மதுரை: இலவச அனுமதி.. மன்னர் திருமலை நாயக்கர் மஹாலுக்கு படையெடுத்த பொதுமக்கள்..
உலக மரபு வார விழாவை முன்னிட்டு இலவச அனுமதி : மன்னர் திருமலை நாயக்கர் மஹாலில் குவிந்த பொதுமக்கள்.
தமிழ்நாடு வரலாற்றில் தனக்கென தனி முத்திரை பதித்த மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் கி.பி.1636-இல் கட்டிய மஹால், இன்றும் அவரது பெயரில் கம்பீரமாய் நாயக்கர் ஆட்சியின் கட்டடக் கலைக்கு சாட்சியாக நின்று கொண்டிருக்கிறது.
#madurai | நீண்ட வரிசையில் காத்திருந்து மன்னர் திருமலை நாயக்கர் அரண்மனை கட்டிடக்கலையை பார்த்து ரசித்து செல்லும் சுற்றுலா பயணிகள் மதுரைவாசிகள்.
— arunchinna (@arunreporter92) November 20, 2022
Further reports to follow - @abpnadu
| #மன்னர்திருமலைநாயக்கர் | @ThanniSnake | @SelenaHasma | @kathiravan_vk | @AruNSaSHa | @iHrithik pic.twitter.com/iB2ONsREWz
நூற்றாண்டுகளை கடந்த இந்த வரலாற்று பொக்கிஷம் அதிக அளவிலான மனித வருகையால் சிதிலமடைய துவங்கியது. குறிப்பாக கட்டடத்தை சுமந்து நிற்கும் 58 அடி உயரம் கொண்ட 248 தூண்களும், மேல் மாடமும் சேதம் மற்றும் விரிசல் அடையத்துவங்கின. இதைத் தொடர்து ஆசிய வங்கி உதவியுடன் 3 கோடி ரூபாய் செலவில் திருமலை நாயக்கர் மஹாலை புதுப்பிக்க முடிவு செய்தனர். கொரோனா முதல் அலையின் பொது ஊரடங்கு காரணமாக அப்பணி தாமதமான நிலையில் அதற்கு முன்பாக சிமெண்ட் மூலம் மேற்கொண்ட பணி பலனளிக்காததால், கட்டடம் கட்டப்பட்ட அதே முறையில் புதுப்பிக்க முயற்சி எடுக்கப்பட்டது பணிகள் முடிக்கப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்