மேலும் அறிய

நாங்குநேரி கொடூர சம்பவத்துக்கு இதன் வெறித்தனமே காரணம் - அன்புமணி சொல்லும் காரணங்கள்

நாங்குநேரி அருகே பெட்ரோல் குண்டு வீசி, அரிவாளால் வெட்டி இருவர் படுகொலை: கஞ்சா சாம்ராஜ்யத்தை திமுக அரசு கட்டியெழுப்பியதன் தீய விளைவு!

நாங்குநேரி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை அடுத்த பெரும்பத்து கிராமத்தில் கஞ்சா போதையில் 9 பேர் கொண்ட கும்பல் நடத்திய வன்முறை வெறியாட்டத்தில் இரு அப்பாவிகள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அப்பாவி மக்களின் உயிர்களுக்குக் கூட பாதுகாப்பு வழங்குவதற்கு துப்பற்ற நிலையில் திமுக அரசு முடங்கிக் கிடப்பது கண்டிக்கத்தக்கது. நாங்குநேரியை அடுத்த கடம்போடு வாழ்வு என்ற கிராமத்திற்கு நேற்றிரவு வந்த அந்த கஞ்சா போதை கும்பல், அவ்வழியே இரு சக்கர ஊர்தியில் சென்ற இருவரை அரிவாளால் வெட்டியதுடன், அவர்களின் இரு சக்கர ஊர்தியையும் பறித்துக் கொண்டு பெரும்பத்து கிராமத்திற்கு சென்றது, அங்குள்ள தேனீர் கடை மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது. அதற்கு பயந்து தப்பி ஓடிய பொதுமக்களை அரிவாளால் வெட்டியுள்ளது. இந்தத் தாக்குதலில் ஜான் என்ற மாற்றுத்திறனாளியும், வட இந்தியத் தொழிலாளர் ஒருவரும் கொல்லப்பட்டனர். அங்கிருந்து புளியங்குளம் கிராமத்துக்குச் சென்ற கும்பல் அங்குள்ள மக்களையும் சரமாரியாக வெட்டியுள்ளது. அரை மணி நேரத்திற்கும் மேலாக இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ள நிலையில், தாக்குதலைத் தடுக்கவோ, கஞ்சா போதைக் கும்பலை கைது செய்யவோ காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தத் தாக்குதலுக்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியாத நிலையில், கஞ்சா போதையில் ஏற்பட்ட வெறித்தனம் தான் இந்தகைய கொடூரத் தாக்குதலை நடத்த அந்தக் கும்பலைத் தூண்டியுள்ளது என்பது மட்டும் அப்பட்டமாகத் தெரிகிறது.

தமிழ்நாட்டில் அனைத்து கிராமங்களிலும் கஞ்சா தடையின்றி கிடைப்பது தான் இத்தகைய கொலைவெறித் தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கு காரணம் ஆகும். இதைக் கூட தடுப்பதற்கு வக்கற்ற திமுக அரசு அதற்காக வெட்கித் தலைகுனிய வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கஞ்சா போதையைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதன் விளைவாக தமிழ்நாட்டில் ஆண்டுக்கு குறைந்தது 22 லட்சம் கிலோ கஞ்சா வணிகம் செய்யப்படும் நிலை உருவாகியிருக்கிறது. காவல்துறையை வலுப்படுத்த வேண்டிய திமுக அரசு, அதை செய்யாமல் கஞ்சா சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பியதன் தீய விளைவு தான் இத்தகைய தாக்குதல் ஆகும். இதற்கு காரணமான திமுக வுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் மறக்க முடியாத பாடம் புகட்டுவார்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறை: சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக அரசுப் பேருந்து - நெகிழ்ச்சியில் கிராம மக்கள்!
மயிலாடுதுறை: சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக அரசுப் பேருந்து - நெகிழ்ச்சியில் கிராம மக்கள்!
TVK Candidate List: 2 தொகுதிகளில் விஜய் போட்டியா? தவெக தலைவர்கள் களமிறங்கும் இடங்கள் இதானா?
TVK Candidate List: 2 தொகுதிகளில் விஜய் போட்டியா? தவெக தலைவர்கள் களமிறங்கும் இடங்கள் இதானா?
மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில்.. நிகிதா நகை தொலைந்தது தொடர்பாக சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கு புஸ்ஸானது !
மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில்.. நிகிதா நகை தொலைந்தது தொடர்பாக சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கு புஸ்ஸானது !
TN Election Rewind: ஜெயலலிதாவையே தோற்கடித்த பர்கூர்.. அதிமுகவை அலறவிட்ட 1996 சட்டமன்ற தேர்தல்!
TN Election Rewind: ஜெயலலிதாவையே தோற்கடித்த பர்கூர்.. அதிமுகவை அலறவிட்ட 1996 சட்டமன்ற தேர்தல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா
ஜனநாயகன் ரிலீஸ் தேதி ரசிகர்களுக்கு GOOD NEWS குறுக்க இந்த தேர்தல் வந்தா...

