Sellur Raju: "பிரிந்து சென்றவர்கள் மனம் திருந்தி வந்தால் ஏற்றுக் கொள்வோம்" - பச்சை கொடி காட்டும் செல்லூர் ராஜூ !
தனது செயலுக்கு ஓபிஎஸ், இபிஎஸ்சை சந்தித்து வருத்தம் தெரிவிக்க வேண்டும் என மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி

அ.தி.மு.க..,வின் கழக அமைப்பு செயலாளராக பதவி பெற்ற, முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து செல்லூர் கே.ராஜூ பேட்டியளிக்கும் போது "அ.தி.மு.க.,வில் பதவி கேட்காமலேயே எடப்பாடி பழனிசாமி எனக்கு கழக அமைப்பு செயலாளராக பதவி வழங்கியுள்ளார்.
#Admk-விலிருந்து பிரிந்து சென்றவர்கள் மனம் திருந்தி வந்தால் எற்றுக் கொள்ளவோம். தனது செயலுக்கு ஒ.பன்னீர் செல்வம், இ.பி.எஸ்சை சந்தித்து வருத்தம் தெரிவிக்க வேண்டும். என மதுரையில் முன்னாள் அமைச்சர் @SellurKRajuoffl பேட்டி.@OfficeOfOPS | @EPSTamilNadu | @CVShanmugamofl pic.twitter.com/pIIhQApPYI
— Arunchinna (@iamarunchinna) July 15, 2022


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

