மேலும் அறிய

Chandra Grahan Time: இன்று மாலை ரத்த நிலவு! சந்திர கிரகணம் எப்போது, எங்கே, எப்படி பார்க்கலாம்? முழு வழிகாட்டி!

Chandra Grahan Timing 2026: இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று மாலை தோன்ற உள்ள நிலையில், சந்திர கிரகணத்தை எப்போது, எங்கே, எப்படி பார்க்கலாம்? இதோ முழு தகவல்

Chandra Grahan 2026: வானில் நிகழும் நிழல் விளையாட்டான இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று மாலை 6 மணி வாக்கில் தோன்ற உள்ளது. இந்த ரத்த நிலவு 6.48 மணி வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சந்திர கிரகணம் என்பது பூமி, சூரியன் மற்றும் சந்திரன் நேர்கோட்டத்தில் வரும்போது பூமியின் நிழல் சந்திரனை முழுமையாக மறைப்பதால் நிகழும் நிகழ்வு ஆகும்.

சந்திர கிரகணத்தை பொறுத்தவரை மூன்று வகைப்படும். முழு சந்திர கிரகணம், பகுதி சந்திர கிரகணம், புற நிழல் சந்திர கிரகணம் ஆகும். அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெறும் முதல் சந்திரக் கிரகணம் முழு சந்திர கிரகணமாகும். இந்த நேரத்தில் சந்திரன் வெள்ளையிலிருந்து சிவப்பு/ ரத்த நிறமாக (“Blood Moon”) தோன்றும்.

சந்திர கிரகணம் என்றால் என்ன?

சூரியன் - பூமி - சந்திரன் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும்போது, சூரிய ஒளி நிலவில் படாது. அந்த நிகழ்வே சந்திர கிரகணம் ஆகும். நடப்பாண்டின் முதல் சந்திர கிரகணம் வரும் இன்று நிகழவுள்ளது. சூரியனின் கதிர்கள் பூமியில் விழும்போது, அதன் நிழல் நிலவின் மீது விண்வெளியில் விழுகிறது. சந்திரன் நிழலின் திட்டுக்குள் நுழையும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

நிழலின் இணைப்பு உண்மையில் இரண்டு கூம்பு வடிவ பகுதிகளால் ஆனது - ஒன்று மற்றொன்றுக்குள் அமைந்துள்ளது. பூமி அதன் நிழலை சந்திரனில் செலுத்தும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்த நிழலில் அம்ப்ரா மற்றும் பெனும்ப்ரா எனப்படும் இரண்டு வகையான நிழல்கள் உள்ளன. சந்திரன் முழுமையாக அம்ப்ரா வழியாகச் செல்லும்போது அல்லது சூரியன், பூமி மற்றும் சந்திரன் சரியாக சீரமைக்கப்படும்போது  முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது. சந்திரன் ஓரளவு அம்ப்ரா மற்றும் பெனும்ப்ரா வழியாக கடக்கும்போது பூமியில் பகுதி சந்திர கிரகணம் ஏற்படுகிறது.


Chandra Grahan Time: இன்று மாலை ரத்த நிலவு! சந்திர கிரகணம் எப்போது, எங்கே, எப்படி பார்க்கலாம்? முழு வழிகாட்டி!

புறநிழல் சந்திர கிரகணம் என்றால் என்ன ?

சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியவை சரியான நேர்கோட்டில் அமையாமல் இருக்கும் போது புறநிழல் சந்திர கிரகணம் நிகழும். பூமி தனது வெளிப்புற நிழலின் மூலம் சூரியனின் ஒளி நேரடியாக சந்திரனை சென்றடைவதை தடுக்கும், இது புறநிழல் என அழைக்கப்படுகிறது. பூமியின் நிழலின் இருண்ட மையத்தை விட புறநிழல் மிகவும் மங்கலானது என்பதால், புறநிழல் சந்திர கிரகணத்தை சாதாரண முழு நிலவிலிருந்து வேறுபடுத்துவது கடினம். பூமியின் நிழலின் மங்கலான, வெளிப்புறப் பகுதி வழியாக சந்திரன் நகரும்போது, பூமியிலிருந்து ஒரு புறநிழல் சந்திர கிரகணத்தைக் காண முடியும்.

ரத்த நிலவு என்பது?

ஒவ்வொரு மாதமும் சந்திரன் ஒரு நீள்வட்ட சுற்றுப்பாதையில் அல்லது ஒரு நீளமான வட்டத்தில் பூமியைச் சுற்றிச் செல்லும்போது, சந்திரன் பெரிஜீ (பூமிக்கு மிக நெருக்கமான புள்ளி) மற்றும் அபோஜீ (பூமியிலிருந்து வெகு தொலைவில் உள்ள புள்ளி) வழியாக செல்கிறது.


