மதுரை பாஜக பொதுக்கூட்டம்: மோடி இரட்டை விரல் புகைப்படம் மாற்றம்.. அரசியல் காரணம்!
அரசியல் ரீதியாகத் தவறான புரிதலை ஏற்படுத்தக்கூடும் என்பதால், முன்னெச்சரிக்கையாக அது மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மதுரை பாஜக பொதுக்கூட்டம்: திடீரென மாற்றப்பட்ட பிரதமர் மோடியின் புகைப்படம்.
பிரதமர் மோடி போஸ்டர்
மதுரையில் இன்று (மார்ச் 1, ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெறவுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணிக் (NDA) பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுது.
இரண்டு விரல் - வெற்றிச்சின்னம்
மேடையில் வைக்கப்பட்டிருந்த பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் திடீரென மாற்றப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. கூட்டத்திற்காக அமைக்கப்பட்டிருந்த மேடையின் பின்னணியில், முதலில் பிரதமர் மோடி தனது இரண்டு விரல்களை உயர்த்தி 'வெற்றிச் சின்னம்' (Victory Sign) காண்பிப்பது போன்ற புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், மாலை கூட்டம் தொடங்குவதற்கு முன்பே அந்தப் புகைப்படம் திடீரென அகற்றப்பட்டு, அதற்குப் பதிலாக பிரதமர் மோடி கைகூப்பி 'வணக்கம்' செலுத்துவது போன்ற புதிய புகைப்படம் சில் மணி நேரத்திற்கு முன் அங்கு மாற்றப்பட்டுள்கூறப்படுகிறது.
சுவாரசியம்
இந்தத் திடீர் மாற்றத்திற்குப் பின்னணியில் ஒரு சுவாரசியமான அரசியல் காரணம் சொல்லப்படுகிறது. பிரதமர் மோடி காட்டிய இரண்டு விரல்கள் (Victory Sign), தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியான அதிமுகவின் 'இரட்டை இலை' சின்னத்தை நேரடியாக நினைவுபடுத்துவது போல் இருப்பதாகக் கருதப்படுகிறது. தற்போது அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள நிலையில், அந்தச் சின்னத்தை அடையாளப்படுத்துவது போன்ற புகைப்படம் இடம்பெறுவது அரசியல் ரீதியாகத் தவறான புரிதலை ஏற்படுத்தக்கூடும் என்பதால், முன்னெச்சரிக்கையாக அது மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது























