மேலும் அறிய
Advertisement
"கொசு தொல்லை தாங்க முடியவில்லை" - ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ வேதனை
தமிழகம் முழுவதும் கொசு தொல்லை தாங்க முடியவில்லை எனவும், என் வீட்டுக்கே பெரிய பெரிய கொசு வருவதால், இரவு தூங்க முடியவில்லை - எம்.எல்.ஏ., அய்யப்பன் வேதனை தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் நேற்று நகர் மன்ற உறுப்பினர்களின் அவசர கூட்டம் நகர் மன்ற தலைவர் சகுந்தலா, பொறுப்பு ஆணையாளர் பாண்டித்தாய் மற்றும் துணைத் தலைவர் தேன்மொழி தலைமையில் நடைபெற்றது.
#madurai | தமிழகம் முழுவதும் கொசு தொல்லை தாங்க முடியவில்லை எனவும் - என் வீட்டுக்கே பெரிய பெரிய கொசு வருவதால், இரவு தூங்க முடியவில்லை - என ஒபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன் வேதனை தெரிவித்துள்ளார்.#usilampatti | |. #கொசு | #TamilNadu | @ThanniSnake | @OfficeOfOPS | @OPRavindhranath pic.twitter.com/HmdSAquAA8
— arunchinna (@arunreporter92) December 1, 2022
நகர் மன்ற கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக ஓ.பி.எஸ்., ஆதரவு எம்.எல்.ஏ-வான உசிலம்பட்டி எம்.எல்.ஏ அய்யப்பன் கலந்து கொண்டார். உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வெடி வெடிக்கவும், பேனர்கள் வைக்கவும் ஏற்கனவே உள்ள தடையை அமல் படுத்தவும், மீறுவோர் மீது 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்க வேண்டும் என நகராட்சி கவுன்சிலர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. தொடர்ந்து நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகராட்சி கூட்டுக் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகளை விரைவு படுத்துவது உள்ளிட்ட 52 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து பேசிய உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன்., தமிழகம் முழுவதும் கொசு தொல்லை தாங்க முடியவில்லை எனவும், எனது வீட்டுக்கே பெரிய பெரிய கொசுக்கள் வருகின்றன. அதனால் இரவில் தூங்க முடியாத நிலை உள்ளதாகவும், ஆல் அவுட் போட்டாலும் மூச்சு திணறல் ஏற்படுகிறது எனவே நகராட்சி நிர்வாகம் நடவடிக்கைகள் எடுத்து கொசுக்களை கட்டுப்படுத்த வேண்டும் என வேதனை தெரிவித்தார். தொடர்ந்து உசிலம்பட்டி நகர் பகுதிகளில் பட்டாசு வெடிப்பதால் நானே பாதிக்கப்பட்டுள்ளேன், சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி தயவு ஏதும் பார்க்காமல் அபராதம் விதித்து பட்டாசு வெடிப்பதை தடுக்க வேண்டும் என என எம்எல்ஏ அய்யப்பன் கேட்டுக் கொண்டார்.
மேலும் செய்திகள் படிக்க - மதுரை: இலவச அனுமதி.. மன்னர் திருமலை நாயக்கர் மஹாலுக்கு படையெடுத்த பொதுமக்கள்..
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Pugar Petti: மதுரை யானைமலை அடிவாரத்தில் மலையாய் குவியும் குப்பைகள்; உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கைகள் எடுக்குமா?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
விழுப்புரம்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion