விஜய் வருகையால் மிரளும் திமுக! நாஞ்சில் சம்பத் பரபர பேச்சு: அரசியல் களம் சூடுபிடிக்குமா?
கமல், டார்ச் லைட்டை வைத்து கொண்டு கட்சி உயிரோடு இருக்கிறதா? என அறிவாலயத்தில் டார்ச் அடித்து தேடிக்கொண்டு இருக்கிறார் - நாஞ்சில் சம்பத் திண்டுக்கல்லில் பேச்சு

தமிழக வெற்றி கழகத்தின் 3 ம் ஆண்டு தொடக்க விழா வை முன்னிட்டு கொள்கை விளக்க பொதுக்கூட்டம் திண்டுக்கல் நாகல் நகரில் நடைபெற்றது, கூட்டத்திற்கு கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் தர்மராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில் கட்சியின் பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்துகொண்டு பேசினார். பேசுகையில், 5 ஆண்டுகள் தராத திட்டங்கள் இன்று தவெக தலைவர் வருகையால் பொதுமக்களுக்கு கிடைத்திருக்கிறது, எம்ஜிஆர் ஆட்சிக்கு வர 5 ஆண்டுகள், அண்ணாவிற்கு 18 ஆண்டுகள் தேவைபட்டது, ஆனால் விஜய்க்கு 3 ஆண்டுகள் தான் தேவைபட்டுள்ளது. விஜய் வளர்ச்சிக்கு பயந்து கூட்டத்திற்கு அளவுக்கு அதிகமான கட்டுபாடுகள் விதித்து வருகின்றனர்.

மதிமுக, இன்று மண்ணோடு மண்ணாக இன்று அறிவாலயத்தில் கிடக்கிறது. ஜிகே வாசன் இன்று மோடியிடம் அடிமாட்டு விலைக்கு விற்று விட்டார். கமல் டார்ச் லைட்டை வைத்து கொண்டு கட்சி உயிரோடு இருக்கிறதா என அறிவாலயத்தில் டார்ச் அடித்து தேடிக்கொண்டு இருக்கிறார். திமுக தேர்தல் வாக்குறுதியில் வெறும் 66 வாக்குறுதிகள் மட்டும் அறைகுறையாக நிறைவேற்றி உள்ளனர். தென் தமிழகத்தில் சாதி ஆணவ படுகொலைகள் நடக்கிறது. ஸ்டாலின் அரசு என்ன செய்து கொண்டு இருக்கிறது, நாடுமுழுவதும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டு உள்ளது.
இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் தான் பெறுப்பு ஏற்க வேண்டும், விஜய் 234 தொகுதியில் தனித்து போட்டியிட்டாலும் வெற்றி பெறுவார், விரைவில் ஒரு தேசிய கட்சியும், மாம்பழ கட்சியும் விரைவில் இணைய உள்ளது. ஈரானில் கண்ணீரில் தவிக்கிறார்கள், மருத்துவமனைகள் தாக்கப்பட்டு உள்ளது .அந்த மக்கள் போர் தொடக்கி விட்டது. அரபு நாட்டில் வேலைக்கு சென்ற இந்தியர்கள் குடும்பங்கள் கலங்கி நிற்கிறது. 65 லட்சம் இந்திய மக்களை எப்படி திரும்பி கொண்டுவர போகிறார் பிரதமர் மோடி, பிரதமர் மோடி கைராசி காரர் நீங்கள் சென்று திருப்பியதும் இஸ்ரேலில் போர் தொடங்கி விட்டது.

திமுக எத்தனை குட்டிகர்னம் போட்டாலும் எத்தனை பேரை கூட்டணி வைத்து கொண்டாலும் தவெக வை எதிர் கொள்ள முடியாது. அதிமுகவும் பலமாக இல்லை. நேற்று எடப்பாடி அமித்ஷாவின் காலை நக்கிவிட்டு வந்துள்ளார், ஜெயலலிதா, மோடியா இந்த லேடியா என கேட்டவர். அப்படிப்பட்ட தலைவர் இருந்த கட்சியை இன்று டெல்லிக்கு சென்று அவர்கள் காலை நக்கிவிட்டு வந்து உள்ளார். கோவை வெடிகுண்டு வழக்கில் கைதானவர்களை விடுவிப்பதாக வாக்குறுதி தந்த ஸ்டாலின் அதை நிறைவேற்றவில்லை, திமுக பாஜகவுடன் கள்ள கூட்டணி வைத்து உள்ளது, பேரம்பேசி மண்டியிட்டு விட்டது திமுக. அனைத்து இடங்களிலும் தவெக விற்கு ஆள் உள்ளது, ஸ்டாலின் அவர்களே உங்கள் வீட்டிலும் எங்களுக்கு ஒரு ஓட்டு உள்ளது. ஓபிஎஸ் கூட இன்று ஸ்டாலினிடம் போய் நிற்கிறார். தவெக தலைவர் விஜய் ஆகாயம், அண்டங்காக்கை கிடையாது. பணத்தை விட குணம் நிறைந்தது என்பதை தேர்தலில் மக்கள் நிரூபித்து காட்டவேண்டும் என்றார்.























