மேலும் அறிய

Iran Cluster Bomb Attack: முதல் முறையாக கொத்து குண்டு ஏவுகணையை வீசிய ஈரான்; அதிர்ச்சியில் இஸ்ரேல்; பின்னணியில் யார்.?

ஈரான். இஸ்ரேல் மீது கொத்து வெடிமருந்துகளை வீசுக்கூடிய பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதாக இஸ்ரேலிய ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர். முதல் முறையாக ஈரான் இதை பயன்படுத்தியுள்ளது, பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஈரான், தங்கள் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, வெறித்தனமான பதிலடி தாக்குதலை, இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகள் மீது நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நேற்று முதல் முறையாக இஸ்ரேல் மீது கிளஸ்டர் பாம்ப்(Cluster Bomb) எனப்படும் கொத்து வெடிமருந்துகளை வீசக்கூடிய பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதாக இஸ்ரேல் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம், ஈரானுக்கு அந்த தொழில்நுட்பத்தை கற்றுக்கொடுத்தது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதன் பின்னணியில் சீனாவோ, ரஷ்யாவோ இருக்குமோ என்ற சந்தேகத்தையம் எழுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

பதில் தாக்குதலை தீவிரப்படுத்திய ஈரான்

கடந்த மாத இறுதியில் அமெரிக்கா-ஈரான் இடையே 3-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், அதற்கு அடுத்த நாளே, அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுப் படைகள் ஈரான் மீது தாக்குதலை தொடங்கின. அதில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்ளிட்ட உயர்மட்டத் தலைவர்கள் சுமார் 45 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, ஏற்கனவே பதிலடியை தொடங்கியிருந்த ஈரான், தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியது.

கமேனி கொலைக்கு பழிவாங்காமல் விடமாட்டோம் என ஈரான் அதிபர் தெரிவித்த நிலையில், இஸ்ரேல் மட்டுமல்லாமல், துபாய், குவைத், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட அமெரிக்க ஆதரவு அரபு நாடுகள் மீதும்  தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது ஈரான். மறுபுறம், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகளும் ஈரான் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றன. அதில் இதுவரை பலியானோரின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொத்து குண்டுகளுடன் பாலிஸ்டிக் ஏவுகணை

இப்படிப்பட்ட சூழலில், இஸ்ரேல் மீது நேற்று முதல் முறையாக கிளஸ்டர் பாம்ப்(Cluster Bomb) எனப்படும் கொத்து வெடிகுண்டுகளை வீசக்கூடிய பாலிஸ்டிக் ஏவுகணையை ஈரான் வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை இஸ்ரேலிய ராணுவ அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். கொத்து வெடிமருந்துகளை ஏந்திய குறைந்தபட்சம் ஒரு ஈரானிய பாலிஸ்டிக் ஏவுகணை மத்திய இஸ்ரேலை தாக்கியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலிய அறிக்கைகளின்படி, ஏவுகணையின் போர்முனை, தரையில் இருந்து சுமார் நான்கு மைல்கள் அல்லது தோராயமாக 7 கிலோமீட்டர் உயரத்தில் பிளந்ததாகவும், பின்னர் அது சுமார் 20 வெடிமருந்துகளை வெளியிட்டு, மத்திய இஸ்ரேலின் மீது சுமார் 5 மைல்கள் சுற்றளவில், தோராயமாக 8 கிலோமீட்டர் பரப்பளவில் சிதறடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை முதல், இஸ்ரேல் மீது ஈரான் குறைந்தது 5 கிளஸ்டர் ஏவுகணைகளை ஏவியுள்ளது என்றும், இவை அனைத்தும் பொதுமக்கள் நிறைந்த அடர்த்தியான பகுதிகளை நோக்கி செலுத்தப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

கிளஸ்டர் வெடிகுண்டு ஏவுகணை எவ்வாறு செயல்படுகிறது

ஒரு வழக்கமான பாலிஸ்டிக் ஏவுகணை, பொதுவாக 500 முதல் 1,000 கிலோகிராம் வரை எடையுள்ள ஒரு பெரிய போர்முனையை(Warhead) சுமந்து செல்லும். ஆனால், கிளஸ்டர் போர்முனைகளின் செயல்பாடு வித்தியாசமானது. அது, ஒரே வெடிப்பில் முழுமையாக வெடிப்பதற்கு பதிலாக, நடுவானில் ஏவுகணை திறந்து, சிறிய குண்டுகளை வெளியிடுகிறது. ஒவ்வொரு வெடிமருந்தும் பொதுவாக 7 கிலோகிராம் வரை வெடிக்கும் மின்னூட்டத்தைக் கொண்டிருக்கும். இது, ஹமாஸ் மற்றும் ஹெஸ்பொல்லா போன்ற போராளிக் குழுக்களால் பயன்படுத்தப்படும் குறுகிய தூர ராக்கெட்டுகளின் சக்திக்கு சமமானது.

