மேலும் அறிய

பழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்: தைப்பூசத்திற்குப் பின்னும் தொடரும் கூட்டம்! குறவர் இனத்தவரின் சீர்வரிசை!

குறவர் இனத்தை சேர்ந்த வள்ளிக்கும்- முருகனுக்கும் திருமணம் நடைபெற்றதால் வள்ளியின் பிறந்தவீடான குறவர் இனமக்களின் சார்பில் தாய் வீட்டு சீதனம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அறுபடை வீடுகளில்  மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலில் மொட்டை எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் என  பக்தர்கள்  தங்கள் நேர்த்திக் கடன்கள் செலுத்தி வருகின்றனர். தமிழ்க்கடவுள் என்று அழைக்கப்படும் முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளது. இந்த அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு  தண்டாயுதபாணி திருக்கோயிலாகும் . இந்த கோயிலுக்கு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து தினந்தோறும் பக்தர்கள் அதிகமானோர் வருவதுண்டு. தமிழகத்தில் அதிகமான வருவாய் தரக்கூடிய ஒரே கோயில் பழனி முருகன் கோயில். இந்த கோயிலுக்கென பல்வேறு சிறப்புகள் உண்டு என்பதால் இங்கு வந்து வழிபட்டு செல்வோர்கள் தாங்கள் வேண்டிய நேர்த்திக்கடனை செலுத்துவதற்கு அதிகம் வருவர். அப்படி நேர்த்திக்கடன் செலுத்த வருவோர்கள் கிரிவலப்பாதையில் உருண்டு கொடுத்தல், மொட்டை அடித்தல், காவடி எடுத்தல், அலகு குத்துதல் போன்ற நேர்த்திக் கடன்களை செய்து வருகின்றனர்.

பழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்: தைப்பூசத்திற்குப் பின்னும் தொடரும் கூட்டம்! குறவர் இனத்தவரின் சீர்வரிசை!

மேலும் முருக பெருமானிற்கு உகந்த நாட்களான சஷ்டி, கிருத்திகை, பௌர்ணமி, மற்றும் வைகாசி விசாகம், சஷ்டி விரதம், தைப்பூசம், உள்ளிட்ட நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த வருட தைப்பூச திருவிழா கடந்த மாதம் தை 12 ( 26.01.26) கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், 31.01.26 ஆம் தேதி திருக்கல்யாணமும், 1.2.26 தை 18ம் தேதி தேரோட்டமும் நடைபெற்று முடிந்தது. தைப்பூசத்திருவிழா முடிவடைந்த பிறகும் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.  அதன்படி  இன்றும் பழனி முருகன் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

பழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்: தைப்பூசத்திற்குப் பின்னும் தொடரும் கூட்டம்! குறவர் இனத்தவரின் சீர்வரிசை!

இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. விடுமுறை காரணமாக தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து விளாபூஜை, சிறுகாலசந்தி பூஜை  நடைபெற்றது. அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் பொதுதரிசனம், சிறப்பு, கட்டணம் உள்ளிட்ட  அனைத்து தரிசன வழிகளிலும்‌ பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்களின் வசதிக்காக இயக்கப்படும் ரோப்கார் சேவை , மின் இழுவை ரயிலில்  பக்தர்கள் சுமார் மூன்று மணி நேரம் வரையிலும் தரிசனத்திற்கு 5மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம்  செய்து வருகின்றனர். அதேபோல படிப்பாதை ,யானை பாதை வழிகளிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது, பக்தர்கள் வருகை காரணமாக ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்த நிலையில், குறிப்பாக தமிழகத்திலிருந்து  குறவர் இன மக்கள் மற்றும் வனவேங்கைகள் கட்சியினர் சீர்வரிசை பொருட்களுடன் பழனி முருகன் கோயிலுக்கு  இன்று  வந்து சாமி தரிசனம் செய்தனர். பழனியில்  தைப்பூசத் திருவிழா விமர்சையாக நடைபெற்று முடிந்தது. தைப்பூசத் திருவிழாவின் போது  முத்துக்குமாரசாமி-வள்ளி,தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.  குறவர் இனத்தை சேர்ந்த வள்ளிக்கும்- முருகனுக்கும் திருமணம் நடைபெற்றதால் வள்ளியின் பிறந்தவீடான குறவர் இனமக்களின் சார்பில் தாய் வீட்டு சீதனம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்: தைப்பூசத்திற்குப் பின்னும் தொடரும் கூட்டம்! குறவர் இனத்தவரின் சீர்வரிசை!

