மேலும் அறிய

பட்டியலின மாணவர்களுக்கு கொடுமை: தனியார் மருத்துவக் கல்லூரிகள் அராஜகம்! அரசு வேடிக்கை பார்ப்பதா? அன்புமணி ஆவேசம்

பட்டியலின மாணவர்களுக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகள் கொடுமை:  திமுக அரசு வேடிக்கைப் பார்ப்பதா? அன்புமணி கேள்வி

மத்திய அரசே கட்டணம் செலுத்தும் நிலையில், கட்டணம் கேட்டு பட்டியலின மாணவர்களுக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகள் கொடுமை நடப்பதாகவும் அதை திமுக அரசு வேடிக்கைப் பார்ப்பதாகவும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, ’’தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் பட்டியலின, பழங்குடியின மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை மத்திய அரசே வழங்கும் நிலையில்,  ஐந்தாம் ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தை  நான்காம் ஆண்டிலேயே கட்ட வேண்டும் என்றும், அவ்வாறு கட்டாத மாணவர்கள்  தேர்வு  எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும்  தனியார் மருத்துவக் கல்லூரிகள் எச்சரித்துள்ளன.  இதைத் தடுக்க வேண்டிய தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தனியார் கல்லூரிகளுக்கு சாதகமாக நடப்பது கண்டிக்கத்தக்கது.

மத்திய அரசின் உயர்கல்வி உதவித் தொகை (Post Matric Scholarship) திட்டத்தின்கீழ் தனியார் கல்லூரிகளில்  மருத்துவம் பயிலும் பட்டியலின, பழங்குடியின மாணவர்களின்  குடும்ப ஊதியம்  ஆண்டுக்கு  ரூ.2.5 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால், அவர்களுக்கான கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே செலுத்தும்.  அதனால் இந்தக் கட்டணத்தை மாணவர்களிடம் தனியார்  கல்லூரிகள் கேட்கக் கூடாது.  முதல் நான்கரை ஆண்டுகளில் ஏதேனும் கல்லூரிகள் மாணவர்களிடம் கட்டணம் வசூலித்து இருந்தால், அந்தத் தொகையை சம்பந்தப்பட்டவர்களின் வங்கி  கணக்கில் அரசே செலுத்தி விடும். ஆனால், ஐந்தாம் ஆண்டு கட்டணத்தை மாணவர்களிடம் கேட்கவே கூடாது என்பதுதான் விதியாகும்.

தனியார் மருத்துவக் கல்லூரிகள் எச்சரிக்கை


ஆனால், தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள் ஐந்தாம் ஆண்டுக்கான கட்டணத்தை நான்காம் ஆண்டின் முடிவிலேயே கட்டி விட வேண்டும் என்றும்,  அவ்வாறு கட்டத் தவறினால் நான்காம் ஆண்டு தேர்வை எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும்  எச்சரிக்கை விடுத்துள்ளன. அதனால், மாணவர்களும், அவரது பெற்றோரும் கடுமையான மன உளைச்சலுக்கு  ஆளாகியுள்ளனர்.

விதிகளை மீறி கட்டணம் செலுத்தும்படி பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு  தனியார் மருத்துவக் கல்லூரிகள்  நெருக்கடி கொடுக்கும் போது அதை தடுத்து நிறுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கும்,  மருத்துவக் கல்வி இயக்குனருக்கும்தான் உள்ளது.  ஆனால், இதில் தாங்கள் செய்வதற்கு எதுவும் இல்லை; கட்டண நிர்ணயக் குழுதான்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிக் கொண்டு மருத்துவக் கல்வி இயக்குனர் ஒதுங்கிக் கொண்டார். அதனால், கட்டணம் செலுத்த முடியாமல், தாங்கள் தேர்வு எழுத முடியுமா? என்பதும் தெரியாமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர்.

தமிழக அரசு உடனே தலையிட வேண்டும்

சமூகத்தின் அடித்தட்டில் உள்ள சமூகங்களைச் சேர்ந்த மக்கள் மருத்துவக் கல்வி பெற வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இத்தகைய கல்வி உதவித்தொகைகளை மத்திய அரசு வழங்குகிறது. ஆனால், அதையும் தாண்டி பட்டியலின, பழங்குடியின மருத்துவ மாணவர்களை தனியார் கல்லூரிகள்  கொடுமைப்ப்படுத்துவதை அனுமதிக்கக் கூடாது.  இந்த விஷயத்தில் தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண்பதுடன், சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

