மேலும் அறிய

திண்டுக்கல்: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு! 21,419 மாணவர்கள் பங்கேற்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

மேல்நிலை இரண்டாம் ஆண்டு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு (arrear ) மாணவர்களுக்கான பொதுத்தேர்வில் 88 மையங்களில்  21401 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் இத்தேர்வினை 12 ம் வகுப்பில் 14062 மாணவர்கள் , திண்டுக்கல் கல்வி மாவட்ட அளவில் 51 தேர்வு மையங்களில் மாணவியர்கள் மற்றும் பழனி கல்வி மாவட்ட அளவில் 37 தேர்வு மையங்களில் 7357 மாணவ ,மாணவியர்கள் என மொத்தமாக 88 தேர்வு மையங்களில் 21,419 மாணவ ,மாணவியர்கள் தேர்வு எழுதுகின்றனர். இதில் மாணவர்கள் எண்ணிக்கை 11,457 மற்றும் மாணவியர் எண்ணிக்கை 9962 ஆகும் . இத்தேர்விற்காக மாவட்ட அளவில் 6 வினாத்தாள் கட்டுப்பாட்டு மையம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது மற்றும் 4 விடைத்தாள் சேகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

திண்டுக்கல்: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு! 21,419 மாணவர்கள் பங்கேற்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

எட்டுத் தேர்வு மையங்கள் தனித்தேர்வர்களுக்கான மையமாகச் செயல்படுகிறது. இத்தேர்வு மையங்களில் 585  பேர் தேர்வு எழுதுகின்றனர். இத்தேர்வில் 184 (PWD CANDIDATES) தேர்வர்கள் கூடுதல் சலுகை நேரம் கோரி விண்ணப்பித்து உள்ளனர் மற்றும் 154 (SCRIBE CANDIDATES) தேர்வர்கள் சொல்வதை எழுதுபவர் கோரி விண்ணப்பித்து உள்ளனர். சொல்வதை எழுதுபவராக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு சிறப்பாசிரியர்கள் மூலம் பயிற்சி ஏற்பாடுகளும் வழங்கப்பட்டு இத்தேர்வர்களுக்குத் தேவையான அனைத்து செய்யப்பட்டு உள்ளது. அனைத்து தேர்வு மையங்களிலும் கட்டுப்பாட்டு அறையில் இந்த ஆண்டு கண்காணிப்பு கேமரா தேர்வு மையங்களில் பொருத்தப்பட்டு பாதுகாப்பான முறையில் அரசுத்தேர்வுகள் இயக்குநர் அவர்களின் தேர்வு வழிகாட்டி நெறிமுறைகள் சார்ந்து தேர்வுப்பணியில் ஈடுபடும் அனைத்து தலைமையாசிரியர்கள் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இணை இயக்குநர் (மேநிக) தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டு தேர்வு நடைமுறைகள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டு உள்ளது.

திண்டுக்கல்: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு! 21,419 மாணவர்கள் பங்கேற்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

இத்தேர்வினை நன்முறையில் நடத்த மாவட்டஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்ட நிர்வாகத்தின் பிற துறைகளும் இணைந்து தேர்வர்களுக்குத் தேவையானப் போக்குவரத்து வசதி, அவசரகால மருத்துவ உதவி தடையில்லா மின்சார வசதிதீத்தடுப்பு வசதி, சுகாதரம் மற்றும் குடிநீர் வசதி போன்றஅடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. தேர்வர்கள் பாதுகாப்பான முறையில் தேர்வு எழுத ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் மாணவிகளுக்கு முதல் உதவி சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்களும் தேர்வு மையங்களில் வைக்கப்பட்டுள்ளது. மந்தனக்கட்டுக்கள் காவல்துறை பாதுகாப்புடன் தேர்வு மையங்களுக்கு வழித்தடங்களில் வழித்தட அலுவலர்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட்டு ஒவ்வொரு தேர்வு மையமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பள்ளிக்கல்வித்துறை கண்காணிப்பு அலுவலராக உள்ள இணை இயக்குநர் (மேல்நிலை ) மற்றும் முதன்மைக்கல்வி அலுவலர் தலைமையில் மாவட்டக்கல்வி அலுவலர்கள் அரசுத்தேர்வுகள் உதவி இயக்குநர் இணைந்து அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வுப்பணிகள் நன்முறையில் செயல்பட கண்காணித்து வருகின்றனர். மேலும் நிலையான படை உறுப்பினராக 190 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இத்தேர்விற்காக மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் முதுகலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்கள் என மொத்தமாக 1,540 பேர் இத்தேர்வுப்பணியில் ஈடுபட்டு உள்ளனர். அனைத்து தேர்வு மையங்களிலும் உள்ள தேர்வர்கள் அனைவரும் தேர்வினைச் சிறப்பாக எழுத மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது.

தலைப்பு செய்திகள்

மதுரை வடக்கு எம்எல்ஏ அதிரடி: அரசுத்துறையிலும் லஞ்சம் கேட்டால் உடனடியாக தெரிவிக்கலாம் என புகார் எண் அறிவிப்பு !
மதுரை வடக்கு எம்எல்ஏ அதிரடி: அரசுத்துறையிலும் லஞ்சம் கேட்டால் உடனடியாக தெரிவிக்கலாம் என புகார் எண் அறிவிப்பு !
Gen Z மனநிலை புரியவில்லை: பிரதமரை ரீல்ஸ் போட வைத்த புரட்சி - திருமாவளவன் !
Gen Z மனநிலை புரியவில்லை: பிரதமரை ரீல்ஸ் போட வைத்த புரட்சி - திருமாவளவன் !
சிவகங்கையில் அரிய 16ஆம் நூற்றாண்டு வாணாதிராயர் கல்வெட்டு கண்டெடுப்பு: புதைந்த ரகசியம்!
சிவகங்கையில் அரிய 16ஆம் நூற்றாண்டு வாணாதிராயர் கல்வெட்டு கண்டெடுப்பு: புதைந்த ரகசியம்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
Embed widget