மேலும் அறிய

ஓபிஎஸ்-ன் 'அறிவாலய பக்தி': ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு! பதவிக்காக எந்த எல்லைக்கும் செல்வார் எனவும் விமர்சனம் !

பதவிக்காக தர்மயுத்தம் 1.o, தர்மயுத்தம் 2.o ஆரம்பித்தார் தற்போது அறிவாலயத்தில் சேர்ந்து தர்மயுத்தம் 3.o  ஆரம்பித்துவிட்டார் இன்றைக்கு நாக்கில் நரம்பு இல்லாத வகையில் ஓபிஎஸ் பேசுகிறார்.

ஜெயலலிதா இருக்கும் காலத்தில் யாரும் தன்னை மீறி தென்மாவட்டங்களில் வளரக்கூடாது என அமைதிப்படை அமாவாசை போல ஓபிஎஸ் இருந்தார்.

ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு
 
மதுரை செய்தியாளர்கள் அரங்கத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது...,” தமிழகத்தில் பரபரப்பான சூழ்நிலையில் திமுகவில் ஓபிஎஸ் இணைந்துள்ளார். திமுகவிற்கு விசுவாசமாக இருந்து உள்ளார். என்பது இன்றைக்கு வெட்ட வெளிச்சமாக உள்ளது. பன்னீர்செல்வம் ஆரம்பத்தில் காங்கிரஸில் இருந்தார். அதனைத் தொடர்ந்து அதிமுகவில் இணைந்தார் குறிப்பாக ஜெயலலிதா சேவல் சின்னத்தில் நின்றார் அவருக்கு எதிராக போடி தொகுதியில் இரட்டைப் புறாவிற்கு வேலை செய்தார். இதனை தொடர்ந்து அதிமுக ஒன்றான பின்பு அதிமுகவில் இணைந்து சட்டமன்ற உறுப்பினர், வருவாய்த்துறை அமைச்சர், அம்மாவிற்கு சோதனை வந்த நேரங்களில் முதலமைச்சர், அதனை தொடர்ந்து நிதி அமைச்சர், பொதுப்பணித்துறை அமைச்சர், நெடுஞ்சாலை துறை அமைச்சர், எதிர்க்கட்சி தலைவர், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இப்படி பல்வேறு பகுதி பதவிகளை தொண்டர்களின் உழைப்பால் பெற்றார்.
 
காட்டி கொடுத்து தான் இருந்தார்.
 
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்பு ஆட்சிக்கு எதிராக வாக்களித்தார், அவரை மன்னித்து  எடப்பாடி பழனிசாமி அவருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கினார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் வேலை செய்யவில்லை 2021 தேர்தலில் கூட ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்லி இருப்பார். திமுகவின் கைக்கூலியாக எட்டப்பர் வம்சம் போல காட்டி கொடுத்து தான் இருந்தார். தனக்கு அதிகாரம், பதவி வேண்டும் என்றால் எந்த எல்லைக்கும் போவார். தனக்கு பதவி இல்லை என்றால் அழிந்து போக வேண்டும் என்று நினைப்பார். திமுக பொய் வழக்கு போடப்பட்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தண்டனை பெற்ற இடைக்காலங்களில் தொடர்ந்து முதலமைச்சராக இருந்தார்  இதன் மூலம் திமுகவிற்கு தொடர்புக்கு இருக்கிறதோ திமுகவில் உளவாளியாக இருக்கிறார் என்ற சந்தேகம் எல்லோருக்கும் ஏற்பட்டது.
 
விஷத்தை ஊத்தி அழிக்க பார்ப்பார்
 
தற்போது அவர் எடுத்த முடிவு தனிப்பட்ட முடிவு ஆனால் அதிமுக ஆட்சிக்கு வராது அதே போல தென் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி யாரையும் வளர விட மாட்டார் என்ற பச்சைப் பொய் கூறுகிறார். சட்டமன்ற துணைத் தலைவராக அவரை நீக்கிய பின்பு தென் மாவட்டத்தை சேர்ந்த எனக்குத்தான் அந்த வாய்ப்பு எடப்பாடியார் வழங்கினார். தொடர்ந்து தென் மாவட்டங்களில் உள்ள அனைவருக்கும் பல்வேறு வாய்ப்புகள் எடப்பாடி பழனிசாமி உருவாக்கி கொடுத்தார் இன்றைக்கு தென் மாவட்ட முழுவதும் அவருக்கு பக்கபலமாக துணையாக இருக்கிறது. இதே சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை ஒரு வருடம் அவருக்கு தர மனமில்லை என்பது அனைவருக்கும் தெரியும். அம்மாவும் இருக்கும் காலத்திலே அமைதிப்படை அமாவாசையாக ஓபிஎஸ் இருந்தார். தன்னைத் தவிர யாரும் வளரக்கூடாது என்று நினைத்தார் ‌அப்படி வளரும் நபர்களை விஷத்தை ஊத்தி அழிக்க பார்ப்பார். 
 
