மேலும் அறிய

அதிமுக 'பாஸ்' - NDA கூட்டணி: OPS அரசியல் எதிர்காலம் அஸ்தமனம் - செல்லூர் ராஜு கடுகடு பேச்சு !

NDA கூட்டணி என்பது அதிமுக தலைமை தாங்கும் கூட்டணிதான் அ.தி.மு.க "பாஸ்" - OPS அரசியல் வாழ்க்கை அஸ்தமனம் ஆகிவிட்டது செல்லூர் ராஜூ பேட்டி.

மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட கோவில் பாப்பாகுடி ஊராட்சியில் ரூ.16 லட்சத்தில் கழிவுநீர் வடிகால் கால்வாய் கட்டுவதற்கான பூமி பூஜை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜு பேசியதாவது: சட்மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி மூலம் கோவில் பாப்பாகுடி பகுதியில் ரூ.16 லட்சத்தில் புதிய கழிவுநீர் கால்வாய் அமைக்க பூமி பூஜை செய்துள்ளோம். தி.மு.க.,வினருக்கு தேர்தல் பயம் வந்து விட்டது. அதனால் பொதுமக்களுக்கு பல்வேறு பணப்பலன்களை அள்ளி வீசி வருகின்றனர். அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் மாதிரி முதல்வருக்கு தோல்வி பயம் வந்ததால் தூக்கம் வராமல் தவித்து வருகின்றார். பொதுமக்களுக்கு இலவச பட்டா தருவதாக கூறிவிட்டு வெறும் பேப்பரை மட்டும் வழங்கி வருகின்றனர். தேர்தல் வருவதால் புதிய சாலைகள் அமைத்து வருகின்றனர். புதிய, புதிய திட்டங்களை அறிவிக்கின்றனர். தோல்வி பயம் வந்ததால் தான் கூட்டணி கட்சிகளை கூப்பிட்டு கூப்பிட்டு கூட்டணி கட்சி தலைவர்களிடம் பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றார் முதல்வர் ஸ்டாலின்.
 
NDA கூட்டணியில் இதுவரை தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறவில்லை
 
திமுக தில்மு, முல்லு கட்சி வளர்ச்சிக்கான கட்சி இல்லை தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை மக்கள் தான் தீர்மானிப்பர். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர், ஒதுக்கப்பட்டவர்கள். தற்போது திமுகவினர் அழைத்து பல்வேறு பதவிகளை வழங்கி வருகின்றனர். திமுகவில் பல சீனியர்கள் இருந்தும் அவர்களுக்கு பொறுப்பு தராமல் அதிமுகவிலிருந்து சென்றவர்களுக்கு பொறுப்பு தருவது திமுக கட்சியினரிடையே கலக்கத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது. NDA கூட்டணியில் இதுவரை தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. மதுரையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் பொதுமக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. வெயில் 108 டிகிரி அடித்தும் பொதுமக்கள் மதியம் 1 மணி முதல் மாலைவரை அமர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
 
NDA கூட்டணி ஆட்சியா, அதிமுக தலைமையிலான ஆட்சியா என்ற கேள்விக்கு:
 
NDA கூட்டணி என்றாலே அது அதிமுக தலைமையிலான ஆட்சி தான். NDA கூட்டணிக்கு அதிமுக தான் "பாஸ்" என்றார். தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை ஒரு பச்சோந்தி அவர், திமுக, விசிக, காங்கிரஸ் என பல கட்சிக்கு மாறியவர் திமுகவுக்கு விசுவாசி. திமுகவின் ஊதுகுலலாக செல்வபெருந்தகை செயல்படுகிறார்.
 
OPS அதிமுக படுதோல்வி அடையும் என OPS கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு:
 
OPS க்கு அரசியல் வாழ்க்கை அஸ்தமனம் ஆகிவிட்டது. அவரது எதிர்காலம் முடிந்து விட்டது. திமுகவில் சேர்ந்ததை பொதுமக்களே ஏற்றுக் கொள்ளவில்லை. இவரை போய் தமிழக மக்கள் முன்னால் முதல்வராக ஆக்கி இருந்தனர்களே என பொதுமக்களே வேதனை தெரிவிக்கின்றனர். அம்மா இருக்கும் போது சட்டசபையில் OPS எப்படி பேசினார். தற்போது எப்படி புகழ்ந்து பேசி வருகிறார். இனிமேல் அவருக்கு தோல்விதான். ஆரம்பத்திலிருந்தே OPS திமுகவை ஆதரித்து கொண்டு தான் இருந்தார். அதனால் எனக்கும் OPS க்கும் சண்டையே வந்தது. எல்லாத்தையும் சகித்து கொண்டு தான் அவரை கட்சியில் வைத்திருந்தோம். உசிலம்பட்டி MLA ஐயப்பனை பேச வைத்து பின்னர் அவருடனே ops திமுதலில் ஒடிவிட்டார்.
 
அதிமுகவில் சிறியதாக எது நடந்தாலும் அதை பெரிது படுத்துகின்றனர்
 
கலைஞர் ஆட்சியில் 2G ஊழல் செய்த போது பலர் கைதானதால் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது என கலைஞர் அறிவித்தார். ஆனால் இப்போது கூட்டணியில் தான் உள்ளனர். திமுக தான் காங்கிரசின் அடிமை கட்சி, திமுக காங்கிரஸ் கூட்டணி வைத்தால் நல்ல கூட்டணி, அதிமுக - பாஜக கூட்டணி வைத்தால் அது அடிமை கூட்டணியா? அதிமுகவில் சிறியதாக எது நடந்தாலும் அதை பெரிது படுத்தி ஊடகம் செய்தி வெளியிடுகிறது. திமுக பெரியதாக செய்தால் அதை சிறியதாக  செய்தி ஊடகம் வெளியிடுகிறது என தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

"விவசாயிகளை வஞ்சிக்கிறது அரசு" – தஞ்சாவூரில் சீறிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget