மேலும் அறிய

திமுக-காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை: திருமாவளவன் பரபரப்பு கருத்து! அதிமுக-பாஜக உறவில் அதிர்ச்சி தகவல்?

சன்பரிவார்களின் கனவு தமிழ்நாட்டில் பலிக்காது. திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றமாகத்தான் இருக்குமே தவிர ஒரு காலத்திலும் அது அயோத்தியாக மாற தமிழக மக்கள் இடம் கொடுக்க மாட்டார்கள்.

திண்டுக்கல் வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு அக்கட்சியின் சார்பாக வரவேற்பு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், திமுக காங்கிரஸ் இடையே நடைபெறும் பேச்சு வார்த்தை நல்லபடியாக முடியும் சுமூகமாக முடியும் என்று நம்புகிறேன். 3 மணி நேரமாக பேச்சு வார்த்தை நடக்கிறது என்று சொன்னால் திமுகவுக்கு முன் காங்கிரசுக்கு இடையில் நல்ல இணக்கமான ஒரு சூழல் நிலவுகிறது என்றுதான் பொருள்.


திமுக-காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை: திருமாவளவன் பரபரப்பு கருத்து! அதிமுக-பாஜக உறவில் அதிர்ச்சி தகவல்?

பெரியார் படத்தை அகற்ற தான் செய்வார்கள். அண்ணா படம் ஜெயலலிதா அம்மையார் படம் போன்றவற்றையும் அவர்கள் அகற்றாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதுதான், மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாம் வைக்கும் கோரிக்கையாகும். மதுரை தமிழ்நாட்டில் இருக்கிறது, உத்தர பிரதேசத்தில் இல்லை. வட இந்தியாவில் இல்லை ஆகவே, சன்பரிவார்களின் கனவு தமிழ்நாட்டில் பலிக்காது. திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றமாகத்தான் இருக்குமே தவிர ஒரு காலத்திலும் அது அயோத்தியாக மாற தமிழக மக்கள் இடம் கொடுக்க மாட்டார்கள்.

முருக தரிசனம் அவருக்கு நல்வழி காட்டுவதாக அமைய வேண்டும். குறிப்பாக தமிழ்நாட்டில் மதவாத அரசியலுக்கு இடமில்லை. சமூக நல்லிணக்கத்திற்கு தான் இடம் உண்டு அதுதான் முருகனுடைய வாழ்க்கையும் அவருடைய வரலாறும் நமக்கு உணர்த்துகிற பாடம்.  பிரதமர் அவர்கள் திருமுருகனை தரிசிக்க உள்ள சூழலில் இந்த வாழ்வியல் உண்மையை அவருக்கு முருகன் உணர்த்துவார் என்று நம்புகிறேன். தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழு விரைவில் அறிவிக்கப்படும். விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆளும் கட்சி அல்ல. துடிக்கிற இடத்திலும் இல்லை எனவே நாங்கள் அறிக்கையை நிதானமாக தயாரித்து தமிழக மக்களிடத்தில் சமர்ப்பிப்போம். அது தமிழ்நாட்டு மக்களின் நலன்களை மையமாகக் கொண்டதாக இருக்கும்.


திமுக-காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை: திருமாவளவன் பரபரப்பு கருத்து! அதிமுக-பாஜக உறவில் அதிர்ச்சி தகவல்?

தேர்தல் ஆணையம் பானை சின்னத்தை ஏற்கனவே ஒதுக்கி இருக்கிறது. நாங்கள் அங்கீகாரம் பெற்ற ஒரு மாநில கட்சி என்கிற நிலையில் தேர்தல் ஆணையம் எங்களுக்கு பானை சின்னத்தை அதிகாரப்பூர்வமாக ஒதுக்கி இருக்கிற காரணத்தினால் இப்போது சின்னம் குறித்து எந்த சிக்கலும் எங்களுக்கு இல்லை. இந்த தேர்தலை பொருத்தவரையில் நாங்கள் சொந்த சின்னத்தில் தான் போட்டியிட இருக்கிறோம். தொகுதிகள் எத்தனை என்பது பேச்சுவார்த்தைக்கு பிறகு உங்களுக்கு அறிவிக்கப்படும்.