தர்மயுத்தம் 3.O ஆரம்பித்துவிட்டார்.
 
அதிமுகவிற்கு கெட்ட நேரம் விலகிவிட்டது இனி நல்ல நேரம் சுபநேரம் வந்துவிட்டது. பதவிக்காக தர்மயுத்தம் 1.O, தர்மயுத்தம் 2. O ஆரம்பித்தார் தற்போது அறிவாலயத்தில் சேர்ந்து தர்மயுத்தம் 3.O  ஆரம்பித்துவிட்டார். இன்றைக்கு நாக்கில் நரம்பு இல்லாத வகையில் ஓபிஎஸ் பேசுகிறார். தென் மாவட்டங்களில் 58 சட்டமன்ற தொகுதி உள்ளது. இந்த தொகுதிகளில் 90% அதிமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் தொடர்ந்து. அதிமுக நிர்வாகிகளை திமுக சேர்த்து வருகிறது. இதனால்  அண்ணா அறிவாலயம், தற்போது அனைத்திந்திய அண்ண திமுக அறிவாலயமாக மாறிவிட்டது. ஸ்டாலின் திமுக தொண்டர்கள் நம்பி இல்லை திமுக படை இல்லை அம்மா படை நம்பித்தான் உள்ளது என்று வெட்ட வெளிச்சமாகி உள்ளது. பொதுவாக எடப்பாடி பழனிசாமி தனிப்பட்ட  எந்த முடிவு எடுக்க மாட்டார். மூத்த தலைமைகளை நிர்வாகிகள், மாவட்ட கழகச் செயலாளர்கள் ,கலந்து பேசி பொதுகுழுவில் தான் முடிவு எடுப்பார், பொதுக்குழு முடிவின் படிதான் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு ஸ்டாலின் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் பதவிக்காக எந்த எல்லைக்கும் பன்னீர்செல்வம் செல்வார். அதிமுகவில் எந்த கிளைச் செயலாளர் செல்லவில்லை கிளைச் செயலாளர் தன் பதவி விட்டுக் கொடுக்க மாட்டார் தான் இறந்து போனாலும் தன் மீது அதிமுக கொடியை வைக்க வேண்டும் என்று தான் விரும்புவார்.  போர்க்களத்தில் எதிரிடம் சரணடைய கூடாது அப்படி நிலை ஏற்பட்டால் சாவதே மேல் என்று வீரர்கள் நினைப்பார் அது போலத்தான் அதிமுக தொண்டர்கள் எனக் கூறினர்.

தலைப்பு செய்திகள்

மீனாட்சி கோவில் நில மோசடி: துணை ஆட்சியர் அன்பழகன் அதிரடி பணியிடை நீக்கம் - ஆணையர் உத்தரவு!
மீனாட்சி கோவில் நில மோசடி: துணை ஆட்சியர் அன்பழகன் அதிரடி பணியிடை நீக்கம் - ஆணையர் உத்தரவு!
NEET கலந்தாய்வில் தவறாக தேர்வு செய்த பிரிவை மாற்ற மாணவருக்கு வாய்ப்பு - உயர்நீதிமன்றம் !
NEET கலந்தாய்வில் தவறாக தேர்வு செய்த பிரிவை மாற்ற மாணவருக்கு வாய்ப்பு - உயர்நீதிமன்றம் !
பழனி நில முறைகேடு: வழக்கறிஞர் மரணத்தில் சந்தேகம்; சிபிஐக்கு மாற்றுமா உயர்நீதிமன்றம்?
பழனி நில முறைகேடு: வழக்கறிஞர் மரணத்தில் சந்தேகம்; சிபிஐக்கு மாற்றுமா உயர்நீதிமன்றம்?
வறட்சிக்கு தீர்வு: விருதுநகர் விவசாயிகளுக்கு 100% மானியத்தில் பண்ணைக்குட்டைகள்!
வறட்சிக்கு தீர்வு: விருதுநகர் விவசாயிகளுக்கு 100% மானியத்தில் பண்ணைக்குட்டைகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget