மேலும் அறிய
ரூ.70 லட்சத்தில் சேவற்கொடி...கீழடியில் உறை கிணறு....அலங்கை வருகிறாரா முதல்வர் ? இன்னும் பல செய்தி !
அலங்காநல்லூரில் நடைபெறவுள்ள உலகப்புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க வாய்ப்புள்ள தாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.

மதுரை_அமெரிக்கன்_கல்லூரி
1. மதுரை அழகர்கோயிலில் உள்ள முருகப் பெருமானுக்கு சுமார் ரூ.70,00,000 எழுபது இலட்சம் மதிப்பீட்டில் வைரம் பதித்த சேவற்கொடி உபயதாரர் மூலமாக பெறப்பட்டு அதற்கு சிறப்பு பூஜைகள் செய்து இன்று முருகப்பெருமானுக்கு சாத்துபடி செய்யும் நிகழ்வு நடைபெற உள்ளது.
2. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மேலும் இரண்டு படகுகளையும் அதில் சென்ற மீனவர்கள் 12 நபர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கடந்த சில தினங்களில் இரவு நேரத்தில் 7 படகுகளையும் 55 மீனவர்களையும் கைது செய்துதுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
3. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த கீழடி பகுதியில் விளைநிலத்தில் தண்ணீர் வெளியேற்ற தோண்டிய குழியில் உறைகிணறு போன்ற அமைப்பு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனால் பலரும் இதனை ஆட்சரியமாக பார்த்து செல்கின்றனர்.
4.சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ஆற்றில் குப்பைகளைக் நகராட்சி ஊழியர்கள்
கொட்டுவதாலும், ஆற்று நீரில் செப்டிக் டேங்க் கழிவுநீரை சிலர் விடுவதாலும் நீர் மாசடைந்துள்ளது என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
5. அரசியலில் எதிர்ப்பவர்கள் விரோ திகள் என்ற மனப்பான்மையை மாற்றி வருகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பேசினார்.
6. விடுமுறை தினம் காரணமாக திண்டுக்கல் மாவட்டம் பழநி கோயிலில் நேற்று ஏராள மான பக்தர்கள் குவிந்தனர். இதனால் சாமி தரிசனத்திற்கு 3 மணிநேரம் காத்திருக்க வேண்டி இருந்தது.
7. ராமநாரபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் பொருட்கள் கடத்த உள்ளதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து செய்த சோதனையில் இலங்கைக்கு கடத்த முயன்ற 1 டன் சுக்கு பறிமுதல் செய்யப்பட்டது.
8. மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெறவுள்ள உலகப்புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க வாய்ப்புள்ள தாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.
9. ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்து தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டுபிடிக்க அவரது ஆதரவாளர்கள், அதிமுக முக்கிய பிரமுகர் கள் என 600 பேரின் செல் போன் எண்களை சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
10. தூத்துக்குடியில் ஊரடங்கால் வீதிகளில் பட்டினியால் வாடும் நாய்களுக்கு இளைஞர் தொடர்ந்து தினமும் இருவேளை உணவளித்து வருகிறார். இந்த சம்பவம் பலராலும் பாரட்டைப் பெற்றுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
அரசியல்
ஆட்டோ





