கீழே விழும் ஒவ்வொரு தனிப்பட்ட குண்டும், பரந்த பகுதியில் சிதறி விழுவதால், ஒட்டுமொத்த அழிவுத் தடம் மிகப் பெரியதாக இருக்கும். இந்த ஏவுகணை நடுவானில் இடைமறிக்கப்படும் போது, கிளஸ்டர் ஆயுதங்கள் மிகவும் ஆபத்தானவை என்று ராணுவ நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். அதாவது, ஒரு ஏவுகணை அதன் பாதையை நிறைவு செய்தால், அதிலிருந்து விழும் குண்டுகள் பொதுவாக தரையில் மோதும்போது வெடிக்கும். ஆனால், நடுவானில் இடைமறிப்பு ஏற்பட்டால், வெடிமருந்துகள் எதிர்பாராத விதமாக சிதறக்கூடும், சில நேரங்களில், அதில் பல குண்டுகள்  விழுந்து வெடிக்காமல் இருக்கும். இந்த வெடிக்காத குண்டுகள், பின்னர் தொந்தரவு ஏற்பட்டால் வெடிக்கக்கூடும். இதனால் பொதுமக்கள் மற்றும் மீட்புக் குழுக்களுக்கு நீண்டகால ஆபத்துகள் ஏற்படும் வாய்ப்பு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரானுக்கு பின்னணியில் யார்.?

தற்போது நடைபெற்றுவரும் போரில், ஈரான் முதல் முறையாக இத்தகைய ஆயுதத்தை பயன்படுததியுள்ளது, பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இஸ்ரேலிய ராணுவ ஆய்வாளர்கள், ஈரான் கிளஸ்டர் போர்முனைகளை சுமந்து செல்லும் திறன் கொண்ட குறைந்தது 3 வகையான ஏவுகணைகளை உருவாக்கியுள்ளது என்று நம்புகின்றனர்.

இவற்றில், குறுகிய தூர சோல்ஃபாகர் ஏவுகணை, நீண்ட தூர காதர் தொடர் மற்றும் பெரிய கோர்ராம்ஷஹர் பாலிஸ்டிக் ஏவுகணை ஆகியவை அடங்கும். 3 அமைப்புகளிலும், கோர்ராம்ஷஹர் மிகவும் சக்திவாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இது, சுமார் 2,000 கிலோமீட்டர் தூரம் சென்று தாக்கும் திறன் கொண்டது என்றும், 80 கிளஸ்டர் குண்டுகளை சுமந்து செல்ல முடியும் என்றும் ஈரான் கூறுகிறது.

இந்த ஆயுதங்களை அறிமுகப்படுத்துவது மோதலின் போக்கை மாற்றும் என்று ராணுவ ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இது, பொதுமக்களுக்கு ஆபத்தை அதிகரிக்கும் மற்றும் சண்டை முடிந்த பிறகும் நீண்ட காலத்திற்கு ஆபத்தானதாக இருக்கக்கூடிய வெடிக்காத வெடிமருந்துகளை விட்டுச்செல்லும்.

ஒருபுறம் ராணுவ அச்சுறுத்தல் மட்டுமல்லாமல், ஈரான் இந்த திறனை எவ்வாறு வளர்த்துக் கொண்டது என்ற கேள்வியும் இப்போது மையப்புள்ளி ஆகியுள்ளது. குறிப்பாக, மேம்பட்ட ஆயுதத் திட்டங்களுடன் தொடர்புடைய விஞ்ஞானிகள் அடிக்கடி படுகொலைகளுக்கு இலக்காகி வரும் ஒரு நாட்டில், இத்தகைய ஆயுதம் தயாரிப்பதில், வெளிப்புற உதவி ஒரு பங்கைக் கொண்டிருந்திருக்கலாம் என்று இஸ்ரேலிய நிபுணர்கள் கூறியுள்ளனர். ஒருவேளை, அதற்கு ரஷ்யா அல்லது சீனாவிலிருந்து ராணுவ அறிவு பரிமாற்றம் செய்யப்படலாம் என்ற யூகங்களை ஏற்படுத்தியுள்ளது.

