மேலும் அறிய

PAK Vs SL: பங்காளிக்கு வந்த சோதனை..! இலங்கை வேலையை காட்டுமா? பாகிஸ்தானுக்கு அரையிறுதி டிக்கெட்?

ICC T20 World Cup PAK Vs SL: ஐசிசி டி20 உலகக் கோப்பையின் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்வதற்கான முக்கியமான போட்டியில், இன்று பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

ICC T20 World Cup PAK Vs SL:  பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இடையேயான சூப்பர் 8 சுற்று போட்டி, இன்று இரவு 7 மணிக்கு பல்லேகலே மைதானத்தில் தொடங்குகிறது.

இங்கிலாந்தின் அபார வெற்றி:

ஐசிசி டி20 உலகக் கோப்பை பரபரப்பான இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. சூப்பர் 8 சுற்றின் நேற்றைய போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொண்ட நியூசிலாந்து அணி, முதலில் பேட்டிங் செய்து 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இலங்கை நோக்கி களமிறங்கிய ஹாரி ப்ரூக் தலைமையிலான அணி, 19.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் சூப்பர் 8 சுற்றில் விளையாடிய 3 போட்டிகளிலும் வென்று, க்ரூப் 2வில் மட்டுமின்றி, நடப்பு உலகக் கோப்பையில் முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்ற அணி என்ற பெருமையையும் இங்கிலாந்து பெற்றுள்ளது. நியூசிலாந்து அணியின் தோல்வியானது, பாகிஸ்தானிற்கான அரையிறுதி வாய்ப்பையும் சற்றே நீட்டித்துள்ளது.

டி20 உலகக் கோப்பை - சூப்பர் 8 சுற்று புள்ளிப்பட்டியல்

அணிகள் போட்டிகள் வெற்றி தோல்வி சமன் புள்ளிகள் ரன்ரேட்
இங்கிலாந்து 3 3 0 0 6 1.096
நியூசிலாந்து 3 1 1 1 3 1.390
பாகிஸ்தான் 2 0 1 1 3 -0.461
இலங்கை 2 0 2 0 0 -2.800

பாகிஸ்தானுக்கான வாய்ப்பு:

சூப்பர் 8 சுற்றில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதையடுத்து இந்த சுற்றின் மூன்று போட்டிகளையும் விளையாடி முடித்துள்ள நியூசிலாந்து அணி ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் மொத்தம் 3 புள்ளிகளை பெற்று, வலுவான ரன்ரேட்டுடன் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. அதேநேரம், பாகிஸ்தான் அணிக்கு இன்னும் ஒரு போட்டி மீதமுள்ளது. இலங்கை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தால், அரையிறுதிக்கு செல்வதற்கான வாய்ப்பு உள்ளது.

இலங்கை உடன் பாகிஸ்தான் பலப்பரீட்சை

பல்லேகலே மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கும் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலன்கை அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்த ஐசிசி உலகக் கோப்பையை இந்தியாவுடன் இணைந்த்து நடத்தும் இலங்கை, லீக் சுற்றில் ஆதிக்கம் செலுத்திய நிலையில், சூப்பர் 8 சுற்றில் இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியுற்று, அரையிறுதி வாய்ப்பை இழந்தது. இதனால், கடைசி போட்டியிலாவது ஆறுதல் வெற்றி பெறும் முனைப்பில் இன்றைய போட்டியில் களமிறங்குகிறது. அதேநேரம், அரையிறுதி போட்டிக்கு முன்னேற இன்றைய போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற சூழலில், அதுவும் ஒரு பிரமாண்ட வெற்றியை குறிவைத்து பாகிஸ்தான் அணி களமிறங்க உள்ளது.

பாகிஸ்தானுக்கான வாய்ப்புகள்:

இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால், 3 புள்ளிகளுடன் உள்ள நியூசிலாந்து அணியை சமன் செய்யும். ஆனால், சாண்ட்னர் தலைமையிலான அணி ரன்ரேட்டில் வலுவாக உள்ளதால், அவர்களை பின்னுக்கு தள்ளி அரையிறுதி வாய்ப்பை பெற, சல்மான் அலி அகாவின் அணி குறிப்பிட்ட கணக்கீடுகளின் அடிப்படையில் வெற்றி பெற வேண்டியுள்ளது. அதன்படி

  • பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தால் குறைந்தபட்சம் 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்
  • பாகிஸ்தான் அணி இரண்டாவதாக பேட்டிங் செய்தால் இலங்கையால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 13 ஓவர்களில் சேஸ் செய்ய வேண்டும்
  • குறிப்பாக இலங்கை அணியை பாகிஸ்தான் 100 ரன்கள் அளவிற்குள் கட்டுப்படுத்த வேண்டும் 

மேற்குறிப்பிடப்பட்ட கணக்கீடுகளை பூர்த்தி செய்து நியூசிலாந்தை விட சிறந்த ரன் ரேட்டை பெற்று,  பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறுமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read

Frequently Asked Questions

பாகிஸ்தான் மற்றும் இலங்கை இடையேயான சூப்பர் 8 சுற்று போட்டி எப்போது, எங்கு நடைபெறுகிறது?