தமிழகம் முழுவதும் உள்ள குறவர் இனமக்கள் அனைவரும் இணைந்து பழனி முருகனுக்கு சீர் கொண்டுசென்றனர். இதில் தேன், திணைமாவு,மா,பலா, வாழை உள்ளிட்ட பழங்கள், கிழங்குகள், வில்-அம்பு, ஆகியவை சீர்வரிசையில் வைத்து பெண்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று முருகனுக்கும் வள்ளிக்கும் சீதனமாக வழங்கினர் . மேளதாளம் முழங்க ஆடிப்பாடி வள்ளிக்கு சீர்வரிசை பொருட்களை கொண்டு சென்று பழனி கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்து முருகனை வழிபாடு செய்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

மதுரையில் தேர்தல் களம் சூடுபிடிக்கிறது.... பறக்கும் படை, துணை ராணுவம் தயார் ; | தேர்தல் அறிவிப்பு, கட்டுப்பாடுகள் முழு விவரம் !
மதுரையில் தேர்தல் களம் சூடுபிடிக்கிறது.... பறக்கும் படை, துணை ராணுவம் தயார் ; | தேர்தல் அறிவிப்பு, கட்டுப்பாடுகள் முழு விவரம் !
மதுரையில் பயங்கர தீ விபத்து: 30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்.. காரணம் என்ன?
மதுரையில் பயங்கர தீ விபத்து: 30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்.. காரணம் என்ன?
Madurai ; தமிழகத்தில் போதை கலாச்சாரம், சட்ட ஒழுங்கு சீர்கேடு: மருத்துவர் சரவணன் வேதனை!
Madurai ; தமிழகத்தில் போதை கலாச்சாரம், சட்ட ஒழுங்கு சீர்கேடு: மருத்துவர் சரவணன் வேதனை!
” குடும்ப மாண்பு முக்கியம்” - வைகோ பேச்சு! விஜய் குறித்த மறைமுக விமர்சனமா? விலைவாசி உயர்வு, ட்ரம்ப் பற்றி அனல் கக்கிய வைகோ!
” குடும்ப மாண்பு முக்கியம்” - வைகோ பேச்சு! விஜய் குறித்த மறைமுக விமர்சனமா? விலைவாசி உயர்வு, ட்ரம்ப் பற்றி அனல் கக்கிய வைகோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay CBI Investigation | 7 மணிநேர CBI விசாரணை HAPPY-ஆ வெளியே வந்த விஜய்! பாஜக-வுக்கு SUCCESSஆ ஏமாற்றமா?
Tamilnadu Election | அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள் கட்டுப்பாடுகள் என்னென்ன?
Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் கல்வி, சுகாதாரம் பெஸ்டா? டேட்டா சொல்வது இதுதான்!
அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் கல்வி, சுகாதாரம் பெஸ்டா? டேட்டா சொல்வது இதுதான்!
Netanyahu New Video: “நான் சாகவில்லை“; புரளிகளை போட்டு உடைத்த நெதன்யாகு; விரல்களை காட்டி வீடியோ வெளியீடு
“நான் சாகவில்லை“; புரளிகளை போட்டு உடைத்த நெதன்யாகு; விரல்களை காட்டி வீடியோ வெளியீடு
இந்துக்களுக்கு எதிரான கட்சியா திமுக? 5 ஆண்டுகளில் அறநிலையத்துறை செய்தது என்ன?
இந்துக்களுக்கு எதிரான கட்சியா திமுக? 5 ஆண்டுகளில் அறநிலையத்துறை செய்தது என்ன?
Assembly Election 2026: ஒரு மாசம்கூட இல்லயே.. கேரளா, பாண்டிச்சேரி, அசாமில் பதறும் அரசியல் கட்சிகள்!
Assembly Election 2026: ஒரு மாசம்கூட இல்லயே.. கேரளா, பாண்டிச்சேரி, அசாமில் பதறும் அரசியல் கட்சிகள்!
TN Election Date 2026: வெளியானது அறிவிப்பு; ஏப்.23 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்.. முடிவு எப்போ? தேதி குறித்த ஆணையம்
TN Election Date 2026: வெளியானது அறிவிப்பு; ஏப்.23 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்.. முடிவு எப்போ? தேதி குறித்த ஆணையம்
FASTag Annual Pass Fee Hike: போச்சு.! உயர்த்தப்பட்ட ஃபாஸ்டேக் பாஸ் கட்டணம்; எவ்வளவு.? எப்போதிலிருந்து தெரியுமா.? இத படிங்க முதல்ல
போச்சு.! உயர்த்தப்பட்ட ஃபாஸ்டேக் பாஸ் கட்டணம்; எவ்வளவு.? எப்போதிலிருந்து தெரியுமா.? இத படிங்க முதல்ல
மதுரையில் பயங்கர தீ விபத்து: 30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்.. காரணம் என்ன?
மதுரையில் பயங்கர தீ விபத்து: 30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்.. காரணம் என்ன?
Assembly Election 2026: வெளிப்படைத் தன்மையுடன் தேர்தல்; 30-க்கும் மேற்பட்ட முன்னெடுப்புகள்; தேர்தல் ஆணையத்தின் தலையாய முயற்சி
வெளிப்படைத் தன்மையுடன் தேர்தல்; 30-க்கும் மேற்பட்ட முன்னெடுப்புகள்; தேர்தல் ஆணையத்தின் தலையாய முயற்சி
Embed widget