மேலும் அறிய

தேனி தென் காளகஸ்தி திருக்காளாத்தீஸ்வரர் கோவிலில் மாசி மக திருக்கல்யாணம்: பக்தர்களின் பரவசம்!

திருக்காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானம்பிகை திருக்கோவிலில் இந்த வருட மாசி மகத் திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் விழா மிக விமர்சையாக நடைபெற்றது.

தேனி மாவட்டத்தில் தென் காளகஸ்தி என்று அழைக்க கூடிய நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த உத்தமபாளையம் திருக்காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானம்பிகை திருக்கோவிலில் இந்த வருட மாசி மகத் திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் விழா மிக விமர்சையாக நடைபெற்றது.

தேனி தென் காளகஸ்தி திருக்காளாத்தீஸ்வரர் கோவிலில் மாசி மக திருக்கல்யாணம்: பக்தர்களின் பரவசம்!

தேனி மாவட்டம் உத்தமபாளையம் நகரில் அமைந்துள்ளது அருள்மிகு ஞானாம்பிகை சமேத திருக்காளாத்தீஸ்வரர் திருக்கோவில். இத்திருக்கோவில் இந்து சமய அறநிலை துறை கட்டுப்பாட்டில் உள்ளது. உத்தமபாளையம் நகர சுரபி நதிக்கரையில் வீற்றிருக்கும் தென் காலஹஸ்தி என்று அழைக்கப்படும் அருள்மிகு ஞானாம்பிகை திருக்காளாத்தீஸ்வரர் கோவில் சுமார் 600 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த கோவிலாகும்.

இக்கோவில் ராகு, கேது, கால சர்ப்ப தோஷ நிவர்த்தி ஸ்தலமாக விளங்குகிறது. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற தென் காளகஸ்தி என்று அழைக்கப்படும் திருக்காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானம்பிகை திருக்கோவிலானது இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்டது. இத்திருக்கோவிலானது வருடம் தோறும் மாசி மகத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த வருட திருவிழாவிற்காக கடந்த மாதம் 19 ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழாவினை தொடங்கினார்கள்.

தேனி தென் காளகஸ்தி திருக்காளாத்தீஸ்வரர் கோவிலில் மாசி மக திருக்கல்யாணம்: பக்தர்களின் பரவசம்!

தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று திருக்காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானம்பிகை அம்மனுக்கு திருக்கல்யாண விழாவினை நடத்தினார்கள். விழாவில் முன்னதாக கோகிலாபுரத்தில் இருந்து சுவாமி அம்மனுக்கு பெண் அழைப்பு நடைபெற்று பெண் வீட்டாரின் சீர்வரிசைகள் உடன் ஞானம்பிகைக்கு பச்சைப்பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரம் செய்து விசேஷ பூஜைகள் நடத்தி திருமாங்கல்யத்தை அணிவித்தார்கள்.

விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள். சிவனே போற்றி போற்றி என கோஷமிட்டு  மகிழ்ச்சியுடன் ஆராவாரம் செய்து புதிய மாங்கல்ய கயிற்றினை அணிந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து முன்னோர்கள் நடத்திய திருமண சம்பிரதாய பூஜைகளை செய்து மலர் மாலைகளை மாற்றி சுவாமிக்கும் அம்மனுக்கும் அணிவித்தனர். இந்த விழாவில் உத்தமபாளையம், கோகிலாபுரம், சின்னமனூர், கம்பம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அதனைத்தொடர்ந்து நகரின் முக்கிய வீதிகளில் நாளை திருத்தேரோட்ட திருவிழாமிக விமர்சையாக நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

வீ த லீடர்ஸ் - சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் ஒற்றுமை பேரணிக்கு உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி!
வீ த லீடர்ஸ் - சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் ஒற்றுமை பேரணிக்கு உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி!
மானாமதுரை காவல் நிலையத்தில் பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியால் பரபரப்பு ஏற்பட்டது !
மானாமதுரை காவல் நிலையத்தில் பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியால் பரபரப்பு ஏற்பட்டது !
மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு: சிறையில் இருந்து 6 காவலர்கள் காணொலியில் ஆஜர்!
மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு: சிறையில் இருந்து 6 காவலர்கள் காணொலியில் ஆஜர்!
சிவகங்கை பெண்களுக்கு முக்கிய செய்தி... உங்கள் தோழிகளுக்கு இந்த செய்தி முக்கியமாக இருக்கலாம் !
சிவகங்கை பெண்களுக்கு முக்கிய செய்தி... உங்கள் தோழிகளுக்கு இந்த செய்தி முக்கியமாக இருக்கலாம் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Embed widget