ஒருவர் கை பக்குவத்தில் ஊரே சமைக்கும் எண்ணெய் சுக்கா! இது தான் மதுரையோடு பக்கா!

எண்ணெய் சொட்ட சொட்ட... சுக்காவை கையில் எடுத்தால் எத்தனை கிலோ சாப்பிட்டோம்னு நமக்கே தெரியாது. அது தான் அதோட ஸ்பெஷல்!

FOLLOW US: 
நல்லா... நல்லெண்ணெய்ல முக்குன கேப்ப களி  தொண்டையில் சூட்டோட இறக்குனா ஏற்படும் சிலிர்ப்பு மாதிரி,   சுக்காவ சாப்டா.., அசத்திவிட்றும். மதுரை மேலூர்...., சுத்துவட்டாரம் எல்லாம் எண்ணெய் சுக்கா பேமஸ். பேர்லையே மணம் இருக்க மணப்பட்டி கிராம சமையல் கலைக் கலைஞர்களின் கைபக்குவம் தான் கல்யாண வீட்ல எண்ணெய் சுக்காவ தூக்கிவிடுது.ஒருவர் கை பக்குவத்தில் ஊரே சமைக்கும் எண்ணெய் சுக்கா! இது தான் மதுரையோடு பக்கா!

 

எளிமை, நேர்மையினு போற்றப்படும் முன்னாள் அமைச்சர் தும்பைபட்டி பூசாரி கக்கனோட  ஊருக்கு பக்கத்துல தான் மணப்பட்டி கிராமம் இருக்கு. கச்சிராயன்பட்டி, கல்லம்பட்டி, மாங்குளப்பட்டி, கண்மாய்பட்டினு பதினெட்டு ஊர்க்காரங்களும் சமையல் கலைஞர்கள் தான். எல்லாரும் மணப்பட்டி சமையலுக்கு உதவியா இருக்காங்க. ஊரே சமையல் கலைஞர்களா இருந்தா எப்படி இருக்கும் அப்டிதான் போட்டி, போட்டு சமைப்பாங்க மணப்பட்டிக்காரங்க. மேலூர் பக்கம் சாப்பாடு சூப்பரா இருக்கும் இன்னம் கொஞ்சம் கறி வைங்கனு உசிலம்பட்டி காரங்களையும் தாட்டியமா கேட்க வைக்கும்.


ஒருவர் கை பக்குவத்தில் ஊரே சமைக்கும் எண்ணெய் சுக்கா! இது தான் மதுரையோடு பக்கா!

 

மதுரை சுத்துவட்டாரம் மட்டுமில்ல ஒரிசா, டெல்லி, பெங்களூர் வெளிமாநில வாசிகளையும் மணப்பட்டி சமையல் உச்சு கொட்ட வைக்கும். கோவில் பட்டி கடலை மிட்டாய், மோர் வெங்காயம், குழி ஆம்லேட், வெங்காய ஊறுகாய், குடல் கூட்டு, மாங்கா பச்சடி கூடவே எண்ணெய் சுக்கானு சைடிஸ் தட்டி தூக்குவாங்க, மேலூர் வாசிகள்.  சோத்துக்கு எலும்பு குழம்பு, ரசம், மோர்னு அசத்துவாங்க. சைவ விரும்பிகள் ரசத்த சைவம்னு நினைச்சு சாப்பிட்ற கூடாது. ரசத்துல கறி சாற இறுத்து ஊத்திருப்பாங்க. அந்த ருசிக்காக தான் கப்புல ரசத்த வாங்கி குடிப்பாங்க. சோத்துக்கு நடுவ கிணறு தோண்டி ரசத்த ஓடவிடாம லாவகமா பிசைஞ்சு சாப்டுவாங்க. இடது கைய சாப்பாடு டேபிள் மேல அண்ட குடுத்து, ஒரு பக்கம் உச்சி மண்டையில் வியர்வ பூக்க, சூடா சோத்துல ரசத்த பிசைஞ்சு சாப்டுற அழகே தனி தான். கறிக் குழம்பு ஊத்தும்போதே 'எலும்பு வைப்பானு' கேட்டு வாங்கிக்குவாங்க.

 


ஒருவர் கை பக்குவத்தில் ஊரே சமைக்கும் எண்ணெய் சுக்கா! இது தான் மதுரையோடு பக்கா!

 

 

ரத்தப்பொரியல சிலர் குடல் கூட்டுலையே சேத்துக்குவாங்க. ரசனையா விசேஷ வீட்டுக்காரங்க இரத்த பொரியல், சுவரொட்டி, ஈரல தனியா கேட்டு சமைச்சுக்குவாங்க. அது அவங்களுக்கு போனஸ் பாய்ண்ட் கிடச்ச மாதிரி சந்தோஷம். காரைக்குடி சமையல் காரங்க  விருந்துல கேட்டு கேட்டு வைப்பாங்க சப்ளையர்ஸ். ஆனா எண்ணெய் சுக்கா லிமிட் தான். 50 கிராமுக்கு குறைவா தான் வைப்பாங்க. அதுவே நமக்கு திருப்தி ஆயிறும். அதுக்குமேல கேட்டு வாங்கி சாப்பிட்டா தெகட்டல் ஏற்பட்றும். அது நொண்டி சாக்கு தான். சுக்கா அவ்ளோ டிமாண்டு என்பது தான் உண்மை.