எடப்பாடி அதற்கு இடம் கொடுக்க மாட்டார் என்று தான் எல்லோரும் நினைக்கிறோம். பாஜக, அதிமுகவோடு அத்தகைய உடன்பாட்டை செய்து இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால், பாஜக மாநில தலைவர் பாஜகவில் இருந்து அமைச்சர்கள் உருவாகும் என்று அண்மையிலே கூறி இருப்பது அதிர்ச்சிகரமான ஒன்றாக தான் இருக்கிறது. அவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நெருக்கடியை தருகிறாரா அல்லது உண்மையிலேயே திரைமறைவில் பேசப்பட்ட உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறாரா என்று தெரியவில்லை பார்ப்போம். மோடி அவர்களும், அமிஷா அவர்களும் வருகை தருவது ஒன்றும் புதிது அல்ல. அடிக்கடி அவர்கள் ஒவ்வொரு தேர்தலின் போதும் வந்திருக்கிறார்கள். ஒவ்வொரு தேர்தலின் போதும் பல உறுதிமொழிகளை தந்திருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் இதுவரை அவர்கள் எதிர்பார்த்த எதுவும் நடக்கவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. இந்த தேர்தலிலும் அவர்கள் எத்தனை முறை இங்கே வந்து போனாலும் அவர்கள் எதிர்பார்ப்பது நிறைவேறப்போவதில்லை.

நிதீஷ் குமார் அவர்களை பாரதிய ஜனதா கையாண்டதை போல தமிழ்நாட்டில் அதிமுகவால் அது திமுகவையோ அல்லது எளிதாக கையாண்டு விட முடியாது. அதிமுக நமக்கு மாறுபட்ட கருத்தை கொண்டு இருந்தாலும், பாஜகவோடு கூட்டணி வைத்திருந்தாலும் அதற்கென்று ஒரு தனித்தன்மை இருக்கிறது. ஏனென்றால் அது ஒரு திராவிட இயக்கம் எனவே அவ்வளவு இலகுவாக பாஜகவால் அதிமுகவை விழுங்கி சிரித்து விட முடியாது என்று நான் நினைக்கிறேன்.


திமுக-காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை: திருமாவளவன் பரபரப்பு கருத்து! அதிமுக-பாஜக உறவில் அதிர்ச்சி தகவல்?

அது பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. அதிமுக என்று திரும்பத், திரும்ப வலியுறுத்திச் சென்றவர் தான் ஜெயலலிதா அம்மையார் அவருடைய விருப்பத்திற்கு மாறாக பாஜகவோடு அதிமுக கூட்டணி அமைத்தது தான் ஜெயலலிதா அம்மையாரின் முதுகில் குத்திய துரோக செயல்.

ஓபிஎஸ் பலமுறை அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு கோரிக்கை வைத்தார். தொடர்ந்து இணைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார் என்பதை நாடறியும் ஆனாலு,ம் ஓபிஎஸ் அவர்களை அதிமுக ஒரு கட்சியாகவோ நினைத்துக் கொள்ளவில்லை  அதிமுகவில் ஒரு உறுப்பினராக கூட அவரை இணைத்துக் கொள்ள தயாராக இல்லை என்கிற நிலையில் தான் அவர் இந்த முடிவை எடுக்க நேர்ந்தது. ஓபிஎஸ் இணைந்ததை மக்கள் வெளிப்படையாக பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.  அவர் செய்த செயல் அதிமுகவை பகைத்துக் கொண்டோம் என்கிற அடிப்படையில் அவர் பாஜகவில் போய் கரைந்து விடவில்லை மாறாக இன்னொரு திராவிட இயக்கமான திமுகவில் இணைந்து இருக்கிறார்.

தலைப்பு செய்திகள்

ஒட்டன்சத்திரம் அருகே ஒற்றை யானை உலா: மக்கள் பீதி, வனத்துறைக்கு அவசர கோரிக்கை!
ஒட்டன்சத்திரம் அருகே ஒற்றை யானை உலா: மக்கள் பீதி, வனத்துறைக்கு அவசர கோரிக்கை!
மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கில் தமிழ் மந்திரம்: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு செய்த நீதிமன்றம் !
மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கில் தமிழ் மந்திரம்: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு செய்த நீதிமன்றம் !
மதுரை வைகையை நாசமாக்கும் மருத்துவக் கழிவுகள்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
மதுரை வைகையை நாசமாக்கும் மருத்துவக் கழிவுகள்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
குற்ற வழக்கு நிலுவையில் இருப்பவர்கள் கபடி போட்டியில் பங்கேற்க தகுதியற்றவர்கள் - உயர்நீதிமன்ற கிளை !
குற்ற வழக்கு நிலுவையில் இருப்பவர்கள் கபடி போட்டியில் பங்கேற்க தகுதியற்றவர்கள் - உயர்நீதிமன்ற கிளை !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold rate today : தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
Police Bribe Complaint : போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Embed widget