TET 2026: ஆசிரியர் தகுதித் தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு- காண்பது எப்படி? ஆட்சேபிக்க கடைசி வாய்ப்பு!
TET 2026: ஆசிரியர் தகுதித் தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு- காண்பது எப்படி? ஆட்சேபிக்க கடைசி வாய்ப்பு!
ISRO: ஒரே ஆண்டில் 120 இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் ராஜினாமா - நட்டாற்றில் திட்டங்கள், காரணம்? புதிய கட்டுப்பாடுகள்
ஒரே ஆண்டில் 120 இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் ராஜினாமா - நட்டாற்றில் திட்டங்கள், காரணம்? புதிய கட்டுப்பாடுகள்
Medical Admissions Reservation : மாணவர்களுக்கு குஷி.! மருத்துவ உள் இட ஒதுக்கீடு 10 % அதிகரிக்கப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மாணவர்களுக்கு குஷி.! மருத்துவ உள் இட ஒதுக்கீடு 10 % அதிகரிக்கப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
CBSE 10ஆம் வகுப்பு: மும்மொழி கட்டாயம்! தேர்ச்சி பெறாவிட்டால் சான்றிதழ் இல்லை!
CBSE 10ஆம் வகுப்பு: மும்மொழி கட்டாயம்! தேர்ச்சி பெறாவிட்டால் சான்றிதழ் இல்லை!

வீடியோ

G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC: குடிமகன்களுக்கு இனி ஜாலி.! தமிழகம் முழுவதும் Resto - Bar - புதிய பிளான் போட்ட டாஸ்மாக்
குடிமகன்களுக்கு இனி ஜாலி.! தமிழகம் முழுவதும் உணவகத்துடன் கூடிய Resto - Bar - புதிய பிளான் போட்ட டாஸ்மாக்
TN Govt: குட்டீஸ்களுக்கு வார்னிங்..! முக்கிய உணவு பொருளுக்கு தடை விதித்த தமிழ்நாடு அரசு - காரணம் என்ன?
குட்டீஸ்களுக்கு வார்னிங்..! முக்கிய உணவு பொருளுக்கு தடை விதித்த தமிழ்நாடு அரசு - காரணம் என்ன?
CM Vijay warning : தப்பு செஞ்சா அவ்வளவு தான்... பதவியில் இருந்து உடனே நீக்கம்- அமைச்சர்களை எச்சரித்த சிஎம் விஜய்
தப்பு செஞ்சா அவ்வளவு தான்... பதவியில் இருந்து உடனே நீக்கம்- அமைச்சர்களை எச்சரித்த சிஎம் விஜய்
TET 2026: ஆசிரியர் தகுதித் தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு- காண்பது எப்படி? ஆட்சேபிக்க கடைசி வாய்ப்பு!
TET 2026: ஆசிரியர் தகுதித் தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு- காண்பது எப்படி? ஆட்சேபிக்க கடைசி வாய்ப்பு!
Medical Admissions Reservation : மாணவர்களுக்கு குஷி.! மருத்துவ உள் இட ஒதுக்கீடு 10 % அதிகரிக்கப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மாணவர்களுக்கு குஷி.! மருத்துவ உள் இட ஒதுக்கீடு 10 % அதிகரிக்கப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
விஜய் போட்ட ரகசிய திட்டம்.. பிளான் போட்டு சுக்கு நூறாக உடைத்த இபிஎஸ்.? ஆர்.பி.உதயகுமார் சொன்ன ஷாக் தகவல்
விஜய் போட்ட ரகசிய திட்டம்.. பிளான் போட்டு சுக்கு நூறாக உடைத்த இபிஎஸ்.? ஆர்.பி.உதயகுமார் சொன்ன ஷாக் தகவல்
ரூ.80 ஆயிரம் தள்ளுபடி! குறையும் விலை- மாருதி பிரெஸ்ஸா புது மாடலுக்கு முன்னே குவியும் ஆஃபர்கள்
ரூ.80 ஆயிரம் தள்ளுபடி! குறையும் விலை- மாருதி பிரெஸ்ஸா புது மாடலுக்கு முன்னே குவியும் ஆஃபர்கள்
CM Vijay: லிஸ்ட் போட்ட யூட்யூபர்..! தூக்கி அடிக்கப்பட்ட IAS அதிகாரிகள் - திமுக அதிகாரிகளா? ஊழல் பேர்வழிகளா?
லிஸ்ட் போட்ட யூட்யூபர்..! தூக்கி அடிக்கப்பட்ட IAS அதிகாரிகள் - திமுக அதிகாரிகளா? ஊழல் பேர்வழிகளா?
Embed widget