மேலும் அறிய

Atlee Salary: ரொம்ப ஓவர்... சம்பள விஷயத்தில் குருவையே ஓவர் டேக் பண்ண நினைக்கும் அட்லீ! தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்!

இயக்குனர் அட்லீ, தன்னுடைய குருவான ஷங்கரையே மிஞ்சும் விதத்தில் இயக்க உள்ள படங்களுக்கு சம்பளம் கேட்பதால், இவரை பார்த்ததுமே பல தயாரிப்பாளர்கள் தெறித்து ஓடுவதாக கூறப்படுகிறது.

இந்தியில் ஷாருக்கான், நயன்தாரா நடிக்க அட்லீ இயக்கிய ஜவான் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. சொல்லப்போனால், தொடர்ந்து தோல்விப் படங்களையே சந்தித்து வந்த இந்தி சினிமாவுக்கு ஜவான் வெற்றி எனர்ஜி பூஸ்டாக அமைந்தது. ஏனெனில் இந்த திரைப்படம் உலக அளவில் 1000 கோடியை வசூலை வாரிக்குவித்தது. இதையடுத்து சன்பிக்சர்ஸ் நிறுவனம் அட்லீயை வைத்து அடுத்த படத்தை தயாரிக்க திட்டமிட்டது. இந்த படத்தில் அல்லு அர்ஜூன் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. இப்படத்திற்காக அட்லீ கொடுத்த பட்ஜெட்டைப் பார்த்து ஒட்டுமொத்த சன்பிக்சர்ஸ் நிர்வாகத்திற்கும் தலை சுற்றிவிட்டதாம். அந்த அளவிற்கு மிகப்பெரிய பட்ஜெட்டை கொடுத்துள்ளார். இதனால் கடுப்பான சன் பிக்சர்ஸ் நிர்வாகம் அட்லீ சொல்லு பட்ஜெட்டிற்கு தங்களால் படத்தை தயாரிக்க முடியாது என மறுத்துவிட்டார்களாம்.

Atlee Salary: ரொம்ப ஓவர்... சம்பள விஷயத்தில் குருவையே ஓவர் டேக் பண்ண நினைக்கும் அட்லீ! தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்!

இதனிடையே, ஏற்கனவே ரெய்டு, சங்கர் இயக்கத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் வெளியான ராம்சரண் திரைப்படம் படுதோல்வி என நெருக்கடியில் சிக்கியிருக்கும் தில் ராஜுக்கு உதவ அல்லு அர்ஜூன் முடிவெடுத்துள்ளார். இதனால் அட்லீ கதையை தில் ராஜு தயாரிக்க அல்லு அர்ஜூன் பரிந்துரைத்துள்ளார். சன் பிக்சர்ஸிடம் ஒப்பந்தம் போடும் போது தனக்கு சம்பளமாக 55 கோடி ரூபாய் கேட்ட அட்லீ, தற்போது தில் ராஜூவிடம் 100 கோடி ரூபாய் கேட்டிருக்கிறாராம். இதைப் பார்த்து மிரண்டு போன தில் ராஜு இது நமக்கு செட் ஆகாது என கைவிரித்ததாக கூறப்படுகிறது. 

Atlee Salary: ரொம்ப ஓவர்... சம்பள விஷயத்தில் குருவையே ஓவர் டேக் பண்ண நினைக்கும் அட்லீ! தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்!

ஜவான் வெற்றியின் போதே சம்பளத்தை உயர்த்த அட்லீ திட்டமிட்டுள்ளார். ஆனால் சன் பிக்சர்ஸ் உடன் அதற்கு முன்னதாகவே 55 கோடிக்கு ஒப்பந்தம் செய்துவிட்டதால் அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம் என இருந்திருக்கிறார். அப்போது நடுவில் தில் ராஜு வரவே அவரால் தர முடியுமா முடியாதா என்று கூட யோசிக்காமல் 100 கோடி ரூபாயை சம்பளமாக கேட்டிருக்கிறார். தமிழில் விஜய் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட்டான தெறி படத்தை லிட்டில் ஜான் என்ற பெயரில் அட்லீ தயாரித்தார். வருண் தவான், கீர்த்தி சுரேஷ் நடித்த இப்படத்தை அட்லீயிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த காளிஸ் என்பவர் தயாரித்திருந்தார். ஆனால் படம் எதிர்பார்த்த அளவிற்கு போகாததால் அட்லீக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதையும் தனது சம்பளம் மூலம் சரி கட்ட நினைத்த அட்லீக்கு தமிழ், தெலுங்கு என இரண்டு பக்கமும் பிரம்மாண்ட தயாரிப்பாளர்களே தலைதெறிக்க ஓடும் அளவிற்கு ஆகிவிட்டது. அதே நேரம் இவருடைய குருவான பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது ரூ.50 கோடி மட்டுமே சம்பளமாக பெற்று வருவது குறிபிடித்தக்கது.

தலைப்பு செய்திகள்

‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget