pongal 2022 | மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது உறுதி - அமைச்சர் மூர்த்தி பேட்டி
’’ஜல்லிக்கட்டு போட்டி நிச்சயம் நடக்கும் ; அதை எப்படி நடத்துவது என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அல்லது நாளை அறிவிப்பார்’’
பொங்கலை முன்னிட்டு வரும் 14, 15, 16 ஆகிய தேதிகளில் உலக புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இந்நிலையில் வரும் 16 ஆம் தேதி அரசு சார்பில் நடைபெற உள்ள உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாட்டு பணிகள் முகூர்த்தகால் நடப்பட்டு துவங்கியது. வாடிவாசல் அருகேயுள்ள முத்தாலம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்த பின்னர் விழா கமிட்டியினர் முகூர்த்த கால் நட்டனர். இதனை தொடர்ந்து வாடிவாசலில் வர்ணம் தீட்டுவது, கேலரி அமைப்பது காளைகளுக்கான மருத்துவ பரிசோதனை செய்யுமிடம், காளைகள் நிறுத்தி வைக்கும் இடத்தை தயார் செய்யும் பணிகள் துவங்க உள்ளது.
" ஜல்லிக்கட்டு போட்டி நிச்சயம் நடக்கும் ; அதை எப்படி நடத்துவது என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அல்லது நாளை அறிவிப்பார் " அமைச்சர் மூர்த்தி மதுரையில் பேட்டியளித்தார்.#Abpnadu | #jallikatu | #madurai #pongal | #Pongal2022 pic.twitter.com/3kfvLATeUt
— Arunchinna (@iamarunchinna) January 10, 2022