மதுரையில் வாடகைக்கு வீடு எடுத்து பாலியல் தொழில்! காவலர் உட்பட 3 பேர் கைது - இளம் பெண்கள் மீட்பு!
காவலர் பாலியல் தொழில் வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மதுரை மாநகர் k.புதூர் (டி.ஆர்.ஒ.,) காலனி முனியாண்டி கோயில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததுள்ளது. அதனை தொடர்ந்து விபசார தடுப்பு பிரிவு விஜயலட்சுமி அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டை அதிரடியாக சோதனை மேற்கொண்டபோது பெண் உள்ளிட்ட 3 பேரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.
மதுரை கோ.புதூர் பகுதி டி.ஆர்.ஓ., காலனி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து விபச்சாரம் நடத்திய காவலர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் இளம் பெண்கள் மீட்கப்பட்டது. மதுரையில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.@iamarunchinna | @MaduraiEmerging @abpnadu | #Madurai pic.twitter.com/oLTPrTbChr
— arunchinna (@arunreporter92) September 8, 2022






