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Candidate List: 2 தொகுதிகளில் விஜய் போட்டியா? தவெக தலைவர்கள் களமிறங்கும் இடங்கள் இதானா?
TVK Candidate List: 2 தொகுதிகளில் விஜய் போட்டியா? தவெக தலைவர்கள் களமிறங்கும் இடங்கள் இதானா?
LPG Gas Bengaluru: கேஸ் தட்டுப்பாடு: முடங்கும் உணவகங்கள்! கர்நாடகாவைத் தொடர்ந்து தமிழகத்திற்கும் ஆபத்தா?
LPG Gas Bengaluru: கேஸ் தட்டுப்பாடு: முடங்கும் உணவகங்கள்! கர்நாடகாவைத் தொடர்ந்து தமிழகத்திற்கும் ஆபத்தா?
Bike Taxi Ban: ஓலா, உபர், ராபிடோ பைக் டாக்சி சேவைக்கு தடை! அரசின் அதிரடி முடிவு! காரணம் என்ன?
Bike Taxi Ban: ஓலா, உபர், ராபிடோ பைக் டாக்சி சேவைக்கு தடை! அரசின் அதிரடி முடிவு! காரணம் என்ன?
BJP on TVK Vijay: கூட்டணிக்கு வரும் தவெக? ஓபிஎஸ் முடிவு சாபமா? குழாயடி சண்டை, கூட்டணி மாற்றம்: பாஜக பரபர!
BJP on TVK Vijay: கூட்டணிக்கு வரும் தவெக? ஓபிஎஸ் முடிவு சாபமா? குழாயடி சண்டை, கூட்டணி மாற்றம்: பாஜக பரபர!
Sanju Samson:
Sanju Samson: "இது ஒரு கனவு!" வலிகளே எனது பலம்.. உலகக்கோப்பை வெற்றிக்குப் பின் சஞ்சு சாம்சன் உருக்கம்
Kadaga Rasi Sani Peyarchi Palan: கடக ராசிக்காரர்களே! சனிப்பெயர்ச்சியால் உங்கள் வாழ்க்கையில் இதெல்லாம் நடக்கப்போது!
Kadaga Rasi Sani Peyarchi Palan: கடக ராசிக்காரர்களே! சனிப்பெயர்ச்சியால் உங்கள் வாழ்க்கையில் இதெல்லாம் நடக்கப்போது!
MP-க்களான அன்புமணி, எல்.கே.சுதீஷ்; 6 பேர் போட்டியின்றி தேர்வு- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
MP-க்களான அன்புமணி, எல்.கே.சுதீஷ்; 6 பேர் போட்டியின்றி தேர்வு- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
BJP on TVK Vijay: விஜய்க்கு தங்கம் விலை தெரியுமா? டிவியை உடைத்தவர் இலவசங்கள் வாக்குறுதி தருவதேன்?- பொளந்த பாஜக!
BJP on TVK Vijay: விஜய்க்கு தங்கம் விலை தெரியுமா? டிவியை உடைத்தவர் இலவசங்கள் வாக்குறுதி தருவதேன்?- பொளந்த பாஜக!
Embed widget