சுனிதா வில்லியம்ஸ்க்கு மீண்டும் சிக்கல்: பூமி திரும்புவதில் கடைசியில் ஏற்பட்ட சிக்கல் என்ன?
Sunita Williams Return: சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்து வருவதற்காக, நேற்றைய தினம் புறப்பட தயாராக இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் ஏவுதலானது நிறுத்தப்பட்டிருக்கிறது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் 9 மாதங்களாக தங்கி இருக்கும் சுனிதா வில்லியம்சை , பூமிக்கு மீண்டும் அழைத்து வருவதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. புதிதாக என்ன பிரச்னை ஏற்பட்டிருக்கிறது, எப்போது பூமி திரும்புவார்கள் என்பது குறித்து பார்ப்போம்.
புதிய ராக்கெட்டில் பிரச்னை:
சுனிதா வில்லியம்சை பூமிக்கு அழைத்து வருவதற்காக, மாற்று வீரர்களை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்ப, நேற்றைய தினம் திட்டமிடப்பட்டது. அதற்காக, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து நான்கு விண்வெளி வீரர்கள் கொண்ட மாற்று குழுவினருடன் ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் புறப்படத் தயாரானது. ஆனால், விண்ணில் பாயவிருந்த ராக்கெட்டின் மேல் பகுதியைப் பாதுகாக்கும் இரண்டு கிளாம்ப்களில் ஒன்றைக் கட்டுப்படுத்தும் ஹைட்ராலிக்ஸ் அமைப்பில் ஏற்பட்ட சிக்கல் கண்டறியப்பட்டது. இதன் காரணமாக, ஏவுதலின் கடைசி நேரத்தில் "நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகியவை ராக்கெட் ஏவுதலை நிறுத்த முடிவு செய்தன.
Also Read: விண்வெளியில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் எப்படி வாக்களித்தார் தெரியுமா ?
எப்போது பூமி திரும்புவார்கள்?
இந்நிலையில் நேற்றைய தினம் , ராக்கெட்டானது சென்றிருந்தால், வரும் 20 அல்லது 21 ஆம் தேதி சுனிதா வில்லியம்ஸ் பூமி திருபியிருப்பார். இந்நிலையில், ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் ராக்கெட் விண்ணில் புறப்படுவதை பொறுத்துதான், சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவார். இந்த தருணத்தில், சிக்கல்கள் உடனடியாக சரி செய்யப்பட்டு , உடனடியாக விண்ணில் செலுத்தப்படும் என்று கூறப்படுகிறது. எனினும், ராக்கெட்டை மீண்டும் விண்வெளியில் ஏவுவற்கான நேரம் குறித்து நாசா அறிவிக்கவில்லை. சிக்கல்கள் உடனடியக தீர்க்கப்பட்டால், ராக்கெட்டானது நாளை ஏவுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
சோதனை திட்டம்:
விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றனர். பூமியில் இருந்து, சுமார் 400 கி.மீ உயரத்தில் பூமியைச் சுற்றி வருகிறது, சர்வதேச விண்வெளி நிலையம். விண்ணில் ஏவப்பட்ட ஸ்டார்லைனர் விண்கலமானது, விண்வெளி பயணங்களில் மனிதர்களை அனுப்பி சோதனை செய்யும் திட்டமாகும்.
இந்தத் திட்டத்தின் நோக்கம், முதலில் எட்டு நாட்கள் பயணம் என்று திட்டமிடப்பட்டிருந்தது. விண்கலத்தின் என்ஜினில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக அவர்கள் இருவரும் பூமி திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. பயணித்த விண்கலனின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு உள்ளிட்ட சிக்கல்கள் காரணமாக, அந்த விண்கலத்தைப் பயன்படுத்துவது பாதுகாப்பு இல்லை என கருதி தவிர்க்கப்பட்டது. இதை சரிசெய்ய நாசா தொடர்ந்து தீவிர முயற்சி செய்தும், பலனளிக்கவில்லை.
Also Read: I Phone 16e Review: பட்ஜெட் விலையில் ஐ போன் 16e: விலை, ஸ்டோரேஜ் அம்சங்கள் இதோ.!
ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்:
இதையடுத்து, விண்கலத்தில் உள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவர்களை பூமிக்கு அழைத்து வருவில் சிக்கல் ஏற்பட்டது. அவர்களை பூமிக்கு கொண்டு வர எலான் மஸ்க்கிற்க்குச் சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் மூலம் மீட்க திட்டமிடப்பட்டது. அதற்காக ஸ்பேஸ் எக்ஸின் ட்ராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றது.
இதையடுத்து, இருவரும் பிப்ரவரி மாதம் பூமி திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு, மார்ச் மாதம் என முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று ,மாற்று வீரர்கள் கொண்ட ராக்கெட் சென்றால், வரும் 20 ஆம் தேதி அல்லது 21 ஆம் தேதி விண்வெளியில் இருந்து திரும்புவார்கள் என திட்டமிடப்பட்டது. ஆனால், நேற்றைய தினம் ராக்கெட் செல்லவில்லை. ஒருவேளை தொழில்நுட்ப கோளாறு உடனடியாக சரி செய்யப்பட்டால், நாளையே ராக்கெட் விண்வெளிக்கு புறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