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

USA Iran War: சீனாவிடம் இருந்து செயற்கை கோளையே விலைக்கு வாங்கிய ஈரான் - வளைகுடா வர்த்தகத்தின் மீது டார்கெட்
USA Iran War: சீனாவிடம் இருந்து செயற்கை கோளையே விலைக்கு வாங்கிய ஈரான் - வளைகுடா வர்த்தகத்தின் மீது டார்கெட்
Trump on China:
Trump on China: "நாங்க ரெண்டு பேரும் இப்போ க்ளோஸ்" - சீனா குறித்து டிரம்ப் போட்ட அதிரடி பதிவு: ஈரான் விவகாரத்தில் ட்விஸ்ட்!
US Iran War China: சத்தமில்லாமல் அமெரிக்காவை செஞ்சுவிட்ட சீனா; ஈரானுக்கு உதவிய உளவு செயற்கைக்கோள்.? முக்கிய தகவல்
சத்தமில்லாமல் அமெரிக்காவை செஞ்சுவிட்ட சீனா; ஈரானுக்கு உதவிய உளவு செயற்கைக்கோள்.? முக்கிய தகவல்
Ukraine Vs Russia: உலகை வியப்பில் ஆழ்த்திய உக்ரைன்; போர்க்களத்தில் தெறிக்கவிட்ட ரோபோக்கள்; சரணடைந்த ரஷ்ய வீரர்கள்
உலகை வியப்பில் ஆழ்த்திய உக்ரைன்; போர்க்களத்தில் தெறிக்கவிட்ட ரோபோக்கள்; சரணடைந்த ரஷ்ய வீரர்கள்
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: “தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் தீ பரவட்டும்.!“; தொகுதி மறுவரையறையை எதிர்த்து முதலமைச்சர் தீயான பதிவு
“தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் தீ பரவட்டும்.!“; தொகுதி மறுவரையறையை எதிர்த்து முதலமைச்சர் தீயான பதிவு
USA Iran War: சீனாவிடம் இருந்து செயற்கை கோளையே விலைக்கு வாங்கிய ஈரான் - வளைகுடா வர்த்தகத்தின் மீது டார்கெட்
USA Iran War: சீனாவிடம் இருந்து செயற்கை கோளையே விலைக்கு வாங்கிய ஈரான் - வளைகுடா வர்த்தகத்தின் மீது டார்கெட்
கமலை கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்! திமுக மீது அன்று ATTACK.. இன்று ATTRACT! அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!
கமலை கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்! திமுக மீது அன்று ATTACK.. இன்று ATTRACT! அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!
TN Election 2026: விஜய், ஸ்டாலின், எடப்பாடி இன்று எங்கெல்லாம் பரப்புரை - ட்ராஃபிக் பிரச்னை, தவிர்க்க வேண்டிய ரூட்கள்
TN Election 2026: விஜய், ஸ்டாலின், எடப்பாடி இன்று எங்கெல்லாம் பரப்புரை - ட்ராஃபிக் பிரச்னை, தவிர்க்க வேண்டிய ரூட்கள்
Delimitation: கூடுதல் மக்களவை தொகுதிகள், கொதிப்பில் தென் மாநிலங்கள் - விதி 66-ஐ கையிலெடுக்கும் மத்திய அரசு
Delimitation: கூடுதல் மக்களவை தொகுதிகள், கொதிப்பில் தென் மாநிலங்கள் - விதி 66-ஐ கையிலெடுக்கும் மத்திய அரசு
VF MPV 7 Vs Rivals: போட்டியாளர்களை முந்துகிறதா வின்ஃபாஸ்டின் VF MPV 7- எதில் பெஸ்ட்? எங்கே பிரச்னை? முழு கம்பேரிசன்
VF MPV 7 Vs Rivals: போட்டியாளர்களை முந்துகிறதா வின்ஃபாஸ்டின் VF MPV 7- எதில் பெஸ்ட்? எங்கே பிரச்னை? முழு கம்பேரிசன்
TVK Election Manifesto: தவெக தேர்தல் வாக்குறுதிகளை இன்று வெளியிடுகிறார் விஜய்! எத்தனை மணிக்கு?
TVK Election Manifesto: தவெக தேர்தல் வாக்குறுதிகளை இன்று வெளியிடுகிறார் விஜய்! எத்தனை மணிக்கு?
MK Stalin: ”சேலத்தைப் புறக்கணிக்கவில்லை!ஸ்டீல் போல திட்டங்களைச் செயல்படுத்தினோம்
MK Stalin: ”சேலத்தைப் புறக்கணிக்கவில்லை!ஸ்டீல் போல திட்டங்களைச் செயல்படுத்தினோம்" முதல்வர் ஸ்டாலின் அதிரடி!
Embed widget