Vijay Sangeetha: சங்கீதா போட்ட குண்டு..! குற்றச்சாட்டுகளால் ஆடிப்போயிருக்கும் தவெக விஜய் - அரசியல் சதியா?
Vijay Sangeetha Divorce: தவெக தலைவர் விஜய்க்கு அவரது மனைவி சங்கீதா முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள், அரசியல் சதியா என்ற விவாதங்களும் சமூக வலைதளங்களில் தீவிரமடைந்துள்ளன.

Vijay Sangeetha Divorce: விவாகரத்து மனுவில் மனைவி சங்கீதா முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக, தவெக தலைவர் விஜய் தரப்பிலிருந்து இதுவரை எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
தேர்தலுக்கு தயாராகும் தவெக..
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கி, அரசியல் களம் புகுந்துள்ளார். ஆரம்பத்தில் அதிரடியாக பேசி வந்த அவருக்கு ரசிகர்கள் மற்றும் இளம் தலைமுறையினரிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், கரூரில் நடந்த துயர சம்பவம், அந்த கட்சியின் மீது படிந்த அழியாத கறையாக மாறியது. அதலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்த அந்த கட்சி, தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் தவெகவிற்கும் - திமுகவிற்கும் இடையே தான் போட்டி என பேசி வருகிறார். இதனிடையே விஜய்க்கும் - மற்றொரு நடிகைக்கும் இடையே தொடர்பு இருப்பதாக, பாஜக மாநில தலைவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் பிறகு அவர் மன்னிப்பும் கேட்டார்.
விஜய் மீது மனைவி சங்கீதா குற்றச்சாட்டு:
இந்நிலையில் தான், கணவர் விஜயிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு பொதுவெளியில் கசிந்தது. அதில், “தனது கணவருக்கு திருமணத்தை மீறிய தகாத உறவு இருக்கிறது. எனவே அவரிடமிருந்து எனக்கு விவாகரத்து வேண்டும். கணவரின் வருமானம் மற்றும் அந்தஸ்து அடிப்படையில் எனக்கு ஜீவனாம்சம் வழங்கப்பட வேண்டும். விஜய் தரப்பில் இருந்து தனக்கு எந்தவித அழுத்தமும் வரக்கூடாது, தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வெளியிடுவேன். கணவரது தகாத உறவால் நானும் எனது குழந்தைகளும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம்” என சங்கீதாவின் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பேசுபொருளான விவாகரத்து மனு
சங்கீதாவின் மனுவில் விஜய்க்கு எதிராக குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளன. ஒரு சில வாரங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், வாக்காளர்கள் குறிப்பாக பெண்கள் இடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தவெக ஆதரவாளர்கள் அடுத்த என்பதை போன்று செய்வதறியாமல் திகைத்து போயுள்ளனர் எனவும் கூறப்படுகிறது. பல்வேறு தரப்பினரும் ஒவ்வொரு விதமான கருத்துகளை தெரிவித்து வந்தாலும், விஜய் தரப்பிலிருந்து இதுதொடர்பான அதிகாரப்பூர்வ விளக்கம் ஏதும் வரவில்லை.
விஜய்க்கு எதிரான அரசியல் சதியா?
இதனிடையே, சரியாக தேர்தல் நெருக்கத்தில் வெளியாகியுள்ள சங்கீதாவின் விவாகரத்து மனுவின் பின்னணியில், விஜய்க்கு எதிரான சதி இருக்குமோ என்ற சந்தேகங்களும் எழாமல் இல்லை. பெண்கள் மற்றும் இளம் தலைமுறையினரிடையே தங்களது தலைவருக்கு இருக்கும் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக, ஒருவரது தனிப்பட்ட பிரச்னையை திமுக மற்றும் பாஜகவினர் அரசியல் சதி செய்வதாக தவெக ஆதரவாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையாகிவிடாது, முறையான விசாரணைக்கு பிறகே அவை நிரூபணம் செய்ய முடியும். ஆனால், எதிர்தரப்பின் கருத்தை கூட கேட்காமல், விஜய் மீது குற்றவாளி முத்திரை குத்த தொடங்கியிருப்பதை ஏற்கமுடியாது எனவும் பேசி வருகின்றனர். விரைவில் விஜய் தரப்பில் இருந்தும் விவாகரத்து மனு மற்றும் மனைவி சங்கீதாவின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விளக்க அறிக்கை வரும் என தவெக ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
























