(Source: ECI/ABP News/ABP Majha)
மதுரை: ரயில் பாதை பராமரிப்பு பணிகள் - ரயில் போக்குவரத்து சேவையில் மாற்றம்
ராஜபாளையம் - சங்கரன் கோவில் ரயில் நிலையங்கள் இடையே மற்றும் விருதுநகர் ரயில் நிலையத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது.
ராஜபாளையம் - சங்கரன் கோவில் பிரிவில் ரயில் பாதை பலப்படுத்தும் பணிகள் தொய்வில்லாமல் தொடர்ந்து நடைபெற மதுரையில் காலை 11.30 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை - செங்கோட்டை (06663), செங்கோட்டையில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்பட வேண்டிய செங்கோட்டை - மதுரை (06664) முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் செப்டம்பர் 11 முதல் செப்டம்பர் 15 வரை முழுமையாக ரத்து செய்யப்படும்.
- "எடப்பாடி பழனிசாமியிடம் அவரின் கட்சி எம்.எல்.ஏக்களே பேசுவதில்லை” : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு..
"ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நநடைபெறுகிறது. இதன் காரணமாக ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
— arunchinna (@arunreporter92) September 10, 2022
Further details for follow - @abpnadu#madurai | @train | #TRAIN | #tamilnadu | #viruthunagar
| @MritunjaySinh18 | @LPRABHAKARANPR3 ... pic.twitter.com/mcAxgD64qV
ஏற்கனவே இந்த ரயில்கள் செப்டம்பர் 10 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது மேலும் சில நாட்களுக்கு ரயில் ரத்து தொடர்கிறது. விருதுநகர் ரயில் நிலையத்தில் செப்டம்பர் 14 & 15 ஆகிய நாட்களில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பாலக்காடு - திருச்செந்தூர் விரைவு ரயில் (16731) மற்றும் திருச்செந்தூர் பாலக்காடு விரைவு ரயில் (16732) ஆகியவை செப்டம்பர் 14 அன்று திண்டுக்கல் - திருச்செந்தூர் இடையேயும், செப்டம்பர் 15 அன்று மதுரை - திருச்செந்தூர் இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படும்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மதுரையில் வாடகைக்கு வீடு எடுத்து பாலியல் தொழில்! காவலர் உட்பட 3 பேர் கைது - இளம் பெண்கள் மீட்பு!
செப்டம்பர் 15 அன்று பகுதியாக ரத்து செய்யப்பட்ட திருச்செந்தூர் - பாலக்காடு ரயில் மதுரையில் இருந்து மாலை 06.30 மணிக்கு புறப்படும்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்