மேலும் அறிய

திருமங்கலத்தில் கூட்டத்தை திரட்டும் ஓ.பி.எஸ்., - தென் மாவட்ட ஓட்டுக்களை குவிக்க தி.மு.க., பிளான்-B ?

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இணைப்பு விழாவில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் திமுகவில் இணையும் நிகழ்வு.

தொடர்ந்து 70-80 சதவீதம் அதிமுகவினர் திமுகவில் இணைய உள்ளார்கள் -திருமங்கலத்தில் ஓபிஎஸ் பேட்டி

திருமங்கலத்தில் நடைபெற்ற கால்கோள்விழா
 
மதுரை திருமங்கலம் அருகே, வரும் 7ம் தேதி உள்ள ராயபாளையத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தலைமையின் கீழ் அதிமுகவினர் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் திமுகவில் இணையும் விழா நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சிக்கான கால்கோள் விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழக பதிவுத்துறை மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி , முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன், தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், முன்னாள் உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன், ஓ.பி.ரவீந்திரநாத் குமார்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
சிறப்பான ஆட்சியை முதலமைச்சர் தளபதி அவர்கள் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.
 
கால்கோள்விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ்...,”  திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தளபதி முதலமைச்சர் அவர்களின் தலைமையேற்று பல்வேறு இயக்கங்களில் இருந்து கழகத்தில் இணைகின்ற நல்ல நிகழ்வு வருகிற 7-ஆம் தேதி நடைபெற உள்ளது. அந்த நிகழ்வின் முன்னேற்பாடாக பூமி பூஜை போட்டு நிகழ்வை தொடங்கியுள்ளோம். இந்த நல்ல நிகழ்வில் எங்களை எல்லாம் அரவணைத்து செல்கின்றார். முதலமைச்சர் அவர்கள் இருக்கின்றார் என்பதை தாயன்புடன் எங்களை அரவணைத்து கழகத்தில் இணைத்துக் கொண்ட முதலமைச்சருக்கு நன்றியும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். இதனை முன்னின்று தலைமையேற்று நடத்திக் கொண்டிருக்கிறார். அமைச்சர் அவர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களுக்கும் திமுக அருமை நண்பர்களுக்கும் நன்றியும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். சட்டமன்ற பொது தேர்தலில் ஐந்தாண்டு கால சிறப்பான ஆட்சியை நாட்டு மக்களுக்கு அடித்தள மக்களுக்கு எது தேவையோ அதை அறிந்து புரிந்து செயல்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் சிறப்பான ஆட்சியை முதலமைச்சர் தளபதி அவர்கள் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.
 
கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.
 
அந்த நிலை மீண்டும் தொடர வேண்டும் என்பதற்காக தான் தமிழகத்தின் அனைத்து தரப்பட்ட மக்களும் எந்தவித பாகுபாடும் இல்லாமல் அவருக்கு தார்மீக ஆதரவை தந்து கொண்டிருக்கின்ற இந்த நல்ல நேரத்தில் மீண்டும் தேர்தல் வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தலிலும் முதலமைச்சர் தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும். சாதனை புரிந்த ஆட்சி மீண்டும் வரவேண்டும் தங்களுடைய விருப்பத்தை தெரிவித்துள்ளார்கள் என்ற நிலை உருவாகியுள்ளது. அதிமுக தொண்டர்கள் 70, 80 சதவீதம் மேல் திமுகவில் இணைகிற நல்ல சூழல் உள்ளது. தளபதி ஆட்சியின் திறன் அனைத்து தரப்பட்ட மக்களை அரவணைத்து செல்கின்ற அவருடைய தலைமை ஏற்று மனப்பூர்வமாக இதயபூர்வமாக இணைகின்ற நிகழ்ச்சி தான் இது. 
 
அதிமுகவில் பதவி சுகத்தை அனுபவித்து விட்டு திமுகவில் இணைந்து அம்மாவுக்கு துரோகம் செய்துவிட்டார் ஓபிஎஸ் அண்ணா அதிமுகவினர் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு:
அவர்களுக்கு பதில் சொல்லத் தேவையில்லை 
 
திருமங்கலத்தை தேர்ந்தெடுத்ததற்கான காரணம் குறித்த கேள்விக்கு:
 
எந்த ஒரு மகிழ்ச்சி நடந்தாலும் திரு திருமங்கலம் இயற்கையான பெயரை எங்களுக்கு அமைந்திருக்கிறது‌. கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்று நிறைவு பெறும் அதேபோல முதலமைச்சர் மீண்டும் முதல்வராக வருவார்” என தெரிவித்தார்.
 
தென் மாவட்டத்தில் முக்குலத்தோர் ஓட்டுகளை பெரும்பான்மையாக பெற வேண்டும் என திமுக பல்வேறு திட்டங்களை தீட்டுவதாகவும். எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக உள்ள முக்குலோத்தோர் இன மக்களை தங்கள் வசம் கொண்டுவரவேண்டும் என பிளான் செயல்படுவதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தனர்.
 
 

தலைப்பு செய்திகள்

"விவசாயிகளை வஞ்சிக்கிறது அரசு" – தஞ்சாவூரில் சீறிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget