மேலும் அறிய

Sani Peyarchi 2026 Palangal: மேஷம் முதல் மீனம் வரை.. சனிப்பெயர்ச்சி யாருக்கு சாதகம்? - பலன்கள் இதோ!

Sani Peyarchi 2026 Palangal in Tamil: சனிப்பெயர்ச்சி மார்ச் 6ம் தேதியான இன்று நிகழவுள்ளது.இதனை முன்னிட்டு மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்களை நாம் காணலாம்.

2026ம் ஆண்டு மார்ச் 6ம் தேதியான இன்று சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இன்று காலை 8.24 மணிக்கு சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் பெயர்கிறார். இது 12 ராசிகளில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என பார்க்கலாம். 

மேஷ ராசி

மேஷ ராசிக்கு சனி பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து விரய ஸ்தானத்திற்கு எழுந்தருள்கிறார். இதை ஏழரை சனியின் ஆரம்பகாலம் என சொல்லலாம். அதாவது இப்போது விரய சனி, ராசிக்குள் வரும்போது ஜென்ம சனி, இரண்டாமிடத்திற்குள் வரும்போது பாத சனி காலம் நடைபெறும். ஒவ்வொரு ராசிக்கும் பன்னிரெண்டாம் இடத்தில் சனிபகவான் வருகிறார் என்றால் அவரின் வீடு மாறும். அதன்படி குரு (மீனம்) வீட்டுக்கு வரும் சனி பகவான் மேஷ ராசிக்கு தீங்கிழைக்க மாட்டார். 

விரய சனியால் கவலைப்பட வேண்டாம். கல்விக்கான அதிக நேரம் செலவாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். பணி மாறுதலுக்கு இது உகந்த காலம் இல்லை. வெளியூர் பயணங்கள் அதிகரிக்கலாம். தொழில் செய்பவர்கள் முதலீடு அதிகமாகவும்,  லாபம் குறைவாகவும் இருக்கும். திருமண வரன்கள் கைகூடும். வயதானவர்கள் ஆன்மிக பயணம் மேற்கொள்வீர்கள். நேரம், பணம் விரயம் ஆனாலும் உரிய நேரத்தில் அதற்கான பலன்கள் கிடைக்கும். விரய சனி காலக்கட்டத்தில் வாரம் ஒருமுறையாவது ஏதேனும் ஒரு கோயிலுக்கு சென்று அடிப்பிரதட்சணம் செய்யலாம்.

ரிஷப ராசி

சனிப்பெயர்ச்சியில் லாபம் பெறும் ராசிகளில் ரிஷபம் முக்கியமானது. 11ம் இடத்தில் சனி பகவான் வருவதால் லாப ஸ்தானமாக அமையும். தொட்டதெல்லாம் துலங்கும். கல்வியில் நினைத்த துறையில் பயில வாய்ப்பு கிடைக்கும்.  பணியிடத்தில் ஊதிய உயர்வு, பணி உயர்வு கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு விரும்பிய பணி கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு நல்ல வரவு வரும். கடன் சுமை குறையும். தொழிலை விரிவுப்படுத்த தேவையான உதவி கிடைக்கும். விரும்பிய வரன் அமையும். கணவன் - மனைவி கருத்து வேறுபாடு நீங்கும். குழந்தை பேறு செய்தி பெறுவீர்கள். கூட்டுத்தொழில் கவனம் தேவை. பெருமாள் கோயிலில் தாயாரை வழிபடுவது சிறப்பை தரும். 

மிதுன ராசி

சனி பகவான் இந்த ராசிக்கு 9வது இடமான பாக்கியஸ்தானத்தில் இருந்து 10ம் இடமான ஜீவனஸ்தானத்திற்கு செல்கிறார். இது சாதகமாகவே அமையும். நம்பிக்கையோடு எதையும் எதிர்கொள்ளலாம். வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு அழைப்பு வரும். தொழில் செய்து நஷ்டம் அடைந்தவர்களுக்கு கடனை அடைக்கும் சூழல் உண்டாகும். வியாபார விருத்தி ஏற்படும். திருமண காரியம் கைகூடும். புத்திரப்பேறு கிடைக்கும். 10ம் இடம் கர்ம ஸ்தானம் என்பதால் விரும்பிய ஆசைகள் நிறைவேறும். அதேசமயம் உழைக்காமல் சோம்பேறித்தனமாக இருப்பவர்களுக்கு எவ்வித நன்மையும் உண்டாகாது. இந்த ராசிக்காரர்கள் தொழில் செய்யும் இடத்தை தெய்வத்தின் இருப்பிடமாக கருதினால் அற்புதமான பலன்கள் கிடைக்கும்.

கடக ராசி 

9வது இடத்தில் சனி பகவான் உள்ளார். நேரடியாக இல்லாவிட்டாலும் உங்களுக்கு நன்மைகளே வழங்குவார். பிரச்னைகளில் இருந்து விடுபடுவீர்கள். மன குழப்பம் நீங்கும். வாழ்க்கையின் வளர்ச்சிக்கான வழியை சனி பகவான் காட்டுவார். கடன், நோய், கல்வி,  இல்வாழ்க்கை பிரச்னை, தொழிலில் குறைவான லாபம் என அனைத்து பிரச்னைகளும் நீங்கும். இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் தினமும் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். நீர் நிலைகளுக்கு அருகாமையில் இருக்கும் ஏதேனும் ஒரு கோயிலுக்கு சென்று வழிபடலாம். 

சிம்ம ராசி 

சனி பகவான் 8ம் இடத்தில் இருப்பது அஷ்டம சனி என சொல்லலாம். எதையும் எதிர்த்து நிற்க கூடியவர் என்பதால் எவ்வித கஷ்டம் வந்தாலும் கடந்து போவீர்கள். மன ரீதியாக பலம் பெறுவீர்கள். குழந்தைகள் விஷயத்தில் கவனம் தேவை. அதிக கடன் வாங்குவது, கொடுப்பது கடன். தெரியாத விஷயத்தில் ஈடுபடக்கூடாது. தெரியாத இடங்களுக்கு யாரையும் நம்பி செல்ல வேண்டாம். ராசி அதிபதி சூரியன் என்பதால் சூரிய நமஸ்காரம் செய்வது, காலை வேளையில் கோயில் செல்வது போன்றவை கண்டிப்பாக செய்ய வேண்டும்.

கன்னி ராசி 

7ம் இடத்திற்கு சனி பகவான் செல்வது கண்டக சனி காலமாக பார்க்கலாம். இதனால் உங்களுடைய ராசிக்கு நல்லதே நடக்கும். விரும்பியது நிறைவேறும். 5 மற்றும் 7ம் இடம் இணைவதால் கல்வி, இல்வாழ்க்கை, தொழில், வியாபாரம் என அனைத்து உரிய நேரத்தில் நடக்கும். யாரையும் எளிதில் நம்பி ஏமாந்து விடாதீர்கள். எதையும் யோசித்து செய்வது நல்லது. மற்றவர்களால் உங்களுக்கு பிரச்னை வருவதால் கவனமாக இருங்கள். முடியும் போது திருப்பதிக்கும், மற்ற நாட்களில் சனிக்கிழமையில் பெருமாளையும் வழிபடுவது சிறப்பானதாகும். 

துலாம் ராசி 

சனிப்பெயர்ச்சி காலத்தில் நல்ல பலன்கள் கிடைப்பதில் துலாமும் ஒன்றாகும். எல்லாவிதமான நன்மைகளும் வந்து சேரும். எதிரிகளை எளிதாக வெல்வீர்கள். வழக்குகளில் வெற்றி காண்பீர்கள். ஆரோக்கியம் மேம்படும். வீடு, மனை வாங்கும் யோகம் அமையும். கடன் பிரச்னை தீரும். புத்திரப்பேறு தொடர்பாக யோகம் அமையும். இல்வாழ்க்கை பிரச்னை சரியாகும். தகுதி மீறி கடன் வாங்குவதை தவிர்க்கவும். மன்னிக்கும் மனப்பான்மையை வளர்க்க வேண்டும். இந்த காலக்கட்டத்தில் சிவபெருமான் அல்லது முருகனை வழிபடுவது சிறப்பாகும். 

விருச்சிக ராசி

சனி பகவான் 5ம் இடத்திற்கு வருகை தருகிறார் என்பதால் சாதகம், பாதகம் என இரண்டு பலன்களும் கிடைக்கும். திருமணமானவர்கள், குழந்தைபேறு வேண்டுபவர்களுக்கு கேட்டது நிறைவேறும். பூர்விக சொத்து கைக்கு வரும். குலதெய்வத்தை வேண்டினால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். புண்ணியம் செய்வதற்கு ஏற்றாற்போல தான் பலன்கள் கிடைக்கும். அதனால் செய்யும் செயலில் கவனம் தேவை. உணவு, பணம் தானம் செய்யலாம். அதுவே சாதகமாக அமையும். 

தனுசு ராசி

4ம் இடத்தில் சனி பகவான் என்பதால் சாதகமான காலம் தான். நல்லது சொல்லும்போது ஏற்றுக் கொள்ளுங்கள். இறை வழிபாட்டை மனதார செய்ய வேண்டும். ஆரோக்கியம் மேம்படும். கடினமாக உழைத்தால் பலன் கிடைக்கும். உங்களுடைய எண்ணங்களில் கவனம் தேவை. கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். வாகனங்கள் வாங்குவீர்கள். வீடு,மனை போன்றவை வாங்கும் சூழல் அமையும். எண்ணங்கள் தான் உங்கள் கேரக்டரை வடிவமைக்கும் என்பதால் அதீத கவனமாக செயல்படுங்கள். விரும்பிய தெய்வத்தை விரமிருந்து வழிபடுவது கூடுதல் பலன்களை தரும். 

மகர ராசி 

3ம் இடத்தில் சனி பகவான் வருகிறார். ஏழரை சனி முடிகிறது. சகோதரர்களுடான பிரச்னைகள் தீரும். பணியிட மாறுதல் கிடைக்கும். என்னென்ன முயற்சிகளை மேற்கொள்கிறீர்களோ அது நிறைவேறும். தொட்டதெல்லாம் கைகூடும் வாய்ப்பு அமையும். போட்டித்தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். திருமண வரன், குழந்தை பேறு தொடர்பான சுப செய்திகளை கேட்பீர்கள். வீடு வாங்கும் யோகம் அமையும். நம்பிக்கை, தைரியம் இருந்தாலும்  அது குரூட்டு தைரியமாக மாறிவிடக்கூடாது. எதை செய்தாலும் திட்டமிடுதல் அவசியமாகும். இந்த காலக்கட்டத்திலும் குருவை வழிபட்டு எதையும் செய்வது சிறந்ததாகும். 

கும்ப ராசி 

இரண்டாம் இடத்தில் சனி பகவான் இருக்கிறார். இதனால் மன குழப்பம்,மன அழுத்தம் ஆகியவை நீங்கும். ஏழரை சனியின் கடைசிப் பகுதி என்பதால் சனி பகவான் இதுவரை கொடுத்த கஷ்டங்கள் குறையும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கடன் வாங்குவது, கொடுப்பதில் கவனம் வேண்டும். பகையை வளர்க்காமல் முடிந்தவரை நட்புடன் செயல்படுங்கள். முன்னோர் சொத்துகள் கைக்கு வரும்.  கடின உழைப்பு போட்டால் லாபம் வரும். செல்வம் சேரும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். கணவன் - மனைவியாக இணைந்து காட்சி கொடுக்கும் தெய்வங்களை வழிபடுவது சிறப்பாகும். 

மீன ராசி 

ஜென்ம சனியாக கும்பத்தில் இருந்து மீன ராசிக்கு வரும் சனி பகவான் வந்தாலும் பிரச்னைகளை கண்டு பயப்பட வேண்டிய தேவையில்லை. எதையும் திட்டமிட்டு செயல்படலாம். பெரிய விஷயங்களை இந்த நேரங்களில் முயற்சி செய்ய வேண்டாம். முதலீடு விஷயத்தில் கவனம் தேவை. வேலை விஷயத்தில் சரியாக இருங்கள். நம்பிக்கையை விடாமல் பிரச்னையை எதிர்கொள்வது எளிதாக சனிப்பெயர்ச்சி காலத்தை கடக்க உதவும். வாரம் தோறும் சனி பகவானை வணங்கி எள் எண்ணெய் தீபம் போட்டு வந்தால் நல்லது. 

(வாக்கிய பஞ்சாங்க அடிப்படையிலும், ஆன்மிக நம்பிக்கை அடிப்படையில் இந்த தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் உண்மை தன்மைக்கு ஏபிபி நாடு பொறுப்பேற்காது)

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Kumbha Rasi: சனிப்பெயர்ச்சி... கும்பத்துக்கு ஜாலியா? இல்ல காலியா? இதுதான் நடக்கும்!
Kumbha Rasi: சனிப்பெயர்ச்சி... கும்பத்துக்கு ஜாலியா? இல்ல காலியா? இதுதான் நடக்கும்!
Dhanusu Rasi Sani Peyarchi Palan: தனுசு ராசிக்காரர்களே.. சனிப்பெயர்ச்சியால் உங்களுக்கு சாதகமா? பாதகமா?
Dhanusu Rasi Sani Peyarchi Palan: தனுசு ராசிக்காரர்களே.. சனிப்பெயர்ச்சியால் உங்களுக்கு சாதகமா? பாதகமா?
Viruchigam Rasi Sani Peyarchi Palan: சனிப்பெயர்ச்சி விருச்சிக ராசியின் காதல் வாழ்க்கையை பாதிக்குமா? இதோ பரிகாரங்கள்
Viruchigam Rasi Sani Peyarchi Palan: சனிப்பெயர்ச்சி விருச்சிக ராசியின் காதல் வாழ்க்கையை பாதிக்குமா? இதோ பரிகாரங்கள்
Thulam Rasi Sani Peyarchi Palan: துலாமிற்கு சனிப்பெயர்ச்சி சாதகமா? பாதகமா? இதோ ஓர் அலசல்
Thulam Rasi Sani Peyarchi Palan: துலாமிற்கு சனிப்பெயர்ச்சி சாதகமா? பாதகமா? இதோ ஓர் அலசல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
LPG Gas Booking: கேஸ் சிலிண்டர் புக் பண்ண முடியலையா? 6 எளிய வழிகள் இதோ! மிஸ் பண்ணாதீங்க!
LPG Gas Booking: கேஸ் சிலிண்டர் புக் பண்ண முடியலையா? 6 எளிய வழிகள் இதோ! மிஸ் பண்ணாதீங்க!
'சட்டமன்ற தேர்தலில் போட்டி?’ அதிரடி முடிவு எடுத்த வைகோ? - முழு விவரம்..!
'சட்டமன்ற தேர்தலில் போட்டி?’ அதிரடி முடிவு எடுத்த வைகோ? - முழு விவரம்..!
Petrol Diesel Stock : வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
படிக்க வரும் மாணவிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை; பாலியல் கொடுமைகள் நடக்காத நாளே இல்லை- சீறிய அன்புமணி!
படிக்க வரும் மாணவிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை; பாலியல் கொடுமைகள் நடக்காத நாளே இல்லை- சீறிய அன்புமணி!
Made in India Cars: ”வெத நான் போட்டது” இந்திய சந்தையை புரட்டிப்போட்ட 5 உள்ளூர் கார் மாடல்கள் - லெஜண்டு டா..
Made in India Cars: ”வெத நான் போட்டது” இந்திய சந்தையை புரட்டிப்போட்ட 5 உள்ளூர் கார் மாடல்கள் - லெஜண்டு டா..
Kanimozhi: பூசி மொழுகிய கனிமொழி.. உங்க தொகுதினா மட்டும் வலிக்குதா? அண்ணனுக்கு ஆதரவா? - நெட்டிசன்கள் ஆவேசம்
Kanimozhi: பூசி மொழுகிய கனிமொழி.. உங்க தொகுதினா மட்டும் வலிக்குதா? அண்ணனுக்கு ஆதரவா? - நெட்டிசன்கள் ஆவேசம்
மாநிலம் முழுவதும் தொடரும் பாலியல் குற்றங்கள்; அருமை பெருமைபேசி சுகம் காணும் திமுக அரசு- விளாசிய ராமதாஸ்!
மாநிலம் முழுவதும் தொடரும் பாலியல் குற்றங்கள்; அருமை பெருமைபேசி சுகம் காணும் திமுக அரசு- விளாசிய ராமதாஸ்!
Jose charles martin Vs Aadhav Arjuna : திமுகவின் ‘Sleeper Cell’ தான் ஆதவ் அர்ஜூனா..! பட்டியலிட்டு விஜய்யை அலர்ட்டு செய்யும் மச்சான் ஜோஸ் சார்லஸ்
திமுகவின் ‘Sleeper Cell’ தான் ஆதவ் அர்ஜூனா..! பட்டியலிட்டு விஜய்யை அலர்ட்டு செய்யும் மச்சான் ஜோஸ் சார்லஸ்
Embed widget