Chandra Grahan Time: இன்று மாலை ரத்த நிலவு! சந்திர கிரகணம் எப்போது, எங்கே, எப்படி பார்க்கலாம்? முழு வழிகாட்டி!

சந்திரன் பூமிக்கு மிக அருகில் இருக்கும்போது அல்லது அதற்கு அருகில் இருக்கும்போது, அதுவும் முழு நிலவாக இருப்பதலும், அது “சூப்பர் மூன்” என்று அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வின் போது, முழு நிலவு வழக்கத்தை விட நமக்கு சற்று நெருக்கமாக இருப்பதால், அது குறிப்பாக பெரியதாகவும் வானத்தில் பிரகாசமாகவும் தோன்றுகிறது.

சூரிய ஒளி பூமியின் காற்று மண்டலத்தில் பட்டுச் சிதறுவதால் சிவப்பு நிற அலைவரிசை, நிலவின் மேற்பரப்பில் பட்டுப்பிரதிபலிக்கும். அதனால் ஆரஞ்சு நிறத்திலிருந்து ரத்தச் சிவப்பு வரையிலான நிறங்களில் நிலா தெரியும். இதனால் ரத்த நிலா என அழைக்கப்படுகிறது. ஆகவே சந்திர கிரகணத்திற்கு பின்னர் நிலவு ரத்த சிவப்பு நிறத்தில் இருக்கும்.வழக்கத்தை விட மிகவும் பிரகாசமாக ஜொலிக்கும். இதனை ஆங்கிலத்தில் Blood Moon என்று அழைக்கின்றனர். இதனை வெறும் கண்களால் பார்க்க முடியும் என்பது மகிழ்ச்சியான செய்தியாகும்.

 எப்போது பார்க்கலாம்? தேதி & நேரம் | Chandra Grahan 2026 Time Start and End

 தேதி: 3 மார்ச் 2026 (செவ்வாய்க் கிழமை)

 கிரகணம் தொடக்கம்: முதல் பகுதி ~ 3:20 மாலை

 முழு கிரகணம் (Totality): 4:34 மாலை – 5:32 மாலை

கிரகணம் முடிவு: 6:48 மாலை வரை (இந்த ஆண்டின் இந்த முழு சந்திர கிரகணம் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக நீடிக்கும்)

சென்னையில் பின் மாலை 6.17 மணி முதல் 6.27 வரை சந்திர கிரகணம் தெளிவாக, முழுமையாக தெரியும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 


Chandra Grahan Time: இன்று மாலை ரத்த நிலவு! சந்திர கிரகணம் எப்போது, எங்கே, எப்படி பார்க்கலாம்? முழு வழிகாட்டி!

இந்தியாவில் பார்க்க முடியுமா??

இந்தியாவின் பல பகுதிகளில் சந்திரன் உதயம் ஆகும்போது , கிரகணம் நடைபெறும். அதனால் மொத்த கிரகணத்தை முழுமையாகப் பார்க்க முடியாது. ஆனால்:

வடகிழக்கு மாநிலங்கள் (அசாம், அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, மேற்கு வங்கம்) – முழு கிரகணத்தை சில நிமிடங்கள் அல்லது அதன் கிரகண முடிவின் போது பார்க்க முடியும். முழு சந்திர கிரகணத்தை இன்று (3.3.2026)  மாலை 5.02 மணிக்கு ஆரம்பித்து 05.32 மணி வரை பார்க்கலாம்.

மத்திய/மேற்கு/தெற்கு பகுதிகள்– சந்திரன் தெரிய வரும் போது ,கிரகணம் முடிவிற்கு அருகில் இருக்கும்.அதனால் புற நிழல் சந்திர கிரகணத்தை மட்டும் காண முடியும்.

 பார்க்கும் வழிமுறைகள்

  • எந்தவிதக் கண்ணாடியும் தேவையில்லை – சந்திர கிரகணத்தை நேரடியாகவும் பாதுகாப்பாகவும் பார்க்கலாம்.
  • மேகம் இல்லாத தெளிவான வானத்தைத் தேர்ந்தெடுத்து கிழக்கு திசையை நோக்கி பாருங்கள்.
  • தொலைநோக்கி அல்லது பைனாகுலர் மூலம் தெளிவாக பார்க்கலாம்.
  • நீங்கள் மேகம் இல்லாத தெளிவான வானத்தைப் பார்த்தால் இரத்த நிறத்தில் (Blood Moon) போன்ற நிலா தோற்றத்தை காணலாம்.

இந்நிகழ்வு வானில் நிகழும் ஒரு நிழல் விளையாட்டு. ஆகவே வெறும் கண்களால் நாம் பார்க்கலாம். இதன் மூலம் பள்ளி மாணவர்கள் இடையே வானவியல் சார்ந்த ஒரு விழிப்புணர்வையும் அவர்களின் சிந்தனையையும் தூண்ட முடியும் என்று உடுமலை கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் தெரிவித்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Embed widget