மேலும் அறிய

RRB Recruitment 2026: ரயில்வேயில் 22,695 குரூப் டி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!

RRB Level 1 Recruitment 2026: குரூப் டி பணியிடங்களுக்கான விண்ணப்பப் பதிவுத் தேதியை ரயில்வே தேர்வு வாரியம் மார்ச் 9ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.

ரயில்வே துறையில் காலியாக உள்ள 22,695 குரூப் டி (Group D) பணியிடங்களுக்கான விண்ணப்பப் பதிவுத் தேதியை ரயில்வே தேர்வு வாரியம் நீட்டித்துள்ளது.

முன்னதாக ஜனவரி 21ஆம் தேதி தொடங்கவிருந்த பதிவு, மாற்றி அமைக்கப்பட்டு ஜனவரி 31, 2026 அன்று தொடங்கியது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் rrbapply.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து வந்தனர்.

இந்த நிலையில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க மார்ச் 2, 2026 (இரவு 11:59) கடைசி நாளாக இருந்த நிலையில், மார்ச் 9ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதேபோல விண்ணப்பக் கட்டணத்தை மார்ச் 11ஆம் தேதி வரை செலுத்தலாம். விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள மார்ச் 12 முதல் 21ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 

பணியிடங்கள், சம்பளம்

மொத்தம் உள்ள 22,695 பணியிடங்களில் பெரும்பாலானவை பொறியியல் துறையைச் சார்ந்த 'டிராக் மெயின்டெய்னர் கிரேடு IV' (Track Maintainer Grade IV) போன்ற பதவிகளாகும். தேர்வாகும் நபர்களுக்கு 7-வது ஊதியக் குழுவின்படி (Level 1) ஆரம்ப அடிப்படைச் சம்பளமாக மாதம் ரூ. 18,000 வழங்கப்படும்.

வயது வரம்பு எப்படி?


ஜனவரி 1, 2026 அன்று விண்ணப்பதாரர்கள் 18 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைப்படி, ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தேர்வு மற்றும் கட்டணம்


தேர்வு நடைமுறையானது கணினி வழித் தேர்வு (CBT) மற்றும் உடற்தகுதித் தேர்வு (PET) என இரண்டு கட்டங்களாக நடைபெறும். பொது, ஓபிசி மற்றும் இ.டபிள்யூ.எஸ் பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 500 ஆகும். இதில் முதல் நிலைத் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு ரூ. 400 கட்டணம் திருப்பித் தரப்படும்.

அதே நேரத்தில் தேர்வர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தால் அவை நிராகரிக்கப்படும். ஆனால், ஒரே விண்ணப்பத்தில் தகுதிக்கேற்ப பல பதவிகளைத் தேர்வு செய்துகொள்ளலாம்.

கல்வித் தகுதி (ITI அல்லது 10-ஆம் வகுப்பு) குறித்த கூடுதல் விவரங்களுக்கு ரயில்வே வாரியத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்க வேண்டியது அவசியம்.

ஆதார் சரிபார்ப்பு கட்டாயம்

விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, விண்ணப்பதாரர்களின் பெயர், பிறந்த தேதி மற்றும் புகைப்படம் ஆகியவை 10-ஆம் வகுப்புச் சான்றிதழில் உள்ள விவரங்களுடன் ஒத்துப்போவதை உறுதி செய்துகொள்ள வேண்டும். ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் முன்கூட்டியே புதுப்பித்துக் கொள்வது நல்லது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

விருதுநகரில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: 10,000+ வேலைகள்!
விருதுநகரில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: 10,000+ வேலைகள்!
TNPSC வரலாற்றிலேயே இல்லாத கொடூரம்! 5,000 காலிப்பணியிடங்களை மறைப்பதா? - அன்புமணி அதிரடி கேள்வி!
TNPSC வரலாற்றிலேயே இல்லாத கொடூரம்! 5,000 காலிப்பணியிடங்களை மறைப்பதா? - அன்புமணி அதிரடி கேள்வி!
JOB ALERT : இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
அரசு வேலை தேடுவோருக்கு நற்செய்தி! AAI-யில் 389 மேலாளர், ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்கள்!
அரசு வேலை தேடுவோருக்கு நற்செய்தி! AAI-யில் 389 மேலாளர், ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget