில் இந்த காரின் தொடக்க விலை ரூ.16 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Maruti Victoris: 5 ஸ்டார் ரேட்டிங், 27KM மைலேஜ்..! மாருதியின் எஸ்யுவிக்கு போட்டியாக 3 கார்கள் - விலை, வசதிகள் எப்படி?
5 ஸ்டார் ரேட்டிங், 27KM மைலேஜ்..! மாருதியின் எஸ்யுவிக்கு போட்டியாக 3 கார்கள் - விலை, வசதிகள் எப்படி?
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
கம்பீரம்.. ஆளுமை.. 504 கி.மீட்டர் மைலேஜ்..! Keeway SR250 பைக்கை வாங்கலாமா? விலை எப்படி?
கம்பீரம்.. ஆளுமை.. 504 கி.மீட்டர் மைலேஜ்..! Keeway SR250 பைக்கை வாங்கலாமா? விலை எப்படி?
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
Embed widget