Madurai: திடீர்னு வராங்க.. கையில் கத்தி! இரவானாலே திகிலாகும் மதுரை!
மதுரை விமான நிலையம் சுற்று வட்டார பகுதிகளில் அதிகளவு வழிப்பறி சம்பவமானது தொடர்கதையாக நடைபெறுவதால் பொதுமக்கள் இரவு நேரங்களில் அச்சத்துடன் வெளியே வந்து செல்கின்றனர்.
மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா பெருங்குடி நகரை சேர்ந்தவர் பால்பாண்டி இவரது மகன் பாண்டியராஜன் வயது (22) இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இரவு வேலை முடித்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது மதுரை விமான நிலையம் அருகே உள்ள மண்டேலா நகர் நான்கு வழிச்சாலை சந்திப்பில் இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் பாண்டியராஜனிடம் கத்தியை காட்டி ரூபாய் 950 ரூபாய் பணத்தை வழிப்பறி செய்துவிட்டு சென்றனர்.
#மதுரை விமான நிலையம் அருகே கத்தி முனையில் வாலிபரிடம் பணம் வழிப்பறி செய்த மூன்று வாலிபர்கள் கைது செய்து செய்யப்பட்டனர்.
— Arunchinna (@iamarunchinna) July 16, 2022
கத்து முனையில் பணம் வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் அவனியாபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.@UpdatesMadurai | @Act4madurai | #CrimesAgainstHumanity
எனவே இது குறித்து பாண்டியராஜன் அவனியாபுரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் வழிப்பறி செய்த குற்றவாளியை தேடி வந்தனர். இந்த நிலையில் மதுரை கீரைத்துறையை சேர்ந்த மாயகிருஷ்ணன் (வயது 24) சக்திவேல் (வயது 23) செந்தூர் ராஜ் (வயது 21 ஆகியோர் பாண்டியராஜனிடம் வழிப்பறி செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மூன்று பேரையும் கைது செய்து அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Sellur Raju: "பிரிந்து சென்றவர்கள் மனம் திருந்தி வந்தால் ஏற்றுக் கொள்வோம்" - பச்சை கொடி காட்டும் செல்லூர் ராஜூ !
இதேபோன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை அவனியாபுரம் பெட்ரோல் பங்கில் இரவில் டூவீலரில் வந்த மூன்று பேர் லாரி டிரைவரிடம் வழிப்பறியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இரவு நேரங்களில் மதுரை விமான நிலையம் சுற்று வட்டார பகுதிகளில் அதிகளவு வழிப்பறி சம்பவமானது தொடர்கதையாக நடைபெறுவதால் பொதுமக்கள் இரவு நேரங்களில் அச்சத்துடன் வெளியே வந்து செல்கின்றனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்