அதுனால எண்ணெய் சுக்கால மிஞ்சுன எண்ணெய்ய கூட விடமாட்டாங்க. பழனி பஞ்சாமிர்தம் மாதிரி லேசா விரல்கள வச்சி சவஞ்சுக்குவாங்க. எண்ணெய் சுக்கா சின்ன நெல்லிக்காயவிட சிறுசா தான் இருக்கும். அந்த அளவுக்கு கறிய பொடுசா கட்பண்ணிருவாங்க. அதனால கிழட்டு ஆடா இருந்தாலும் கறி மிட்டாய் மாதிரி பொலிவா இருக்கும். ஆயிரம் பக்குவம் வச்சு நாம வீட்ல சுக்கா செஞ்சாலும், மணப்பட்டி காரங்க கைபக்குவம் வராது. அதுக்குனு வச்சுருக்கும் கடாய்ல நல்லெண்ணெய் ஊத்தி  தேர்வு செஞ்ச மட்டன் கறிய மஞ்சப் பொடி, அவங்க ரகசிய  பொடியும் சேர்த்து இஞ்சி, முந்திரி போட்டு சுறுல சுறுல சுக்கா சமைப்பாங்க. தக்காளி, வெங்காயம்னு கூடுதலா எதையும் போட மாட்டங்க. வெந்து வந்த சுக்காவ கொஞ்சோனு வெள்ள சோத்துல பிசைஞ்சு சாப்புட்டா அது ஒரு ருசி. சுக்கால கிடக்குற முந்திரியும் கறியோட சேர்த்து சாப்டா மாவும், மொறுமொறுப்பு சுவையாவும் இருக்கும். இப்படி மேலூர் பேமஸ் எண்ணெய் சுக்காவ பத்தி சொல்லிக்கிட்டே போகலாம். மேலூர் மணப்பட்டி முன்னணி சமையல் மாஸ்டரான முத்துப்பாண்டியிடம் பேசினோம்...," மேலூர் எண்ணெய் சுக்காக்கு முன்னோடி வைரவன் என்பவர தான் சொல்றாங்க. சைக்கிள் மிதிச்சு பல ஊர் சமையலுக்கு போவாராம். அவரோட கைபக்குவம் தான் எல்லாருக்கும் வந்திருக்காம். மணப்பட்டில முருகேசன், முத்துப்பாண்டி, வேலு, ஒத்தக்கடை செல்வம்னு சமையல் மாஸ்டர் பல பேர் இருக்கோம். தொந்தி, மந்தன், கணேசன் மாஸ்டர்களோட வழிவந்து சமைக்குறோம். இப்ப 18பட்டியிலேயும் மணப்பட்டி சமையல்காரங்க இருக்காங்க. என்னிடம் மட்டும் நூறு நபர்கள் வேலை செய்றாங்க. எல்லாரும் மணப்பட்டிய சுத்தி உள்ள நபர்கள் தான். அதனால டேஸ்ட் மாறாது. எண்ணெய் சுக்கா மட்டுமில்ல மணப்பட்டி சமையல்ல எல்லாமே சிறப்பா தான் இருக்கும் என்கிறார் பெருமையாக.

Tags: madurai lock down Food sukka enna sukka melur manapatti

தொடர்புடைய செய்திகள்

கொடைக்கானல் பிளவர் ஷோ பாக்கணுமா? இதோ அதற்கு ஒரு வழி!

கொடைக்கானல் பிளவர் ஷோ பாக்கணுமா? இதோ அதற்கு ஒரு வழி!

மதுரை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் கொரோனா தொற்று நிலவரம் என்ன?

மதுரை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் கொரோனா தொற்று நிலவரம் என்ன?

தேனி : 2 ஆயிரம் வருட பழமைகொண்ட சனீஸ்வர பகவான் கோவில் : சிறப்புகள் என்ன?

தேனி : 2 ஆயிரம் வருட பழமைகொண்ட சனீஸ்வர பகவான் கோவில் : சிறப்புகள் என்ன?

கொடைக்கானல் : விளைச்சல் இருந்தும் விலையில்லாத ஏழைகளின் ஆப்பிள் : கடும் நஷ்டத்தின் விவசாயிகள்..!

கொடைக்கானல் : விளைச்சல் இருந்தும் விலையில்லாத ஏழைகளின் ஆப்பிள் : கடும் நஷ்டத்தின் விவசாயிகள்..!

சிட்னியா மாறியதா மதுரை? சிந்திய சட்னியாக இருப்பதாக குற்றச்சாட்டு!

சிட்னியா மாறியதா மதுரை? சிந்திய சட்னியாக இருப்பதாக குற்றச்சாட்டு!

டாப் நியூஸ்

Milka Singh Passes away: 'பறக்கும் சீக்கியர்' மில்கா சிங் எனும் சகாப்தம் !

Milka Singh Passes away: 'பறக்கும் சீக்கியர்' மில்கா சிங் எனும் சகாப்தம் !

Tamil Nadu Coronavirus LIVE News : கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு; முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை

Tamil Nadu Coronavirus LIVE News : கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு;  முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை

‛வேலைக்கு போகச் சொன்னது குத்தமா...’ குடும்பத்தையே ‛குளோஸ்’ செய்த கொடூர இளைஞர்!

‛வேலைக்கு போகச் சொன்னது குத்தமா...’ குடும்பத்தையே ‛குளோஸ்’ செய்த கொடூர இளைஞர்!

என்னது ஏரோபிளேன் ‛ஸ்கிட்’ ஆச்சா... நம்ம ஊரு ரோடு பரவாயில்லையே!

என்னது ஏரோபிளேன் ‛ஸ்கிட்’ ஆச்சா... நம்ம ஊரு ரோடு பரவாயில்லையே!