மேலும் அறிய
Advertisement
பயணிகள் கவனத்திற்கு.....ராமேஸ்வரம் - ஹூப்ளி இடையே சிறப்பு ரயில் வண்டி எண் மாற்றம்
இந்த ரயில், பல்வேறு ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களுக்கான பயண சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருவது குறிப்பிடதக்கது.
ஹூப்ளி - ராமேஸ்வரம் ரயில் நிலையங்களுக்கு இடையே வாராந்திர சிறப்பு கட்டண ரயிலை இயக்க தென்மேற்கு ரயில் ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி ஹூப்ளி - ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு கட்டண ரயில் (07355) ஹூப்ளியில் இருந்து ஆகஸ்ட் 6 முதல் செப்டம்பர் 24 வரை சனிக்கிழமைகளில் காலை 06.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 06.15 மணிக்கு இராமேஸ்வரம் வந்து சேரும்.
#railway | ஹூப்ளி - ராமேஸ்வரம் ரயில் நிலையங்களுக்கு இடையே வாராந்திர சிறப்பு கட்டண ரயிலை இயக்க தென்மேற்கு ரயில் ஏற்பாடு செய்துள்ளது.
— Arunchinna (@iamarunchinna) August 6, 2022
"further reports to follow - @abpnadu"
| @drmmadurai | @train | @TrainUsers | #madurai | @maruthappank | @AviationMadurai | @Rameshtamil10 |
மறுமார்க்கத்தில் ராமேஸ்வரம் - ஹூப்ளி வாராந்திர சிறப்பு கட்டண ரயில் (07356) ராமேஸ்வரத்தில் இருந்து ஆகஸ்ட் 7 முதல் செப்டம்பர் 25 வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 09.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 07.25 மணிக்கு ஹூப்ளி சென்று சேரும். இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 3 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 5 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்படும்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ‘மொழி’ போன்ற படங்களை எடுக்க எனக்கும் ஆசை தான் ஆனால் ஹீரோக்கள்..... - இயக்குநர் முத்தையா சொல்லும் காரணம்
இந்த ரயில்கள் ஹவேரி, ராணி பென்னுரு, ஹரிஹார், தேவனஹரி, சிக் ஜாஜுர், பிரூர் அரிசிகரே, தும்கூர், யெஸ்வந்த்பூர் (பெங்களூர்), பனஸ்வாடி, ஓசூர், தர்மபுரி, ஓமலூர், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, ராமநாதபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களுக்கான பயண சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion