Lunar Eclipse: சிவப்பாக மாறப்போகும் இரவு: வருடத்தின் முதல் சந்திர கிரகணம்: எப்போது?
Lunar Eclipse: 2025 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணமானது நாளை நிகழவுள்ளது. இது சிவப்பு நிறமாக வானில் தெரியும் என கூறப்படுகிறது.

நாளை வானில் ஒரு அரிய நிகழ்வு நிகழ உள்ளது. அது என்னவென்றால், இந்த வருடத்தின் முதல் சந்திர கிரகணம் ஏற்பட உள்ளது. மேலும் இது ஒரு மைக்ரோமூன் கிரகணமாகவும் இருக்கும், அதாவது நிலாவானது, வழக்கத்தை விட சற்று சிறியதாகத் தோன்றும். நாளை ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், முழு சந்திர கிரகணமும் ஏற்பட உள்ளது. இந்த தனித்துவமான சந்திர கிரகணமானது சிவப்பு நிறத்துடன் காட்சியளிக்கும் எனவும் கூறப்படுகிறது.
சந்திர கிரகணம்:
கிரகணம் என்றால் இருள் என்று பொருள் கொள்ளப்படும். சந்திர கிரகணம் சந்திரன் ( நிலா ) இருளில் என்று பொருள். அதாவது, சந்திரன் இருளில் மூழ்க போகிறது என்றும் மறைய போகிறது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
சூரியனை பூமி சுற்றி வருகிறது. பூமியின் துணைக்கோளாக கருதப்படும் நிலா, பூமியை சுற்றி வருகிறது. அதுமட்டுமன்றி, நிலாவானது பூமியை சுற்றிக் கொண்டே சூரியனையும் சுற்றிக் கொண்டே வருகிறது. அவ்வாறு சுற்றி கொண்டே வரும் போது, சூரியனுக்கும் நிலாவுக்கும் இடையில் பூமி வருவது போன்ற அமைப்பு சில நேரங்களில் அமையும். அப்போது சூரியனின் ஒளியை நிலா மீது படாதவாறு நடுவில் இருக்கும் பூமி மறைக்கும் , இதனால் வழக்கமாக ஒளிவீசும் நிலா, அந்த நேரத்தில் ஒளி வீசாது. அதனால், அப்போது நிலா ஒளிக்கு பதிலாக இருள் சூழும். நிலாவானது , சூரியனிடம் இருந்து ஒளியைப் பெற்று பிரதிபலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் , சூரிய ஒளியை பெற முடியாததால், நிலா இருளில் மூழ்குகிறது. இதைத்தான் சந்திர கிரகணம் என அழைக்கப்படுகிறது.
சிவப்பு நிறத்தில் நிலா:
இந்த சந்திர கிரகணமானது நிலா பூமியை விட , வழக்கத்தை விட தூரத்திற்கு செல்லும் என கூறப்படுகிறது. மேலும், நாளைய நிகழப் போகும் கிரகணத்தில் , சூரியனின் ஒளியை நிலா மீது படாமல் , பூமி நடுவில் வந்து தடுக்கும் போது, பூமியை தாண்டி சில ஒளிக்கதிர்கள் மட்டும் நிலா மீது விழ வாய்ப்புள்ளது. இதனால், நிலாவைச் சுற்றி , சிறிய வளையம் போல சிவப்பு நிறத்தில் தெரியும் என கூறப்படுகிறது.
வானியலில் நிகழப் போகும் அற்புத நிகழ்வான சந்திர கிரகணமானது, நாளை ( மார்ச் 14 ) ஏற்படும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இந்திய நேரப்படி காலை 9.27 மணிக்கு தொடங்கி மதியம் 12.28 மணிக்கு உச்சத்தை அடையும். பின்னர் மாலை 3.30 மணிக்கு முடிவடையும் என கூறப்படுகிறது.
Also Read: சுனிதா வில்லியம்ஸ்க்கு மீண்டும் சிக்கல்: பூமி திரும்புவதில் கடைசியில் ஏற்பட்ட சிக்கல் என்ன?
Also Read: வெடித்த எலான் மஸ்க் ஸ்டார்சிப் ராக்கெட்: நெருப்பு மழையாக மாறிய வானம்: கூலாக பதிலளித்த மஸ்க்.!
எங்கு தெரியும்:
இந்த நிகழ்வானது, துரதிர்ஷ்டவசமாக, இந்தியாவில் பகல் நேரத்தில் முழு சந்திர கிரகணம் நிகழும் என்பதால், மக்கள் முழு சந்திர கிரகணத்தைக் காண முடியாது. இந்த கிரகணம் முக்கியமாக வடக்கு மற்றும் தென் அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் தெரியும். மேலும், ஆஸ்திரேலியா, அண்டார்டிகா மற்றும் ஆசியாவின் சில பகுதிகள் போன்ற உலகின் பிற பகுதிகளில், ஒரு பகுதி கிரகணம் தெரியும் என கூறப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

