மேலும் அறிய

ஓபிஎஸ்-ன் அதிரடி முடிவு: திமுக-வில் இணைந்த பின், அதிமுக-வில் படையெடுக்கும் ஆதரவாளர்கள்! தேனியில் பரபரப்பு!

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில் அவரது ஆதரவாளர்கள் ஒட்டுமொத்தமாக அதிமுகவில் இணைந்தனர்.

அதிமுகவில் நீண்டகாலம் முக்கிய பொறுப்புகளில் வகித்தவரும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் என பல முக்கிய பதவிகளை வகித்தவருமான ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்துள்ளார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் முக்கிய விசுவாசியாக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். ஓபிஎஸ் தற்போது திமுகவில் இணைந்து இருக்கிறார், தமிழ்நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்படக்கூடிய ஒரு விஷயமாக இது மாறியுள்ள நிலையில், காலம் முழுவதும் எம்ஜிஆர், ஜெயலலிதா யாரை எதிர்த்து அரசியல் செய்தார்களோ அந்த கட்சியில் அவர் இணைந்ததற்கு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலரும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.


ஓபிஎஸ்-ன் அதிரடி முடிவு: திமுக-வில் இணைந்த பின், அதிமுக-வில் படையெடுக்கும் ஆதரவாளர்கள்! தேனியில் பரபரப்பு!

இதனைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலரும் கடந்த ஒரு வாரமாக கூட்டம் கூட்டமாக அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாக கடமலை மயிலை ஒன்றிய ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்வு கடமலைக்குண்டுவில் நடைபெற்றுள்ளது. நிகழ்ச்சிக்கு அதிமுக தேனி கிழக்கு மாவட்டச் செயலாளர் முருக்கோடை ராமர் தலைமை வகிக்க, தெற்கு ஒன்றியச் செயலாளர் எஸ்எம்.ராமர் முன்னிலை வகித்தார்.

இதில் கடமலை மயிலை தெற்கு ஒன்றியத்தில் உள்ள 18 கிளைச் செயலாளர்களும் ஓபிஎஸ் அணியில் இருந்து ஒட்டுமொத்தமாக விலகி அதிமுகவில் இணைந்துள்ளனர். குமணன்தொழு, வனத்தாய்புரம், மண்ணூத்து, சென்றாயபுரம், தேவேந்திரபுரம், கோம்பைத்தொழு, முத்துலாபுரம், வலம்புரி உள்ளிட்ட 18 கிராமங்களைச் சேர்ந்த கிளைச் செயலாளர்கள் விலகியதால் இப்பகுதியில் ஓபிஎஸ் கூடாரம் முற்றிலும் காலியாகி உள்ளது.

ஓ பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து, கடந்த ஒரு வாரத்தில் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரிய குழப்பமும், கட்சித் தாவல்களும் நடந்தது. கடந்த ஒரு வாரத்தில் அதிமுகவில் முக்கிய ஆதரவாளர்கள் அடுத்தடுத்து இணைந்தனர். முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஓபிஎஸ்-ன் மிகத்தீவிர ஆதரவாளராக இருந்தவர். ஓபிஎஸ் திமுகவில் இணைந்த அடுத்த சில மணிநேரங்களிலேயே, "திமுகவிற்குச் செல்ல எனக்கு மனமில்லை" என்று கூறி, எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.


ஓபிஎஸ்-ன் அதிரடி முடிவு: திமுக-வில் இணைந்த பின், அதிமுக-வில் படையெடுக்கும் ஆதரவாளர்கள்! தேனியில் பரபரப்பு!

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மார்க்கையன்கோட்டை அகிலன் (முன்னாள் சேர்மன்), பெரியகுளம் நகர நிர்வாகிகளுடன் சேர்ந்து மீண்டும் அதிமுகவில் இணைந்தார். அதேபோல் ஓ பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளத்தைச் சேர்ந்த பல உள்ளூர் நிர்வாகிகள், அவரது வீடுகளில் இருந்த ஓபிஎஸ் படங்களை அகற்றிவிட்டு, இபிஎஸ் படங்களை வைத்து மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளனர். ராஜ்யசபா எம்.பியான ஆர். தர்மர் ஏற்கனவே ஓ பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுகவை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்திருந்தார்.  இப்படி தேனி மாவட்டத்தில் ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பலரும் கடந்த ஒரு வாரமாக படிப்படியாக அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

விருதுநகர் 2026-27: ரூ.37,959 கோடி கடன் திட்டம் - மாவட்ட ஆட்சியர் வெளியீடு!
விருதுநகர் 2026-27: ரூ.37,959 கோடி கடன் திட்டம் - மாவட்ட ஆட்சியர் வெளியீடு!
விருதுநகரில் தேசிய குடற்புழு நீக்க நாள்: 7 லட்சம் குழந்தைகள், பெண்களுக்கு ஆரோக்கிய மாத்திரைகள்!
விருதுநகரில் தேசிய குடற்புழு நீக்க நாள்: 7 லட்சம் குழந்தைகள், பெண்களுக்கு ஆரோக்கிய மாத்திரைகள்!
விருதுநகர்: சதுரகிரி ஆடி அமாவாசை; 6 மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
விருதுநகர்: சதுரகிரி ஆடி அமாவாசை; 6 மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
RBI Loan Recovery: லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
Embed widget