மேலும் அறிய

"எடப்பாடி பழனிசாமியிடம் அவரின் கட்சி எம்.எல்.ஏக்களே பேசுவதில்லை” : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு..

AM PM பாக்காத CM என்ற போஸ்டர் அடித்திருந்தார்கள். ஆனால் நான் MM CM ஆக இருக்க வேண்டும் மினிட் டூ மினிட் சிம்-ஆக இருக்க ஆசைப்படுகிறேன் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மதுரையில் பேச்சு 

மதுரையில் நடைபெற்ற வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி  மகனின் திருமண விழாவை தமிழக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் நடத்திவைத்தார். இதில் தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ, மற்றும்  தமிழக அமைச்சர்கள் வி.சி.க., தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் முத்தரசன் ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்..,”அமைச்சர் மூர்த்தி பொதுக்கூட்டம் , அரசு நிகழ்ச்சி என எதுவாக இருந்தாலும் மிகப்பிரமாண்டமாக தான் செய்வார்.  அதனால் மகனின் திருமணத்தை கட்சிக்கு பயன்பட வேண்டும், கட்சியின் ஆட்சியின் சாதனை தெரிய வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த திருமணத்தை நடத்தியுள்ளார். ஒரே கல்லில் பல மாங்காய் அடிக்கும் வகையில் செயல்பட கூடியவர் பி.மூர்த்தி, அமைச்சரவை குறித்து பேசிக்கொண்டிருந்தபோது மூர்த்திக்கு அமைச்சர் வழங்குவதாக முடிவெடுத்தோம், அப்போது படிக்காதவர், கோபக்காரர் எப்படி அமைச்சர் வழங்குவதை யோசித்து அச்சத்தோடு வணிகவரித்துறையை கொடுத்தோம்,  அச்சப்பட்டோம் ஆனால்  பொறுமையின் சிகரமாக மாறி சிறப்பாக செயல்படுகிறார்., இப்போது நிதிச்சுமை உள்ளது, தற்போது வணிக பதிவுத்துறை வரலாற்றில் 13ஆயிரத்தி 913 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. பத்திர பதிவு அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறை, திங்கள் தோறும் பத்திரப்பதிவுத்துறை சார்பில் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. சார் பதிவாளர் அலுலவலகங்களில் மாற்றுதிறனாளிகளுக்கான வசதி, பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருந்துவந்து அலுவலகங்களில் உயர மேடை நீக்கியது நமது திராவிட மாடல் ஆட்சியில்தான். போலி பத்திரப்பதிவுகளை ரத்து செய்வதற்காக சட்ட திருத்தம் குடியரசு தலைவரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. தமிழகத்தில் மட்டுமே இது போன்ற சாதனை செய்யப்பட்டுள்ளதால் மற்ற மாநிலங்கள் இது குறித்து கேட்கின்றனர்.

மூர்த்தி பெருசா கீர்த்தி பெருசா என கேள்வி எழுப்பினால் எனக்கு கீர்த்திலாம் தெரியாது ஆனால் எனக்கு மூர்த்தி தான் பெரியதாக தெரிகிறார். மக்கள் நம்பை நம்பி அளித்த நமபிக்கைக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிவருகிறோம். எங்களுக்கு வாக்களிக்காதவர்களுக்கும் பயன்பெறும் வகையில் எங்கள் பணி இருக்கும் என கூறியதுபோல நிறைவேற்றிவருகிறோம். மக்களுக்கு நம் மீது அதிக நம்பிக்கை ஏற்பட்டுள்ளது, இனி எந்த தேர்தல் வந்தாலும் நாம்தான் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. நான் நிகழ்ச்சிக்கு செல்லும் போது இரு புறங்களிலும் பொதுமக்கள் உற்சாகமாக என்னை வரவேற்கின்றனர். மனுக்களை நம்பிக்கையோடு என்னிடம் தருகிறார். மனு அளித்தால் நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு தருகிறார்கள்.
உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பெறப்பட்ட 100நாட்களில் 75சதவித மனுக்களுக்கு தீர்வு எட்டியுள்ளோம், நான் செல்லும் போது யார் மனு வைத்திருந்தாலும் வாங்கிருவேன், மாற்றுத்திறனாளிகள் என்றால் நானே நேரில் சென்று வாங்குவேன், சில நேரங்களில் உடல் நலத்தை பார்த்துகொள்ளுங்கள் என நமது அரசின் மீது நம்பிக்கையோடு பாசத்தோடு உள்ளனர்.

மதுரையில் மாபெரும் கலைஞர் நூலகம் 75 % பணி நிறைவு, ஜல்லிக்கட்டு மைதான பணி, கீழடி பண்பாட்டு அரங்கம், பெருநகராட்சி குழுமம், சுற்றுவட்ட சாலை, மீனாட்சியம்மன் கோவில் கார் பார்க்கிங், தமுக்க மாநாட்டு மையம், பாதாள சாக்கடை அமைப்பு பணி, ஆட்சி பொறுப்பு ஏற்ற நாளில் இருந்து அனைவரும் ஓயாமல் மக்கள் பணி ஆற்றிவருகிறோம். AM , PM பாக்காத சிஎம் என MM CM ஆக இருக்க வேண்டும் மினிட் டூ மினிட் சிம் ஆக இருக்க ஆசை அப்படி இருந்து CM நம்பர் ஒன்னாக இருக்க வேண்டும் என பாடுபடுகிறோம்.
 
திமுக எம்.எல்.ஏக்கள் எடப்பாடியுடன் பேசுவதாக கூறுகிறார். அவருடைய எம்.எல்ஏக்களே அவருடன் பேசுவதில்லை.  திமுக எம்.எல்ஏக்கள் பேசுவதாக புருடா விடுகிறார், அம்மையார் மறைவிற்கு பின் அனைத்து தேர்தலிலும்  தோல்வியடைந்துள்ளனர். அவர்களுடைய கட்சியே பிளவுபட்டு போயுள்ளது, எடப்பாடியின் பதவி டெம்ப்ரவரி பதவி தான் பொய் பிரச்சாரத்தை பற்றி கவலை வேண்டாம், அதனை பற்றி பேச நேரமில்லை மக்கள் பணியில. மட்டுமே கவனம் செலுத்துவோம்” என்றார்
 

தலைப்பு செய்திகள்

விருதுநகர் 2026-27: ரூ.37,959 கோடி கடன் திட்டம் - மாவட்ட ஆட்சியர் வெளியீடு!
விருதுநகர் 2026-27: ரூ.37,959 கோடி கடன் திட்டம் - மாவட்ட ஆட்சியர் வெளியீடு!
விருதுநகரில் தேசிய குடற்புழு நீக்க நாள்: 7 லட்சம் குழந்தைகள், பெண்களுக்கு ஆரோக்கிய மாத்திரைகள்!
விருதுநகரில் தேசிய குடற்புழு நீக்க நாள்: 7 லட்சம் குழந்தைகள், பெண்களுக்கு ஆரோக்கிய மாத்திரைகள்!
விருதுநகர்: சதுரகிரி ஆடி அமாவாசை; 6 மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
விருதுநகர்: சதுரகிரி ஆடி அமாவாசை; 6 மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
Free Wi-Fi scheme : இலவசமாக WiFi.! மெரினா, பெசன்ட் நகர் பீச் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.! இணைப்பை பெறுவது எப்படி.?
இலவசமாக WiFi.! மெரினா, பெசன்ட் நகர் பீச் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.! இணைப்பை பெறுவது எப்படி.?
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Embed widget