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இடையேயான சூப்பர் 8 சுற்று போட்டி இன்று இரவு 7 மணிக்கு பல்லேகலே மைதானத்தில் தொடங்குகிறது.

இந்தியாவுடன் இணைந்து டி20 உலகக் கோப்பையை நடத்தும் இலங்கை அணியின் தற்போதைய நிலை என்ன?

இலங்கை அணி சூப்பர் 8 சுற்றில் இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியுற்று, அரையிறுதி வாய்ப்பை இழந்தது. இன்று ஆறுதல் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்குகிறது.

இங்கிலாந்து அணி டி20 உலகக் கோப்பையில் எப்போது அரையிறுதிக்கு தகுதி பெற்றது?

சூப்பர் 8 சுற்றில் விளையாடிய 3 போட்டிகளிலும் வென்று, க்ரூப் 2வில் மட்டுமின்றி, நடப்பு உலகக் கோப்பையில் முதல் அணியாக இங்கிலாந்து அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்ல என்ன செய்ய வேண்டும்?

இலங்கை அணியை ஒரு குறிப்பிட்ட பெரிய வித்தியாசத்தில் வெல்ல வேண்டும். ரன்ரேட்டை நியூசிலாந்தை விட சிறப்பாக மாற்றுவது அவசியம்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

PAK Vs SL: பங்காளிக்கு வந்த சோதனை..! இலங்கை வேலையை காட்டுமா? பாகிஸ்தானுக்கு அரையிறுதி டிக்கெட்?
PAK Vs SL: பங்காளிக்கு வந்த சோதனை..! இலங்கை வேலையை காட்டுமா? பாகிஸ்தானுக்கு அரையிறுதி டிக்கெட்?
Eng vs NZ: இங்கிலாந்து பிடியில் பாகிஸ்தான் குடுமி! அரையிறுதிக்கு செல்லுமா நியூசிலாந்து.. 160 ரன்கள் இலக்கு
Eng vs NZ: இங்கிலாந்து பிடியில் பாகிஸ்தான் குடுமி! அரையிறுதிக்கு செல்லுமா நியூசிலாந்து.. 160 ரன்கள் இலக்கு
IND Vs WI: ”உன் வாழ்க்கை உன் கையில்” ஜெயிச்சா போதும் - மே.தீவுகளை சமாளிக்குமா இந்தியா? அரையிறுதி வாய்ப்பு
IND Vs WI: ”உன் வாழ்க்கை உன் கையில்” ஜெயிச்சா போதும் - மே.தீவுகளை சமாளிக்குமா இந்தியா? அரையிறுதி வாய்ப்பு
Ind vs Zim: கதம் கதம்... சேப்பாக்கில் ஜிம்பாப்வேயை ஊதி தள்ளிய இந்தியா! வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நாக் அவுட்டுக்கு ரெடி
Ind vs Zim: கதம் கதம்... சேப்பாக்கில் ஜிம்பாப்வேயை ஊதி தள்ளிய இந்தியா! வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நாக் அவுட்டுக்கு ரெடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Modi visit to Tamil Nadu: நெருங்கும் தேர்தல்..! தமிழகத்தில் இன்று கால் பதிக்கும் மோடி.. யாரை சந்திக்கிறார்.? எங்கெல்லாம் செல்கிறார்.?
நெருங்கும் தேர்தல்..! தமிழகத்தில் இன்று கால் பதிக்கும் மோடி.. யாரை சந்திக்கிறார்.? எங்கெல்லாம் செல்கிறார்.?
Vijay Sangeetha: சங்கீதா போட்ட குண்டு..! குற்றச்சாட்டுகளால் ஆடிப்போயிருக்கும் தவெக விஜய் - அரசியல் சதியா?
Vijay Sangeetha: சங்கீதா போட்ட குண்டு..! குற்றச்சாட்டுகளால் ஆடிப்போயிருக்கும் தவெக விஜய் - அரசியல் சதியா?
PAK Vs SL: பங்காளிக்கு வந்த சோதனை..! இலங்கை வேலையை காட்டுமா? பாகிஸ்தானுக்கு அரையிறுதி டிக்கெட்?
PAK Vs SL: பங்காளிக்கு வந்த சோதனை..! இலங்கை வேலையை காட்டுமா? பாகிஸ்தானுக்கு அரையிறுதி டிக்கெட்?
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
மனைவியை ஏமாற்றிய விஜய் தியாகியா ! குமட்டலை ஏற்படுத்தும் தவெக ஆதரவாளர்களின் சோசியல் மீடியா பதிவுகள்
மனைவியை ஏமாற்றிய விஜய் தியாகியா ! குமட்டலை ஏற்படுத்தும் தவெக ஆதரவாளர்களின் சோசியல் மீடியா பதிவுகள்
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
இசையமைக்க மறுத்த இளையராஜா.. காலில் விழுந்த பார்த்திபன் - நடந்தது என்ன?
இசையமைக்க மறுத்த இளையராஜா.. காலில் விழுந்த பார்த்திபன் - நடந்தது என்ன?
Embed widget